தமிழ்நாட்டின் டிஜிபியாக சங்கர் ஜிவால் பொறுப்பேற்பு.. சென்னை கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்பு
சென்னை: தமிழ்நாட்டின் தற்போதைய தலைமை செயலாளர் வே. இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபுவின் பதவிக்காலம் இன்றுடன் ஓய்வு பெறுகிறது.. இந்நிலையில், தமிழகத்தின் டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றார்.. அதேபோல, சென்னை மாநகரின் 108வது காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்றார்.
2021-ல் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றே தலைமைச் செயலராக இருந்த ராஜீவ்ரஞ்சன் மாற்றப்பட்டு, வெ.இறையன்பு புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் அவர் பணியாற்றிய நிலையில், இன்று அவர் ஓய்வுபெறுகிறார்.
தலைமைச் செயலாளர் பதவியில் இன்னும் சில மாதங்களுக்கு இறையன்புவை நீட்டிக்க வாய்ப்பு இருந்தபோதிலும் அவர் அதனை மறுத்துவிட்டார். மேலும் தமிழக அரசிலேயே முக்கிய பதவி ஒன்றில் அவரை அமர வைக்கும் முயற்சியும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இறையன்பு: அந்தவகையில், தலைமை தகவல் ஆணையர் பதவி இறையன்புக்கு கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதனை அவர் மறுக்கவே ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு இறையன்புவின் அனுபவம் பயன்படும் என கூறப்பட்டபோது அதற்கும், இறையன்பு மறுப்பு தெரிவித்து விட்டதால், அந்த பதவி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஆனால் அவருடைய பதவிக்காலமும் இன்று முடிவடைவதால் இறையன்புவை தமிழ்நாடு அரசின் ஆலோசகராக நியமிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.
நீங்கியது குழப்பம்: இதனிடையே, அடுத்த தலைமை செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு கடந்த ஒரு மாதமாக நிலவி வந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய தலைமை செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.
இறுதியில், சிவ்தாஸ் மீனா புதிய தலைமைச் செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேற்றைய தினமே பிறப்பித்திருந்தார்.. புதிய தலைமைச் செயலராக தற்போது நகராட்சி நிர்வாகத் துறைச் செயலராக உள்ளசிவ்தாஸ் மீனாவை நியமித்து, தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவித்துள்ளார்.
இதையடுத்து தமிழ்நாட்டின் 49வது தலைமை செயலாளராகியுள்ளார் சிவ்தாஸ் மீனா. சென்னை தலைமை செயலகத்தில் அவர் முறைப்படி இன்று பதவியேற்க உள்ளார்.இன்று பிற்பகல் இறையன்பு ஓய்வுபெறும் நிலையில், புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்கிறார்.
இறுதியில், சிவ்தாஸ் மீனா புதிய தலைமைச் செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேற்றைய தினமே பிறப்பித்திருந்தார்.. புதிய தலைமைச் செயலராக தற்போது நகராட்சி நிர்வாகத் துறைச் செயலராக உள்ள சிவ்தாஸ் மீனாவை நியமித்து, தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவித்துள்ளார்.
இதையடுத்து தமிழ்நாட்டின் 49வது தலைமை செயலாளராகியுள்ளார் சிவ்தாஸ் மீனா. சென்னை தலைமை செயலகத்தில் அவர் முறைப்படி இன்று பதவியேற்கிறார்..
எதிர்பார்ப்பு: அதேபோல, தலைமைச்செயலாளர் பதவியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியிருந்த இறையன்புவை போலவே, குறிப்பிடத்தக்க முன்னெடுப்பு நடவடிக்கைகளை புதிய தலைமை செயலாளர் மேற்கொள்வாரா? அதிரடிகளை காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதேபோல, போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை மாநகரின் 109வது காவல் ஆணையராக பொறுப்பேற்றார் சந்தீப் ராய் ரத்தோர்.. டிஜிபியாக பொறுப்பேற்கவுள்ள சங்கர் ஜிவால், தனது பொறுப்பை சந்தீப் ராய் ரத்தோரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, சந்தீப் ராய் ரத்தோருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
அதேபோல, சென்னை மயிலாப்பூர் டிஜிபி அலுவலகத்தில் கையெழுத்திட்டு சங்கர் ஜிவால் இன்று பொறுப்பேற்றார்.. இன்றுடன் ஓய்வு பெறும் சைலேந்திரபாபு, சங்கர் ஜிவாலிடம் கோப்புகளை ஒப்படைத்தார்.. முன்னதாக அவர் முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்து டிஜிபி வாழ்த்து பெற்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications