"ஆபத்து".. ஓபிஎஸ் இருக்கிறவரை நடக்காது.. மோடிக்கு எதிராக எடப்பாடி கேம்? சீக்ரெட்டை சொன்ன வல்லுநர்!
சென்னை: பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான முயற்சிகளை எடப்பாடி பழனிச்சாமி செய்து வருவதாக அரசியல் வல்லுநர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா அரசியலுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார். மோடிக்கு எதிராக எடப்பாடி இதற்காக காய் நகர்த்தி வருவதாக ரவீந்திரன் துரைசாமி குறிப்பிட்டு உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணியாக இது இருக்கும். அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது. பல காலமாக இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள் என்று சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
இந்த நிலையில்தான் எடப்பாடியின் இந்த மெகா கூட்டணி என்பது பாஜகவுடன் வைக்கும் கூட்டணி இல்லை, காங்கிரசுடன் வைக்கும் கூட்டணி என்று செய்திகள் வர தொடங்கி உள்ளன. அதாவது தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியை எடப்பாடி கழற்றிவிட திட்டமிட்டுள்ளதாகவும் பல்வேறு அரசியல் தகவல்கள் வர தொடங்கி உள்ளன.

என்ன சொன்னார்?
இதைத்தான் உறுதி செய்யும் விதமாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் சிவி சண்முகம் நேற்று பேசினார். அதில், திமுக - பாஜக கட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன. இவர்கள் கருப்பு துண்டு. அவர்கள் காவி துண்டு. ஆனா ரெண்டுமே ஒன்னு தான். திமுக - பாஜக கூட்டணி வைக்க போகிறார்கள். விசிக, கம்யூனிஸ்ட் எல்லாம் இனி திமுகவிற்கு தேவை இல்லை. அவர்களை திமுக கழற்றிவிட போகிறது. திமுகவிற்கு பிரஸர் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒன்று எங்களுடன் கூட்டணி வையுங்கள், இல்லை என்றால் காங்கிரசை கழற்றிவிடுங்கள் என்று பிரஷர் கொடுத்து வருகின்றனர் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான முயற்சிகளை எடப்பாடி பழனிச்சாமி செய்து வருவதாக அரசியல் வல்லுநர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா அரசியலுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.

பேட்டி
அவர் அளித்துள்ள பேட்டி பின்வருமாறு..
கேள்வி: சிவி சண்முகம் திமுக - பாஜக கூட்டணி வைக்க போவதாக சில நாட்களுக்கு முன் கூறி உள்ளாரே?
பதில்: எடப்பாடி கோஷ்டி உச்சகட்ட விரக்தியில் இருக்கிறார்கள். ஓ பன்னீர்செல்வத்தை எடப்பாடி நீக்கியது மோடிக்கு வைத்த குறி. ஓ பன்னீர்செல்வம் இருக்கிற வரை மோடியை கழற்றிவிட முடியாது. ஓபிஎஸ் மோடிக்கு நெருக்கமான தலைவர். ஓபிஎஸ் இருந்தால் மோடியுடனான உறவை அதிமுக முறிக்க முடியாது. இதனால்தான் ஓ பன்னீர்செல்வத்தை எடப்பாடி கழற்றிவிட்டார். ஓ பன்னீர்செல்வம் மோடியை ப்ளஸ் என்று நினைக்கிறார். ஆனால் எடப்பாடி, சிவி சண்முகம், கேபி முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோர் எல்லாம் மோடியை மைனஸாக நினைக்கிறார்கள். மோடி இருந்தால் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் வாக்குகள் தங்களுக்கு கிடைக்காது என்று எடப்பாடி நினைக்கிறார். மைனாரிட்டி வாக்குகள்தான் தங்களை தோல்வி அடைய செய்ததாக எடப்பாடி நினைக்கிறார்.

மோடி எடப்பாடி
அதனால்தான் இப்போது மோடியை கழற்றிவிட பார்க்கிறார் எடப்பாடி. ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி வைத்து பாடம் பெற்றவர்தான் ஜெயலலிதா. இதனால்தான் 2009ல் பாஜகவுடன் ஜெயலலிதா கூட்டணி வைக்கவில்லை. 2009ல் சோ கேட்டும் கூட பாஜகவுடன் ஜெயலலிதா வைக்கவில்லை. அதன்பின் 2019, 2021ல் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக தோல்வி அடைந்தது. மைனாரிட்டி வாக்குகள் கிடைக்கவில்லை என்பதால்தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்று எடப்பாடி நினைக்கிறார். இதை சிவி சண்முகமும் 2019 தேர்தலுக்கு பின்பாக குறிப்பிட்டு இருந்தார்.

மைனாரிட்டி
மைனாரிட்டி வாக்குகள் எங்களை விட்டு போய்விட்டது என்று சிவி சண்முகம் சொன்னது இதற்குத்தான். இப்போது அதைத்தான் அதிமுக மீண்டும் நினைக்கிறது. சிவி சண்முகம் வெளிப்படையாக உண்மையை பேசி உள்ளார். சிவி சண்முகம் பேசுவது எடப்பாடியின் குரல். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நம்முடைய வாக்கு வாங்கி போகும் ஆபத்து உள்ளது என்று எடப்பாடி நினைக்கிறார். எனவே எடப்பாடி இந்த கூட்டணி வேண்டாம் என்று நினைக்கிறார். இதனால்தான் எடப்பாடி பாஜகவை கழற்றிவிட பார்க்கிறார். ஓ பன்னீர்செல்வத்தையும் - எடப்பாடி பழனிசாமியையும் சமமாக மோடி நடத்த இதுதான் காரணம். ஓ பன்னீர்செல்வம் வேண்டும் என்று மோடி நினைக்கிறார்.

கூட்டணி
ஆனால் அதற்காக எடப்பாடியை பாஜக ஓரம்கட்டிவிடாது. அவரும் எங்களுக்கு வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அவரிடமும் 16 சதவிகித வாக்குகள் இருக்கின்றது. எடப்பாடி - மோடி - டிடிவி தினகரன் - கமல்ஹாசன், - அன்புமணி எல்லோரையும் வைத்து கூட்டணி உருவாக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தனியாக நிற்க நினைக்கிறார். தனியாக நின்றால் கருணாநிதி, ஜெயலலிதா போல தானும் பெரிய தலைவர் ஆகலாம் என்று எடப்பாடி நினைக்கிறார்.

சிறுபான்மை
கேள்வி; திமுக கூட்டணியை முறிக்க போகிறது, கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ் தயாராக இருக்க வேண்டும் என்றும் சிவி சண்முகம் சொல்கிறாரே?
பதில்: இதெல்லாம் தேறாது. அதிமுகவை விசிக போன்ற கட்சிகளும் நம்பவில்லை. அதிமுகவிற்கு சிறுபான்மையினர் வாக்குகள், தமிழ் தேசிய வாக்குகள் எதுவும் இல்லை. இந்த வாக்குகளை எல்லாம் திமுக, நாம் தமிழர் கட்சிகள் தங்கள் பக்கம் இழுத்துவிட்டன. இதனால் எடப்பாடியை நம்பி ஜெயிக்க முடியாது என்பதுதான் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விசிக கருத்து. இந்த கட்சி தலைவர்களே எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். அப்படி இருக்கையில் இவர்கள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுகவுடன் எப்படி கூட்டணி வைப்பார்கள்.

செல்வாக்கு இல்லை
விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் அதிமுகவிற்கு செல்வாக்கு இல்லை.விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் பக்கம் வர மாட்டார்களா என்ற கனவில், ஏக்கத்தில் பேசுகிறார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பே இல்லை. எடப்பாடிக்கு வாக்கு வங்கியே இல்லை. 15 சதவிகித வாக்குகள்தான் அவருக்கு இருக்கிறது. இதனால் கண்டிப்பாக விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எடப்பாடி பக்கம் வர மாட்டார்கள் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்து உள்ளார்.
-
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications