அந்த போஸ்டுக்கு அச்சாரம்? அடுத்தடுத்து பாஜக தலைகளை சந்தித்த ரஜினிகாந்த்.. இப்படி ஒரு காரணமாமே!'
சென்னை: உயரிய பதவி ஒன்றிற்கு நடிகர் ரஜினிகாந்த் அச்சாரம் போட்டு வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவித்து வருகின்றன.
2020ல் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறினார். அப்போதே அதற்கு பின் பாஜக இருப்பதாக கூறப்பட்டது. அதாவது தமிழ்நாட்டில் பாஜக நேரடியாக கால் பதிக்க முடியாத காரணத்தால் ரஜினிகாந்த் மூலம் பாஜக களமிறங்குகிறது. பாஜக - ரஜினிகாந்த் கூட்டணி வைப்பார்கள் என்றும் செய்திகள் வந்தன.

அதன்பின் ரஜினிகாந்த் பல முறை பாஜகவிற்கு ஆதரவாக பேசினார். அதேபோல் பாஜகவின் செயல்பாடுகளை பாராட்டும் விதமாகவும் பேட்டி அளித்தார். இதில் முக்கியமானது.. ரஜினி திராவிட அரசியல் உள்ள தமிழ்நாட்டில் ஆன்மீக அரசியல் அளிப்பேன் என்றார். அவருக்கு பின் பாஜக இருப்பதாகவும் கூறப்பட்டது.
முக்கியமாக கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு ஒரு தலைவர் என்றும் ரஜினி பேசினார். அவரின் கட்சியில் அண்ணாமலை அப்போது இணைய போவதாகவும் பேச்சுக்கள் வந்தன. ஆனால் ரஜினி அதன்பின் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். முக்கியமாக அவரின் லூஸ் டாக் பேச்சுக்கள், பாஜக ஆதரவு நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இதை எல்லாம் ரஜினி பார்த்து கடும் அதிர்ச்சியும் அடைந்தார்.
அதேபோல் தேர்தல் கருத்து கணிப்புகளும் ரஜினிக்கு ஆதரவாக வரவில்லை. கடைசியில் உடல்நிலையை காரணம் காட்டி ரஜினி அரசியலில் இருந்து விலகினார். தன்னால் வெளியே வர முடியாது, உடல்நிலை சரியில்லை என்று ரஜினி இப்படி கூறினார். ஆனால் என்னவோ அதன்பின் தொடர்ந்து பல்வேறு படங்களில் ரஜினி நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில்தான் மீண்டும் பாஜகவுடன் நெருக்கம் ஆகும் விதமாக ரஜினிகாந்த் ஆதித்யநாத்தை சந்தித்துள்ளார்.

பலருடன் சந்திப்பு: முதலில் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் உடன் இணைந்து ஜெயிலர் படத்தை ரஜினிகாந்த் பார்ப்பதாக இருந்தது.
ஆனால் ஜெயிலர் படம் பார்க்க ரஜினிகாந்த்திற்கு ஆதித்யநாத் நேரம் ஒதுக்கவில்லை. ஜெயிலர் படத்தை ரஜினியுடன் சேர்ந்து பார்க்காமல் துணை முதலமைச்சர் மௌரியாவை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அனுப்பி வைத்தார். இன்று வரிசையாக பாஜக தலைவர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். சில அமைச்சர்களையும் அவர் சந்திக்க உள்ளார்.
என்ன பின்னணி?: அதன்படி உயரிய பதவி ஒன்றிற்கு நடிகர் ரஜினிகாந்த் அச்சாரம் போட்டு வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவித்து வருகின்றன. ரஜினிகாந்த் தற்போது ஜெய் பீம் படம் எடுத்த ஞானவேல் இயக்கத்தில் படம் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கு பின் ரஜினிகாந்த் நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஆளுநர் பதவி, எம்பி பதவி போன்ற பெரிய பதவிகளை 2024க்கு பின் ரஜினி எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
2024 லோக்சபா தேர்தலுக்கு பின் ஆட்சியில் மீண்டும் பாஜக அமரும் பட்சத்தில் ஆளுநர் பதவி அல்லது வேறு உயரிய மத்திய பதவி பெறக்கூடிய திட்டத்தில் ரஜினிகாந்த் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பாஜக தலைவர்களுடன் ரஜினிகாந்த் நெருக்கமாகி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் நேரடியாக அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை. ரஜினிகாந்த் அரசியலில் இனி நேரடியாக களமிறங்க மாட்டார். ஆனால் அரசியல் நியமன பதவிகளுக்கு அவர் குறி வைக்கலாம் என்று கூறப்படுகிறது .
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications