"குண்டர்கள்".. சைலேந்திர பாபு வரை போன அதிமுக மேட்டர்! குறுக்கே புகுந்த ஓபிஎஸ் மகன்! பெரிய திருப்பம்?
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்ட தடைவிதிக்க இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் டிஜிபி சைலேந்திர பாபுவிடம் முக்கியமான புகார் ஒன்றும் அதிமுக பொதுக்குழு தொடர்பாக அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு நடக்குமா.. நடக்காதா? இதுதான் தற்போது தமிழ்நாட்டில் மில்லியன் டாலர் கேள்வி. பொதுக்குழுவை எப்படியாவது கூட்டி.. அதில் பொதுச்செயலாளர் பதவிக்கான தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி துடித்துக்கொண்டு இருக்கிறார்.
எப்படி கூட்டுறீங்கன்னு பார்க்குறேன்.. நான்தான் ஒருங்கிணைப்பாளர்.. உங்களால் கூட்டத்தை நடத்த முடிகிறதா என்று பார்க்கிறேன் என்று ஓ பன்னீர்செல்வம் முஷ்டி முறுக்கி உள்ளார்.

தகவல் என்ன சொல்கிறது?
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அதிமுக தரப்பில் விசாரித்ததில்.. பொதுக்குழு நடப்பதே சந்தேகம்தான் பாஸ்.. அப்படியே நடந்தாலும் பாதியில் முடிந்துவிடும் நிலைதான் இருக்கிறது என்கிறார்கள் அதிமுகவினர் . என்னங்க சொல்றீங்க என்று கேட்டதற்கு.. தீர்மான குழுவிலேயே ரத்தம் வரும் அளவிற்கு கை கலப்பு வந்துவிட்டது. பொதுக்குழுவில் சண்டை வராது என்று நினைக்கிறீர்களா? அதெல்லாம் நடக்கும்.

புகார் சென்றது
இரண்டு தரப்பில் யாருக்கு ஆதரவாக சூழ்நிலை திரும்பினாலும் இன்னொரு தரப்பு மோதல் செய்து ஆட்டையை கலைக்க பார்ப்பார்கள். இரண்டு பக்கம் அடிதடி செய்ய தொண்டர் பலம் இருக்கிறது. இதனால்தான் கூட்டம் நடப்பதும் அல்லது முழுதாக நடப்பதும் சந்தேகமாக இருக்கிறது என்கிறார்கள் அதிமுகவினர். அதிமுக சார்பாக இதில் டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகாரும் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பொதுக்குழுவில் கலவரம் நடக்க வாய்ப்பு உள்ளதாக அதிமுக வழக்கறிஞர் அணி புகார் அளித்துள்ளது .

குண்டர்கள்
பொதுக்குழுவில் 1 லட்சம் பேர் வருவார்கள். வேறு வேறு ஜாதியினர் வருவார்கள். இதில் சில குண்டர்களும் ஊடுருவ வாய்ப்பு உள்ளது. அதிமுகவில் நிலவும் மோதலை பயன்படுத்தி இவர்கள் கூட்டத்தில் கலவரம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. பெரிய பாதுகாப்பு பிரச்சனை இது. இதனால் கூட்டத்திற்கு பாதுகாப்பு தர வேண்டும். இல்லையென்றால் கூட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபுவிடம் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளது.

அரசு தலையிடுமா
பொதுக்குழு கூடினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும். பொதுக்குழுவில் மோதல் வந்தால் சட்ட ரீதியாக பெரிய பிரச்சனை வரும். இதனால் பொதுக்குழுவிற்கு அனுமதிக்க அளிக்க கூடாது என்று அரசு தரப்பிடம் விண்ணப்பம் வைக்க ஓபிஎஸ் தரப்பு முயன்று வருவதாக தகவல்கள் வந்தன. இந்த நிலையில்தான் தற்போது வழக்கறிஞர் அணி சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவினரிடம் இதை பற்றி விசாரித்தால்.. அதிமுகவில் கலவரம் ஏற்பட்டால் அது கூட்டத்திற்குள் மட்டும் இருக்காது. வெளியேவும் பரவும்.

சீல் வைக்குமா?
தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்களில் பரவும். இது சட்ட ஒழுங்கு பிரச்சனை. எனவே பொதுக்குழுவை தடுக்க வேண்டும். அதிமுக அலுவலகத்திற்கு, சட்ட போராட்டம் முடியும் வரை சீல் வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் அரசு தரப்பில் அப்படி எதுவும் திட்டம் இருப்பதாக தெரியவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று ஓபிஎஸ்ஸை சந்தித்துவிட்டு பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ பி ரவீந்திரநாத் எம்பி.. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
Recommended Video

ஓபிஎஸ் மகன்
பொதுக்குழு குறித்து அதிமுக எப்படி முடிவு எடுக்க வேண்டுமோ.. அதேபோல் அரசும் முடிவு எடுக்க வேண்டும் என்று பகிரங்கமாக குறிப்பிட்டார். பொதுக்குழுவை நடத்த அரசு அனுமதிக்க கூடாது. இதில் திமுக தங்கள் பக்கம் நிற்க வேண்டுமே என்பதைத்தான் சூசகமாக ரவீந்திரநாத் சொல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக வழக்கறிஞர் அணி கடிதம், ஓபிஆர் பேச்சு ஆகியவை காரணமாக பொதுக்குழுவிற்கு தடை வருமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications