சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேற்பரப்பை சுரண்டிவிட்டு சாலைகள் போடுங்கள்.. தரமான சாலைக்கு இறையன்பு உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் புதிய சாலைகள் போடுவது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தமிழக தலைமைச் செயலாளர் வெ இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறுகையில் சாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தைச் சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் போட வேண்டும். மேற்பரப்பைச் சுரண்டிவிட்டு சாலை போடுவது வீடுகளுக்குள் நீர் புகாமல் தடுக்கும்.

உலக தடுப்பூசி சந்தையை பிடிக்க.. சண்டையிடும் மாநிலங்கள்.. இந்தியா எங்கே ?.. கெஜ்ரிவால் வருத்தம்! உலக தடுப்பூசி சந்தையை பிடிக்க.. சண்டையிடும் மாநிலங்கள்.. இந்தியா எங்கே ?.. கெஜ்ரிவால் வருத்தம்!

எந்த சூழ்நிலையிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகளின் மட்டத்தை அதிகரிக்கக் கூடாது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சாலைகள் போதிய கனத்துடன் இருப்பதால் பிபிடி சோதனை தேவையில்லை என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் இறையன்பு.

தரமில்லாத சாலை

தரமில்லாத சாலை

ஒவ்வொரு முறையும் சாலைகளை அமைக்கும் போதும் ஏற்கெனவே உள்ள சாலை மீதே புதிய சாலைகள் போடப்படுகின்றன. இதனால் சாலைகள் தரமில்லாதவையாக உள்ளன. மேலும் சாலைகளின் உயரம் அதிகரித்து வீடுகளின் உயரம் குறைகிறது. இதனால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதை உணர்ந்தே இறையன்பு இது போன்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இறையன்பு

இறையன்பு

நேர்மையான அதிகாரியான இறையன்பு கடந்த ஆட்சியில் ஓரங்கட்டப்பட்டிருந்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இது போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு நல்ல பதவிகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக தலைமை செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

நூல்கள்

நூல்கள்

இவர் நேற்று முன் தினம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி எனது நூல்களை பரிசளிக்க வேண்டாம். என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ விநியோகிக்க வேண்டாம்.

களங்கம்

களங்கம்

பூங்கொத்துக்கு பதிலாக எனது நூல்களை விநியோகிக்க வேண்டாம். தலைமை செயலாளராக பணியாற்றும் வரை எனது நூல்களை எந்த அழுத்தம் வந்தாலும் வாங்கக் கூடாது. பார்ப்பவர்களுக்கு எனது பணியின் காரணமாக அது திணிக்கப்பட்டு இருப்பதாக தோன்றி களங்கம் விளைவிக்கும்.

Recommended Video

    ஒரே வீட்டில் இரண்டு IAS அதிகாரிகள் | Irai Anbu IAS Unknown Facts
    பதவி

    பதவி

    எந்த வகையிலும் என் பெயரோ, பதவியோ தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதே எனது நோக்கமாகும். வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தால் அதிகாரியிடம் வசூலித்து அரசு கணக்கில் செலுத்தப்படும் என அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தார்.

    English summary
    Tamilnadu Chief Secretary V. Iraianbu writes letter to National Highways officials about roads.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X