Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இறையன்பு" கலக்கல்.. அட ஆமால்ல.. இந்த விஷயத்தை யாருமே கவனிக்கலையே? அதிகாரிக்கு பறந்த லெட்டர்.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பசுமையை முன்னிறுத்தி, தலைமை செயலர் முக்கிய அறிவுரையை கூறியிருந்த நிலையில், மற்றொரு விஷயத்தில் கவனம் செலுத்தி உள்ளார்.. இதுகுறித்து வீட்டுவசதி வாரிய செயலருக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

தமிழக அரசு சமீப காலமாகவே, அதிரடியாக அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.. துறை ரீதியான விஷயங்களில் தீவிர கவனத்தையும் மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், பசுமை மயானங்கள் விவகாரத்தையும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது.

அந்தவகையில் பசுமை மயானங்களாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் இறையன்பு 2 நாட்களுக்கு முன்புகூட கடிதம் எழுதியிருந்தார்.

Irai anbu IAS letter to housing department principal secretary apoorva

சுடுகாடுகள்: அந்த கடிதத்தில், பல இடங்களில் மயானங்கள் மற்றும் சுடுகாடுகள் அனைத்தும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. உயிரிழந்த மக்கள் உடல்களை மேலும் சிரமத்திற்கு ஆளாக்காத வகையில் மயானங்கள் பசுமையாக, தூய்மையாக, நேர்த்தியாக பராமரிக்கப்பட வேண்டும். இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் "பசுமை மயானங்கள் மற்றும் சுடுகாடுகளை" அமைக்கும் திட்டத்தை அரசு முன்னெடுக்க இருக்கிறது.

மயானம் மற்றும் சுடுகாடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை.. அங்கெல்லாம் அடிப்படை வசதிகள் கூட இல்லை. சுகாதாரமின்றி தூய்மையற்றதாக மயானங்களாகவே அவைகள் காணப்படுகின்றன.. மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து, பூச்செடிகள் மற்றும் மரங்களை நட்டு , தண்ணீர் வசதி மற்றும் கொட்டகை அமைத்து "பசுமை மயானங்களை" உருவாக்கலாம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் இரண்டின் பிம்பத்தையும் மேம்படுத்த இது பெரிதும் உதவும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

சுற்றுப்புற சூழல்: அத்துடன், இந்த மயானங்கள் பசுமை திட்டம் முன்னெடுத்தால், அதனால் ஏற்படக்கூடிய சுற்றுப்புறசூழல் நன்மைகள் குறித்தும் பல்வேறு விஷயங்களை அதில் தெளிவுபடுத்தியிருந்தார்.

சுற்றுலா துறை: இந்நிலையில், அடுத்த அதிரடியை தலைமை செயலாளர் கையில் எடுத்துள்ளார்.. தங்கும் டிரைவர்களின் நலன்கள் மீது அக்கறை செலுத்தி, அதற்கான உத்தரவையும் சுற்றுலா துறைக்கு பிறப்பித்துள்ளார்.. இது தொடர்பாக, வீட்டு வசதித் துறை செயலர் அபூர்வாவுக்கு, தலைமை செயலர் இறையன்பு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.

அந்த கடிதத்தில், "சுற்றுலாவுக்காக வெளியூர் செல்வோர், ஹோட்டல் அல்லது விடுதியில் அறை எடுத்து தங்குகின்றனர். ஆனால், ஓட்டுனர்களோ ஹோட்டல், விடுதி வளாகம் அல்லது வாகனங்களில் தங்கும் நிலைமையே உள்ளது... இதனால் அவர்களின் தூக்கம் பாதிக்கப்பட்டு, விபத்துகளுக்கு வழிவகுக்கிறது.

அக்கறை: அதனால், அனைத்து ஹோட்டல் மற்றும் விடுதிகளிலும், டிரைவர்கள் குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும். அவ்வாறு வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

விடுதிகள், ஓட்டல்கள், லாட்ஜ்களில் வாகன ஓட்டுநர்கள் தங்குவதற்கு கட்டாயம் ஓய்வுக் கூடங்களை அமைக்க வேண்டும். இதற்காக சாதாரணமான தொகையை வசூலிக்கலாம். வாகன நிறுத்த கட்டணத்தில் கூட அதை இணைத்து பெறலாம்... அதனால், பெருநகரங்கள், சுற்றுலா பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளின் கட்டுமானத்துக்கு திட்ட அனுமதி கோரும்போது, ஓட்டுநர் தங்கும் விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களுக்கு இதுபோல மனிதாபிமானத்துடன் உதவும்போது, விபத்துகளை தவிர்க்கலாம். சாலை பாதுகாப்பு, ஓட்டுநர்கள் நலனில் உங்களது இந்த நடவடிக்கை வரவேற்பை பெறும்" என்று இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

சபாஷ்: டிரைவர்களின் உடல்நிலை குறித்து, மிக மிக நுட்பமாக யோசித்து, அவர்களின் மீதான நலனை வெளிப்படுத்தியுள்ள நிலையில், தலைமை செயலாளரின் இந்த கடிதம் பலரது கவனத்தையும் திரும்பிப்பார்க்க வைத்து வருகிறது..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+