இறையன்பு இருக்கட்டுமே.. "ஒரே கல்லில் 3 மாங்காய்".. அடுத்த தலைமை செயலாளர் இவரா? கோட்டையில் ஒரே டென்ஷன்
சென்னை: தமிழகத்தின் அடுத்த தலைமை செயலாளர் யார் என்ற விவகாரம் கோட்டையை பலமாக சுற்றி வருகிறது.. இது தொடர்பாக சில தகவல்களும் கசிந்து கொண்டிருக்கின்றன.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றும் முக்கிய இடங்களில் ஒன்றினை இறையன்புக்கு தந்து, தங்கள் ஆட்சிக்காலத்தில் தக்க வைத்து கொள்ள முதல்வர் தரப்பு யோசித்து வருவதாக தெரிகிறது..

காரணம், தலைமை செயலாளருக்கு இணையானது, தலைமை தகவல் ஆணையர் பதவியாகும். இந்த துறைக்கு இறையன்பு பொறுப்பேற்றால், மீண்டும் புதுப்பொலிவு பெறும் என்பதே முதல்வரின் நம்பிக்கையாக இருக்கிறது..
பணி நீட்டிப்பு: ஆனால், அதில் தனக்கு விருப்பம் இல்லை என ஜகா வாங்கிக் கொண்டுவிட்டாராம் இறையன்பு.. அதேபோல, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவிக்கு முதலில் அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டபோதும் அதையும் அவர் விரும்பவில்லையாம்..
தலைமைச் செயலாளராக இருப்பவருக்கு மாநில அரசு விரும்பினால் 3 மாதம் பணி நீட்டிப்பு வழங்க முடியும். இதற்கு விதிகளும் இடமளிக்கிறது. அதன்படி பணி நீட்டிப்பு வழங்கலாமா? என்று முதல்வர் ஆலோசித்திருக்கிறார். அதனையும் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் இறையன்பு.
அடுத்த சாய்ஸ்: எனவே, அவரை முறைப்படி ஓய்வுபெற அனுமதித்துவிட்டு, பிறகு, முதல்வருக்கு ஆலோசனை வழங்குவதற்காக "அரசின் ஆலோசகர்" என்ற பதவில் இறையன்புவை உட்கார வைக்கலாமா? என்று விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தனக்கு பதவி நீட்டிப்போ, ஓய்வு பெற்ற பிறகு புதிய பதவியோ வேண்டாம் என்று இறையன்பு ஏற்கனவே சொல்லிவிட்டார்.. அத்துடன், தான் உயிருக்கு உயிராக நேசிக்கும் எழுத்துப்பணியையே இறையன்பு தொடர்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசி ஆப்ஷன்: எனினும், இறையன்பு போன்ற "மிஸ்டர் கிளீன்" அதிகாரிகளை இழக்க, அரசுக்கு மனசில்லை என்பதே யதார்த்த உண்மை.. எனவே இறையன்புவுக்கு "அரசின் ஆலோசகர்" என்ற பதவியை தரலாமா என்று நினைக்கிறது..
அதேசமயம், அடுத்த தலைமை செயலாளரை முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுத்தாலும், 2 விதமான தகுதிகளின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். பொதுவாக, பணிமூப்பு ஒரு கணக்கீடாக இருந்தாலும்கூட, சம்பந்தப்பட்டவர் அரசுடன் இணக்கமாக செல்பவராக இருக்க வேண்டும். அதனால், சீனியாரிட்டி அடிப்படையில், தலைமைச் செயலாளர் அந்தஸ்தில், இளையவராக உள்ளவரையும், தலைமை செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்..
அப்படி இளையவரை தேர்வு செய்தால், அவர் ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்ற விபரத்தை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஒருவேளை, மாநில அரசு தேர்வு செய்தவர் மீது, ஏதாவது, புகார்கள் இருந்தால், மத்திய அரசு அதற்கான விளக்கத்தை கேட்கும். ஆனாலும், இதுவரை மாநில அரசு தேர்வு செய்யும் நபரே, தலைமைச் செயலராக நியமிக்கப்பட வருவதால், யார் அந்த "இளைய அதிகாரி" என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தலைமை செயலாளர்: மற்றொருன்று, ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படக்கூடிய சமயங்களில் அதை தீர்த்து வைக்கும் திறமை ஒரு தலைமை செயலாளருக்கு கட்டாயம் தேவை என்றாலும், டெல்லி விவகாரத்தை கவனித்து கொள்ளும் அளவுக்கு, அடுத்த தலைமை செயலாளர் செயல்பட வேண்டும் என்று முதல்வர் தரப்பு நினைக்கிறதாம்..
காரணம், மறைந்த முதல்வர் கருணாநிதி இருந்தபோது, டெல்லியை பற்றி கவலைப்படவே மாட்டார்.. அதையெல்லாம் கவனித்து கொள்ளவே முரசொலி மாறன் இருந்தார்.. கலைஞருக்கு 10 வருடங்கள் இளையவரும், நம்பிக்கைகுரியவராக திகழ்ந்தவர் முரசொலி மாறன்.. திமுக தலைவரின் கண்களாகவும் காதுகளாகவும் திகழ்ந்தவர்.. கருணாநிதியிடம் எதாவது சொல்ல வேண்டும் என்றால், அதை மாறனிடம் சொன்னால் போதும் என்று டெல்லி புரிந்து வைத்திருந்தது. "என் மனசாட்சி" என்றே கலைஞர் சொல்வார்..
கருணாநிதி நிழல்: அரசியலில் தொடங்கி கட்சி, கூட்டணி என அனைத்திலும் கருணாநிதி அடுத்து என்ன முடிவு எடுப்பார் என்பது முரசொலி மாறனுக்கு தெரியும்... அந்த அளவுக்கு கருணாநிதியின் கருத்தாகவும், நிழலாகவும் வலம்வந்தவர் முரசொலி மாறன்..
ஆனால், இன்றைய ஆளும் பாஜக, பல்வேறு வழிகளில் திமுக அரசுக்கு நெருக்கடி தந்துவருகிறது.. அம்புகளை எந்த பக்கமிருந்து வீசும் என்றே தெரியாத சூழலில், இவைகளை எல்லாம் எதிர்கொள்ளும் அளவுக்கு திறமைசாலி அதிகாரியே தேவை என்று முதல்வர் நினைக்கிறாராம்.. எனவே, டெல்லியை லாபி செய்வது + டெல்லி நிகழ்வுகளை கண்காணித்து மாநில அரசுக்கு சொல்வது + நெருக்கடி சூழலில் வழிகாட்டுவது + மத்தியில் உள்ள ஆட்சியாளர்களை பகைத்தும் கொள்ளாமல் இருக்கக்கூடிய ஆபீசர் தேவை என்றும் யோசிக்கிறாராம்.
யார் அவர்: எனவே, இந்த திறமைகள் இருக்கும் அதிகாரியை தான் தலைமைச் செயலாளர் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம்.. மற்றொருபக்கம், சென்னையை அடிப்படையாக கொண்ட அதிகாரியாக இருந்தால், கூடுதல் முக்கியத்துவம் தரப்படும் என்றும் சொல்லப்படுகிறது.. இப்படியான யோசனைகளும், விவாதங்களும் அதிகரித்தபடியே வருவதால், கோட்டையே பரபரத்து காணப்படுகிறது.. !!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications