"ஹீரோ" இறையன்பு.. கடைசி நாளில் போட்ட உத்தரவு.. இது யாருக்குமே தோணாம போச்சே..பூரித்த பள்ளி மாணவர்கள்
சென்னை: இறையன்பு ஐஏஎஸ் இன்று பதவி ஓய்வு பெறும் நிலையில், ஒரு முக்கிய கடிதம் ஒன்றை மாணவர்களுக்காக எழுதியிருக்கிறார்... இந்த கடிதம் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.. என்ன அது?
2021-ல் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றே தலைமைச் செயலராக இருந்த ராஜீவ்ரஞ்சன் மாற்றப்பட்டு, வெ.இறையன்பு புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் அவர் பணியாற்றிய நிலையில், அவர் ஓய்வுபெறுகிறார்.

இன்று ஓய்வு: தலைமைச் செயலாளர் பதவியில் இன்னும் சில மாதங்களுக்கு இறையன்புவை நீட்டிக்க வாய்ப்பு இருந்தபோதிலும் அவர் அதனை மறுத்துவிட்டார். மேலும் தமிழக அரசிலேயே முக்கிய பதவி ஒன்றில் அவரை அமர வைக்கும் முயற்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தலைமைச் செயலாளராக இருப்பவருக்கு மாநில அரசு விரும்பினால் 3 மாதம் பணி நீட்டிப்பு வழங்க முடியும். இதற்கு விதிகளும் இடமளிக்கிறது. அதன்படி பணி நீட்டிப்பு வழங்கலாமா? என்று முதல்வர் ஆலோசித்திருக்கிறார். அதனையும் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் இறையன்பு.
இறையன்பு: எனினும், தலைமை தகவல் ஆணையர் பதவி இறையன்புக்கு கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதனை அவர் மறுக்கவே ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு இறையன்புவின் அனுபவம் பயன்படும் என கூறப்பட்டபோது அதற்கும், இறையன்பு மறுப்பு தெரிவித்துவிட்டார்..
அடுத்த சாய்ஸ்: எனவே, அவரை முறைப்படி ஓய்வுபெற அனுமதித்துவிட்டு, பிறகு, முதல்வருக்கு ஆலோசனை வழங்குவதற்காக "அரசின் ஆலோசகர்" என்ற பதவில் இறையன்புவை உட்கார வைக்கலாமா? என்றும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தனக்கு பதவி நீட்டிப்போ, ஓய்வு பெற்ற பிறகு புதிய பதவியோ வேண்டாம் என்று இறையன்பு ஏற்கனவே சொல்லிவிட்டார்.. அத்துடன், தான் உயிருக்கு உயிராக நேசிக்கும் எழுத்துப்பணியையே இறையன்பு தொடர்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
எனினும், இறையன்பு போன்ற அதிகாரிகளை, இழக்க மனமின்றி, முக்கிய பொறுப்பு தரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இன்னமும் நிலவியபடியே உள்ளது.. இன்று பிற்பகல் பணிஓய்வு பெறுகிறார் இறையன்பு.. இப்படிப்பட்ட சூழலில், பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளிக்கு இறையன்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.. அந்த கடிதத்தில், பள்ளி மாணவர்களுக்கு இறையன்பு ஒரு அறிவுரை தந்துள்ளார்..
அதாவது, பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவது குறித்தும், பொது அறிவு தொடர்பான செய்திகள் அவர்களுக்கு அதிகமாக தெரிவதில்லை என்பது குறித்தும், தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தி, இதற்கு தீர்வாக ஒரு ஆலோசனையும் இறையன்பு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இறையன்பு கடிதம்: அந்த கடிதத்தில், "மாணவர்கள் மின்னணு உபகரணங்களில் அதிகமாக வாசிப்பதால், புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது... இதனால் பொது அறிவு தொடர்பான செய்திகள் அவர்களுக்கு அதிகமாக தெரிவதில்லை.. வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போர் மன்றம் ஏற்படுத்த வேண்டும்.. அதில் மாதந்தோறும் மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கலாம்.
இதன்மூலம் வாசிப்பு மேம்படுவதுடன் தகவல் தொடர்பிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்... சிறந்த முறையில் நூலை மதிப்புரை செய்யும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதோடு, இதில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல புத்தகங்களை தந்து ஊக்குவிக்கலாம்..
இது, அவர்களிடம் சமூகம் தொடர்பான சிந்தனைகளையும், ஆக்கபூர்வமான விழுமியங்களையும் ஏற்படுத்தும் என்பதால் இதை விரிவாக செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் " என்று பள்ளிக் கல்வி இயக்குநருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியத்துவம்: இறையன்புவை பொறுத்தவரை மாணவர்களையும், இளைஞர்களையும் அதிகமாக நேசிப்பவர்.. அவர்களை தன்னுடைய எழுத்திலும், பேச்சிலும், எந்நேரமும் ஊக்கப்படுத்திக் கொண்டேயிருப்பவர்.. ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக திகழ்ந்து, அதை செயலிலும் காட்டி வருபவர்.. இதனால், இளைஞர்களுக்கு, தங்களை முன்னெடுத்து நல்வழிப்படுத்தும் ஹீரோ"வாகவே அவர்கள் மனதில் தங்கியும் விட்டவர்..
இந்நிலையில், பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை முன்னெடுக்கவேண்டும் என்று பள்ளிக் கல்விக்கு ஆலோசனை தந்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
சபாஷ் : அதிலும், இன்றைய தினம் அவர் ஓய்வுபெறும் நிலையில், கடைசியாக இந்த அறிவுறுத்தலை, பிள்ளைகளுக்கு வழங்கியுள்ளது கூடுதல் முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications