போரை விரிவுப்படுத்த போகிறோம்.. அமெரிக்க தளவாடங்களையும் தாக்குவோம்.. ஈரான் பகிரங்க எச்சரிக்கை
நியூயார்க்: ஈரானும் இஸ்ரேலும் போர் முனைப்பை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அடுத்த சில தினங்களில் இப்போர் விரிவடையும் என்று ஈரான் எச்சரிக்கை அளித்துள்ளது. அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போரை விரிவுபடுத்த ஈரான் முடிவு
இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் தகுந்த பதிலடி கொடுக்கும் என உயர் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் அரசு தரப்பு வெளியிட்ட செய்தியில், "வரவிருக்கும் நாட்களில் போர் மேலும் தீவிரமடையும். இப்பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களும் இதில் அடங்கும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் 'ரைசிங் லயன்' நடவடிக்கையைத் தொடங்கியவுடன், ஈரான் நேற்று இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணைகளை செலுத்தியது. இதில் குடியிருப்புகள் தாக்கப்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் தாக்குதல்
முன்னதாக, அமெரிக்காவுடனான அணுசக்தி திட்ட பேச்சுவார்த்தை பயனற்றது"என ஈரான் தெரிவித்தது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு தீவிர ஆதரவாக செயல்படுகிறது. அப்படிப்பட்ட அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு பலன் இல்லை. அதனால் அந்த ஒப்பந்தத்தை செய்யும் எண்ணம் இல்லை.
வரவிருக்கும் நாட்களில் போர் மேலும் தீவிரமடையும். இப்பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களும் இதில் அடங்கும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்கா ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்துவது போல் பாவனை செய்து கொண்டு, மறுபுறம் இஸ்ரேலை ஈரான் மீது தாக்குதல் நடத்த அனுமதித்துள்ளது. இது பேச்சுவார்த்தையை அர்த்தமற்றதாக்குகிறது. அமெரிக்காவின் அனுமதியின்றி இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியிருக்க முடியாது
பேச்சுவார்த்தை பயனளிக்கவில்லை என்றால், அமெரிக்காவுடன் மோதல் ஏற்படும். அப்படியானால், அனைத்து அமெரிக்க தளங்களும் எங்கள் எல்லைக்குள் உள்ளன. அவற்றை நாங்கள் குறிவைத்து தாக்குவோம், என்று ஈரான் எச்சரித்து உள்ளது.
இஸ்ரேல் எச்சரிக்கை
இஸ்ரேல் மீது ஈரான் பயங்கர தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலியர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்து இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுமாறு இஸ்ரேலியர்களுக்கு உத்தரவு
இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஈரான் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இஸ்ரேலியர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்று உள்துறை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து பொது இடங்களிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற அலுவலகங்கள் அனைத்தும் வெள்ளக்கிழமை மூடப்பட்டிருக்கும். நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பான அறைகள் அல்லது கட்டிடங்களில் உள்ள பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று உள்துறை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அப்படி இல்லாதவர்கள் பொது பதுங்கு குழிகளை பயன்படுத்தலாம். எதுவுமே கிடைக்காத பட்சத்தில் மாடிப்படிகளில் தஞ்சம் அடையலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் நாளை இரவு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேலின் வான்வெளி மூடப்பட்டதால், எல் அல் விமான நிறுவனம் தனது விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
-
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு! பேசிக்கொண்டிருக்கும்போதே.. சாரை சாரையாக வெளியேறிய மாணவர்கள்! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது!












Click it and Unblock the Notifications