"ஜீசஸ்".. ஆஹா திடீரென முக்கிய ரூட்டை பிடித்த எடப்பாடி.. கண்ணை கசக்கி பார்க்கும் பாஜக! அப்போ அதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று பேசிய சில விஷயங்கள் அதிமுகவினரை திரும்பி பார்க்க செய்துள்ளது. முக்கியமாக பாஜகவினர் பலர் எடப்பாடியின் பேச்சை கூட்டணிக்கு எதிராக விட்ட சமிக்கையாக பார்க்க தொடங்கி உள்ளனர்.

அதிமுக மெகா கூட்டணி அமைக்க போவதாக சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார். சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணியாக இது இருக்கும். அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது.

பல காலமாக இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். அதுதான் இப்போதும் நடக்கும். தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை நிலைநிறுத்துவோம். எங்கள் மீது வழக்குகளை போட்டு எங்களை முடக்க முடியாது. அதற்கு நாங்கள் விட மாட்டோம், என்று கூறினார்.

கூட்டணி

கூட்டணி

ஆனால் எடப்பாடியின் இந்த மெகா கூட்டணி என்பது பாஜகவுடன் வைக்கும் கூட்டணி இல்லை, காங்கிரசுடன் வைக்கும் கூட்டணி என்று செய்திகள் வந்தன. அதாவது தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியை எடப்பாடி கழற்றிவிட திட்டமிட்டுள்ளதாகவும் பல்வேறு அரசியல் தகவல்கள் வர தொடங்கி உள்ளன. பாஜகவுடன் கூட்டணி வைத்து 3 தேர்தல்களில் தோல்வி அடைந்துவிட்டோம். இதனால் காங்கிரசுடன் கூட்டணி வைக்க எடப்பாடி ஆலோசனை செய்து வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் ஆலோசகர்

காங்கிரஸ் ஆலோசகர்


காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசகராக இருக்கும் ஒருவர்.. முன்பு எடப்பாடிக்கும் ஆலோசகராக இருந்தார். இப்போதும் எடப்பாடிக்கு அவர் நெருங்கிய நட்பில்தான் இருக்கிறார். இவர்கள் இருவரும்தான் இந்த கூட்டணிக்கான முயற்சிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த ஆலோசகர்தான்.. நீங்க பாஜகவை விட்டுட்டு வாங்க.. காங்கிரசோடு கூட்டணி வைக்கலாம் என்று கூறி இருக்கிறாராம். அதன்படி அதிமுக + காங்கிரஸ் + விசிக + மக்கள் நீதி மய்யம் என்ற கூட்டணியை உருவாக்க எடப்பாடி முயன்று வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுபான்மையினர்

சிறுபான்மையினர்

இந்த நிலையில்தான் நேற்று சென்னை வானகரம் ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா அதிமுக சார்பாக கொண்டாடப்பட்டது. இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மையினருக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் கட்சி அதிமுக. அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே கட்சி அதிமுக. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்றவர் இயேசு. அவர் அமைதியை போதித்தார். அவரின் பிறந்தநாளை கொண்டாடுவதில் மகிழ்ச்சி. கிறிஸ்தவர்களைப் பிற்படுத்தப்பட்டோராக அறிவித்தவர் எம்ஜிஆர். சிறுபான்மையின மக்களை பாதுகாத்து அரணாக இருக்கும் கட்சி அதிமுக. இதன் மூலம் கல்வி, வேலை வாய்ப்புகளில் இன்று வரை கிறிஸ்தவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக்க ஆதரவு கொடுத்தவர். இப்படி பல இடங்களில் ஜெயலலிதா சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு உதவி இருக்கிறார். சிறுபான்மை மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கியவர் ஜெயலலிதா.. சிறுபான்மை மக்களின் நலனைப் பாதுகாத்தவர் தலைவராக ஜெயலலிதா. அவரின் ஆட்சிக்கு பின்பு இப்போது அதிமுக சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறது என்று எடப்பாடி நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.

சமத்துவ கிறிஸ்துமஸ்

சமத்துவ கிறிஸ்துமஸ்

சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை சார்பாக கூட சமத்துவ கிறித்துமஸ் நடத்தப்பட்டது. அப்போதய பேசிய அண்ணாமலை, எந்த மதத்தையும் திணிக்க மாட்டோம். இதுதான் பாஜகவின் கொள்கை. அனைத்து மதங்களையும் பாஜக பாதுகாக்கிறது. அனைத்து மதத்தையும் பாரம்பரியத்தையும் பின்பற்றுவதே மதச்சார்பின்மை என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். அண்ணாமலையும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடத்தி இருந்தாலும் கூட.. எடப்படியோ.. தாங்கள்தான் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கிறோம். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் அழுத்தம், திருத்தமாக பேசி இருக்கிறார்.

பாஜக

பாஜக

பாஜக கூட்டணியை எடப்பாடி முறிக்க போவதாக செய்திகள் வரும் நிலையில்தான் அவரின் இந்த பேச்சு கவனம் பெற்றுள்ளது. சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவை விட்டு சென்றுவிட்டன. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அவர்களின் ஆதரவு அதிமுகவிடம் இல்லை. அதனால்தான் இப்போது கூட்டணியை முறிக்க எடப்பாடி தயாராகிவிட்டார். இதை மனதில் வைத்தே இப்போது கிறிஸ்துமஸ் விழா நடத்துவது, சிறுபான்மையினருக்கு ஆதரவாக பேசுவது போன்ற நிலைப்பாட்டை எடப்பாடி எடுத்துள்ளார் என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+