ஐஆர்சிடிசி.. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய போகும் பயணிகளுக்கு குட்நியூஸ்.. எல்லாமே சரியாகிடுச்சு
சென்னை: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி இணையதளம் பராமரிப்பு காரணமாக முடங்கியதால் ரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் ஐஆர்சிடிசி இணையதளம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்தியாவில் ரயில்களில் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும் என்றால் ஆன்லைனில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் தான் முன்பதிவு செய்ய வேண்டும். பொதுவாக ஐஆர்சிடிசி இணையதளம் தட்கல் திறப்பு நேரமாக காலை 11 மணி அளவில் மெதுவாகவே செயல்படும். அதனால் சிலருக்கே ரயில் டிக்கெட் கிடைப்பதும், சிலருக்கு உள்ளே செல்லும் வாய்ப்பு கூட கிடைக்காமல் தட்கல் டிக்கெட் முடிந்த பின்னரே உள்ளே லாக்இன் ஆகும்.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வது என்பது இன்று வரை பலருக்கும் கனவாகவே உள்ளது. முகூர்த்த நாட்கள், விடுமுறை நாட்கள். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற சமயங்களில் தட்கலில் புக்கிங் செய்வதும் மிகவும் கடினமாகும்.
இந்நிலையில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் (https://www.irctc.co.in/) இன்று(வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தட்கல் முன்பதிவு செய்ய முயன்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது. ரயில்வேயின் மொபைல் செயலியான 'ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட்' செயலியும் முடங்கியது. இதனால் இன்று காலை, தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இணையதளம் முடங்கியுள்ளதாகவும் டிக்கெட் முன்பதிவு செய்ய பின்னர் முயற்சிக்குமாறும் ஐஆர்சிடிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் புக்கிங் செய்ய வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே ஐஆர்சிடிசி வெளியிட்ட ட்வீட் பதிவில், தொழில்நுட்ப காரணங்களால் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழுவினர் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர், விரைவில் முன்பதிவு சரி செய்யப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் பிற்பகல் 1.55 மணி அளவில் இருந்தே ஐஆர்சிடிசி இணையதளம் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது. பராமரிப்பு பணிகள் முடிந்து ஐஆர்சிடிசி இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.இப்போது பலரும் ஆர்வமுடன் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications