அதிகார போட்டி.. அப்படியே ஜாதி மோதலாக மாறுது.. அதிமுகவில் நடப்பதை பார்த்தீங்களா .. எல்லாம் போச்சு!
சென்னை: அதிமுகவில் நடக்கும் அதிகார மோதல் சாதி சண்டையாக உருவெடுக்க தொடங்கி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்த மோதல் தற்போது கட்சிக்குள் சாதி மோதலாக மாறிவிட்டது என்று எண்ண தோன்றுகிறது.
அதிமுகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கி உள்ளனர். இந்த நெருக்கடியின் விளைவாகவே அரசியல் மாற்றங்கள் ஏற்பட போவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். ஒருங்கிணைந்த அதிமுக மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்.

அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் சேர்க்கபட வேண்டும். தலைமை தொடர்பான முடிவுகளில் மாற்றங்களை செய்ய வேண்டும். அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும். கட்சி நிர்வாகிகளிடம் கேள்வி கேட்பது மட்டுமின்றி அவர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். அதிமுக பெரிய கூட்டணியை அமைக்க வேண்டும். இந்த கூட்டணிக்காக எடப்பாடி இறங்கி வர வேண்டும் என்றெல்லாம் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு உள்ளனவாம்.
எடப்பாடி பதிலடி: இந்த நிலையில்தான் அதிமுக தோல்விக்கு நான் காரணம் இல்லை, நிர்வாகிகள்தான் காரணம் என்று எடப்பாடி நினைக்கிறாராம். நிர்வாகிகள் சரியாக வேலை செய்யவில்லை. நான் ஒரு தலைவராக உத்தரவுகளை சரியாகவே பிறப்பித்தேன். ஆனால் நிர்வாகிகள் சரியாக வேலை செய்யவில்லை என்று எடப்பாடி நினைக்கிறாராம்.
இதனால் எடப்பாடி பழனிசாமி 2 மாவட்ட தலைவர்களை தினமும் சந்தித்து விளக்கம் கேட்டு வருகிறார். இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடந்தது. அதிமுகவின் தோல்விக்கான காரணங்களை ஆலோசனை செய்து இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன.
இந்த கூட்டம்தான் அதிமுகவில் இருக்கும் அதிகாரமோதலை தற்போது ஜாதி ரீதியிலான மோதலாக மாற்றி உள்ளதாக புகார் வைக்கிறார்கள்.
ஜாதி மோதல்; சிதம்பரம் மற்றும் மதுரை நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் 4வது நாளாக தேர்தல் முடிவுகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை செய்தார்.
அதில், அதிமுகவிற்கு பலர் சரியாக வேலை செய்யவில்லை. தேர்தல் களத்தில் பணிகளை செய்யவில்லை. மதுரைக்கு மட்டும் 8000 கோடிக்கு செய்து இருக்கிறோம். ஆனால் மதுரையில் நமக்கு ஏன் வாக்கு வரவில்லை. ஏன் தேர்தல் பணிகளை செய்யவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். மதுரை மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூவை நோக்கி அவர் இதை கேட்டுள்ளார்.
செல்லூர் ராஜு பதிலடி: மீட்டிங்கில் எடப்பாடி பழனிசாமியின் கேள்விகளுக்கு செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்துள்ளார். அதில், நாங்கள் என்ன காமராஜ், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவா? நிர்வாகிகள் அனைவரும் பம்பரமாக தான் பணியாற்றினோம் இதுக்கு மேல் எப்படி ஒரு கட்சியில் வேலை பார்ப்பது? மதுரை மாவட்டத்தில் மட்டும் வாக்கு குறையவில்லை. 800 கோடி திட்டம் கொடுத்தும் ஓட்டுவரலைனா நம்ம என்ன புரட்சிதலைவரா?? புரட்சிதலைவியா??, என்று செல்லூர் ராஜு காட்டமாக கேட்டுள்ளார். முக்கியமாக எடப்பாடியை நைசாக விமர்சனம் செய்யும் வகையில் செல்லூர் ராஜு பேசி உள்ளார்.
இதைத்தான் ஜாதி மோதல் என்கிறார்கள். அதன்படி எடப்பாடி பழனிசாமி கவுண்டர் பிரிவை சேர்ந்தவர். தேர்தல் தோல்விக்கு அவர் எல்லா பிரிவினரையும் விட்டுவிட்டு முக்குலதோர் பிரிவை சேர்ந்த செல்லூர் ராஜூவை கேள்வி கேட்பதை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். கவுண்டர் பிரிவினரிடம் அவர் இப்படி கடுமையான கேள்விகளை கேட்கவில்லை.
ஏற்கனவே முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலாவை எல்லாம் ஓரம்கட்டி எடப்பாடி.. இப்போது செல்லூர் ராஜூவை ஓரம்கட்ட பார்க்கிறார் என்ற குரல்கள் கேட்க தொடங்கி உள்ளன.
நிர்வாகிகள் பதில்; ஆனால் கட்சியில் சிலநிர்வாகிகளோ .. எடப்பாடி வேண்டுமானால் அப்படி இருக்கலாம்.. ஆனால் கட்சியில் ஜாதி மோதல் இல்லை. உதாரணமாக சமீபத்தில் எடப்பாடியை 6 தலைவர்கள் சந்தித்து நெருக்கடி கொடுத்தனர். அதில் 3 பேர் எடப்பாடி ஜாதிதான்.
அப்படி இருக்க இங்கே ஜாதி மோதல் இருக்கிறது என்று சொல்ல முடியாது. இது அதிகார மோதல்தான். எடப்பாடியின் செயல்பாடு தலைவராக சிறப்பாக இல்லை என்று புகார்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications