சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ச்சே.. இப்படி பண்ணிட்டாரே.. இபிஎஸ் - ஓபிஎஸ் மூவ்.. அப்படியே அப்செட் ஆன "மலை".. வெடிக்கும் ர.ரக்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக சார்பாக ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் வாய்ப்பு கிடைக்காத சில சீனியர்கள் அப்செட் ஆகி உள்ளதாக ரத்தத்தின் ரத்தங்கள் அப்டேட் கொடுத்துள்ளனர்.

பல கட்ட பேச்சு வார்த்தைகள்.. ஆலோசனைகள்.. உட்கட்சி பூசல்களுக்கு பின் ஒரு வழியாக அதிமுக தனது எம்பி வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது. அதிமுக சார்பாக ராஜ்ய சபாவிற்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், முதுகளத்தூர் சேர்மேன் தருமர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

”பாரத் மாதா கி ஜே.. வந்தே மாதரம்” - 3 முறை முழங்கிவிட்டு சென்னையில் உரையை நிறைவு செய்த மோடி ”பாரத் மாதா கி ஜே.. வந்தே மாதரம்” - 3 முறை முழங்கிவிட்டு சென்னையில் உரையை நிறைவு செய்த மோடி

பொதுவாக ராஜ்ய சபா வேட்பாளர் அறிவிப்பு என்று இல்லாமல் எந்த விதமான வேட்பாளர் தேர்வாக இருந்தாலும் அதை முதலில் அறிவிப்பது அதிமுகவாகத்தான் இருக்கும். ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பின் அந்த வழக்கம் அதிமுகவில் இல்லை.

அதிமுக

அதிமுக

அதிலும் இந்த முறை கடும் தாமதத்திற்கு பின்புதான் அதிமுக சார்பாக எம்பி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். உட்கட்சி பூசல்.. இரட்டை தலைமையான ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நடந்த கடும் பேச்சுவார்த்தைகள் ஆகியவைதான் இந்த தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பல பேரை லிஸ்டில் வைத்து அதில் ஒவ்வொருவராகத்தான் நீக்கி கடைசியில் இந்த இரண்டு பேரை தேர்வு செய்துள்ளனர்.

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எம்பி ரேஸில் இருந்தாலும்.. கடைசியில் அவர் நீக்கப்பட்டார். அவரின் மகன் ஜெயவர்தன் நாடாளுமன்ற தேர்தலில் அடுத்த முறை நிற்பார் என்கிறார்கள். அதேபோல் கட்சிக்கு உள்ளேயே ஜெயக்குமாருக்கு பெரிய பதவி ஒன்று வழங்கப்பட உள்ளதாம். இதனால் அவருக்கு எம்பி பதவி வழங்க முடியாது என்று இரட்டை தலைமை கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அவரும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சைலன்ட் ஆகியுள்ளார்.

 செம்மலை

செம்மலை

ஆனால் வாய்ப்பு கிடைக்காத மற்ற தலைகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம். முக்கியமாக செம்மலை கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இவருக்கு ராஜ்ய சபா எம்பி பதவி வழங்கப்படும் என்று அப்போதே அதிமுக இரட்டை தலைமை வாக்கு வேறு கொடுத்ததாம். ஆனால் வன்னியர் - முக்குலத்தோர் பார்முலாவை பின்பற்றுவதற்காக இப்படி தர்மர் - சண்முகம் இருவரையும் அதிமுக இரட்டை தலைமை சூஸ் செய்துள்ளதாம்.

வாக்கு கொடுங்கள்

வாக்கு கொடுங்கள்

ஆனால் செம்மலை தரப்போ.. எனக்கு வாக்கு கொடுத்தார்கள்.. கடைசியில் இப்படி செய்துவிட்டார்களே என்று அப்செட்டில் இருக்கிறாராம். இது போக இன்னொரு பக்கம் கோகுல இந்திரா, எம்எல்ஏ இன்பதுரை ஆகியோரும் அப்செட்டில் இருக்கிறார்களாம். தர்மர் சேர்மேன் தானே.. அவருக்கு ஏன் திடீரென இவ்வளவு பெரிய எம்பி பதவி. கட்சிக்காக பல கஷ்டங்களை தாங்கிய எங்களுக்கு ஏன் பதவி கொடுக்கவில்லை என்று இருவரின் தரப்பும் அப்செட்டில் இருக்கிறதாம்.

இன்னொருவரும் அப்செட்

இன்னொருவரும் அப்செட்

இது போக இந்த லிஸ்டில் இருந்த இன்னொரு நபர்.. அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன். ராஜ் சத்யனுக்கு எம்பி வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரையும் கடைசியில் கழற்றிவிட்டுள்ளனர். நீங்கள் இடையில் டிடிவிக்கு நெருக்கமாக இருந்தீர்களே உங்களுக்கு எப்படி பதவி கொடுப்பது.. உங்கள் அப்பாதான் எம்எல்ஏவாக இருக்கிறாரேஎன்று இரண்டு விதமான காரணங்களை சொல்லி இவருக்கு கல்தா கொடுத்து இருக்கிறதாம் அதிமுக இரட்டை தலைமை... இப்படி எம்பி பதவி தங்களுக்கு கிடைக்கும் என்று நம்பிக்கையாக இருந்த பலர் கடுமையாக அப்செட் ஆகி உள்ளனராம்!

English summary
Is all well with AIADMK seniors after the selection of Rajya Sabha candidates? அதிமுக சார்பாக ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் வாய்ப்பு கிடைக்காத சில சீனியர்கள் அப்செட் ஆகி உள்ளத்தாக ரத்தத்தின் ரத்தங்கள் அப்டேட் கொடுத்துள்ளனர்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X