Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"க்ரிப்டோ டீலிங்".. பாஸ்கரை வைத்து புள்ளிகளை இணைத்த ஸ்டாலின்.. எடப்பாடி பக்கம் போன போகஸ்.. போச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கர் வீட்டில் செய்யப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு மூலம் அதிமுகவின் டாப் தலைகளுக்கு குறி வைக்கப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவில் மீண்டும் ரெய்டு காலம் தொடங்கி உள்ளது. முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு 2 வாரத்திற்குள் இப்போது நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ அதிமுகவை சேர்ந்த கேபிபி பாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையில், நாமக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.P.P.பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளார். மேற்படி வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315% அதிகமாகும்.

 வருமானம் அதிகம்

வருமானம் அதிகம்

எனவே இது சம்பந்தமாக அவர்கள் மீது 11.08.2022 ஆம் தேதி நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.1/AC/2022 பிரிவு 13(2) r/w 13(1) (e) of PC Act 1988, 109 r/w 13(2) r/w 13(1) (e) of PC Act 1988 and 13(2) r/w 13(1)(b) of the PC Act 1988 as amended in 2018 மற்றும் பிரிவு 12 r/w 13(2) r/w 13(1)(b) of the PC Act 1988 as amended in 2018-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்துவருகிறது. மேலும் இவ்வழக்கு மேற்படி வழக்கின் விசாரணை தொடர்பாக திரு.K.P.P.பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், அவரது அலுவலகங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 26 இடங்களில் (நாமக்கல்-24, மதுரை-1, திருப்பூர்-1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் இன்று 12.08.2022-ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது, என்று கூறப்பட்டுள்ளது.

 சோதனை சிக்கியது

சோதனை சிக்கியது

இந்த சோதனையில் பல க்ரிப்டோ கரன்சி முதலீடு ஆவணங்கள் கிடைத்துள்ளன. 26 லட்சம் இந்திய பணம் 1.20 லட்சம் வெளிநாட்டு பணம், 1.7 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, 4 சொகுசு காரல் என்று கணக்கில் வராத ஏகப்பட்ட ஆவணங்கள் சிக்கி உள்ளன. அதேபோல் கணக்கில் வராத பல முதலீட்டு ஆவணங்களும் இந்த ரெய்டில் சிக்கி உள்ளன. இந்த ரெய்டு காரணமாக அதிமுகவின் டாப் தலைவர்கள் குறி வைக்கப்படுகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரெய்டு

ரெய்டு

ஏனென்றால் நாமக்கல்லை சேர்ந்த பாஸ்கர் தங்கமணிக்கு நெருக்கமானவர். ஏற்கனவே தங்கமணி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது. தங்கமணி நாமக்கல்லில் எந்த காரியம் ஆக வேண்டும் என்றாலும் இவரைத்தான் அணுகுவார் என்று கூறப்படுகிறது. சமூக ரீதியாகவும் இவர்கள் நெருக்கமாக இருந்துள்ளனர். தங்கமணி மீது க்ரிப்டோ புகார் உள்ளது. இதுவும் இந்த ரெய்டு கவனத்திற்கு உள்ளாக முக்கிய காரணம்.

 எடப்பாடி

எடப்பாடி

அதேபோல் எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருந்த போது நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களை செய்ய நாமக்கல் அவ்வப்போது வருவார். அப்போதெல்லம் அவர் பாஸ்கரை சந்திக்கும் வழக்கம் கொண்டு இருந்தார். இவர்களும் சமூக ரீதியாக நெருக்கமானவர்கள். அப்படி இருக்கும் போது தற்போது நெடுஞ்சாலை துறை ஒப்பந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதால் பாஸ்கர் வீட்டில் அது தொடர்பாக ஆவணங்கள் எதுவும் சிக்கியதா என்று கேள்வி எழுந்துள்ளது.

 க்ரிப்டோ

க்ரிப்டோ

இந்த புள்ளிகளை எல்லாம் இணைத்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த ரெய்டுக்கு கிரீன் சிக்னல் கொடுத்தாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல் முன்னாள் அமைச்சர்கள் வேறு சிலரின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்ட போது க்ரிப்டோ ஆவணங்கள் கிடைத்தன. இதை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை எதாவது கனெக்ஷன் விசாரணையை நடத்துகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் நாட்களில் அடுத்தடுத்து இதில் விசாரணை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+