4-5 இடங்களில் அவுட்.. டெபாசிட் கூட கிடைக்காது.. எடப்பாடிக்கு எகிறிய பிரஷர்.. ஓ இதுதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் 4-5 இடங்களில் டெபாசிட் இழக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக நிறுத்திய பல வேட்பாளர்களை கட்சி நிர்வாகிகளுக்கே தெரியவில்லை. பஞ்சாயத்து தேர்தலில் நிற்க வேண்டியவர்களை வேட்பாளர்களாக எடப்பாடி தேர்வு செய்து இருக்கிறார், என்று மூத்த பத்திரிகையாளர் துரை கருணா தெரிவித்துள்ளார்.

2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவில் நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில்தான் அதிமுக கேம்பில் திடீரென சலசலப்புகள் ஏற்பட தொடங்கி உள்ளன.

Is AIADMK going to lose deposits in 4-5 seats in Tamil Nadu Lok Sabha elections 2024

அதிமுகவில் லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின் மீண்டும் உட்கட்சி மோதல் வெடிப்பதற்கான அறிகுறிகள் ஏற்பட தொடங்கி உள்ளன. அந்த கட்சியில் லோக்சபா தேர்தல் முடிந்து என்ன நடக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் துரை கருணா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி: அதில், அதிமுகவில் சில வேட்பாளர்கள் கடுமையாக அதிருப்தியில் இருக்கிறார்கள். சிலர் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என்று கூட கூறப்படுகிறது. ஆர்கே நகரில் திமுக டெபாசிட் இழந்தது. அதேபோல் பென்னாகரம் தொகுதியில் அதிமுக டெபாசிட் இழந்தது. இதெல்லாம் நடந்து இருக்கிறது. எதிர்ப்பு மனநிலை இருந்தால் இப்படி எல்லாம் நடக்கும். அதிமுகவில் 4-5 இடங்களில் டெபாசிட் இழக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக நிறுத்திய பல வேட்பாளர்களை கட்சி நிர்வாகிகளுக்கே தெரியவில்லை. பஞ்சாயத்து தேர்தலில் நிற்க வேண்டியவர்களை வேட்பாளர்களாக எடப்பாடி தேர்வு செய்து இருக்கிறார். அவரின் பக்கத்துக்கு ஊர் ஆட்களுக்கு கூட தெரியவில்லை. அந்த அளவிற்கு வேட்பாளர் தேர்வு மோசமாக இருந்துள்ளது. ஜெயலலிதாவே தோற்ற அரசியல் தமிழ்நாட்டு அரசியல்.

அப்படி இருக்க அதிமுகவின் இந்த பிரபலம் இல்லாத வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பது பெரிய விஷயம் கிடையாது. தேர்தலின் போது அதிமுக நிர்வாகிகளின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை. அதிமுகவில் நிர்வாகிகள் பெரும்பாலானோருக்கு தலைமை மீது விசுவாசம் இல்லை என்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் மக்களவை தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றுவதற்கு பதிலாக கடமைக்கு பணியாற்றினார்கள் என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இப்படி எடப்பாடி நிர்வாகிகள் மீது பழியை போட்டுவிட்டு தப்பிக்க பார்க்கிறாரோ என்று தோன்றுகிறது. அதற்குத்தான் கூட்டத்தை நடந்தினாரோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. எடப்பாடியே புலம்பும் நிலைக்கு கட்சி நிலைமை உள்ளது. ஜெயலலிதா ஒருமுறை 4 எம்எல்ஏக்களை வெல்லும் நிலைக்கு அதிமுகவை கொண்டு சென்றுள்ளார். அந்த அளவிற்கு மோசமான நிலைமை எல்லாம் அதிமுகவிற்கு நேர்ந்து உள்ளது.

ஏன் தேர்தல் பணிகளை செய்யவில்லை. பூத் கமிட்டி அளவில் கூட பணிகளை செய்யவில்லையே ஏன்? நான் நியமித்த பொறுப்பாளர்கள் கூட சரியாக பணிகளை செய்யவில்லை. பூத் அளவில் வேலை பார்த்தவர்கள் கூட சரியாக பணிகளை செய்யவில்லை. பலர் பாதியில் பூத் கமிட்டியில் இருந்து வெளியேறி உள்ளனர் என்று அவர் விரக்தியில் பேசி இருக்கிறார். பலர் கைவிட்டு விட்டார்கள் என்று புலம்பி இருக்கிறார். அந்த அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி வேதனையுடன் பேசி இருக்கிறார்.

இப்படிப்பட்ட காரணங்களால்தான எடப்பாடி நிர்வாகிகள் மீது பழிபோட்டு வருகிறார். என்று மூத்த பத்திரிகையாளர் துரை கருணா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+