“செல்லப்பிள்ளை” அண்ணாமலை?.. தமிழ்நாட்டை விட்டு நகர்த்த முதல் ‘ஸ்டெப்’! ஆஹா.. இப்படி ஒண்ணு இருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாஜகவில் எந்த மாநில தலைவரையும் இன்னொரு மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பொறுப்பாளராக நியமித்ததில்லை, ஆனால் அண்ணாமலையை முதல் முறையாக இப்படி நியமிக்கிறார்கள். இது தேசிய தலைமை அண்ணாமலைக்கு கொடுத்துள்ள சலுகையா? அல்லது அவரை தமிழ்நாட்டில் இருந்து நகர்த்துவதற்கான முதல் ஸ்டெப்பா என சந்தேகம் கிளப்பியுள்ளார் பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன்.

அதிமுக - பாஜக கூட்டணி இடையே கடந்த சில வாரங்களாக கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்தன. அண்ணாமலை அதிமுக கூட்டணியே வேண்டாம் என காட்டமாகப் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே அதிமுக - பாஜக கூட்டணி தொடர்வதாகச் சொன்னார். அதை எடப்பாடி பழனிசாமியும் ஆமோதித்தார். ஆனாலும், அண்ணாமலை கூட்டணி உறுதி என்று அமித் ஷா சொல்லவில்லை எனக் கூறினார். இந்த விவகாரம் குறித்து ஒன் இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ளார் எஸ்.பி.லட்சுமணன்.

 Is BJP high command plans to move Annamalai out of Tamil Nadu : Journalist S P Lakshmanan

பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் பேசுகையில், "அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவரான பிறகு அவருக்கென சில ஸ்டைலை கையாள்கிறார். கடந்த சில வாரங்களாக நிகழ்ந்து வருவதைப் பார்த்தால் அண்ணாமலையின் செயல்பாடுகளை தேசிய தலைமை ஆதரிக்கவில்லையோ என்று தோன்றுகிறது. அண்ணாமலை ஏப்ரல் மாதம் ஒரு நடைபயணம் போகப்போவதாகச் சொன்னார். அப்போதுதான் ரஃபேல் வாட்ச் பில் மற்றும் திமுக அமைச்சர்கள்களின் ஊழல் மற்றும் சொத்து பட்டியலை வெளியிடுவேன் என்றும் சொன்னார். ஆனால், அவரது நடைபயணத்துக்கு தேசிய தலைமை அனுமதி கொடுக்கவில்லை.

 Is BJP high command plans to move Annamalai out of Tamil Nadu : Journalist S P Lakshmanan

அண்ணாமலைக்கு சலுகை? : அண்ணாமலை பாஜக மாநில தலைவரான பிறகு தமிழ்நாட்டின் அரசியல் கலாச்சாரம் மாசுபடத் தொடங்கிவிட்டது. ஆடியோ வீடியோ கலாச்சாரத்தால் ஒருவரை ஒருவர் நம்பிப் பேசுவதே அச்சத்திற்கு உள்ளாகி விட்டது. இதனால் தேசிய தலைமை எரிச்சலாகி அண்ணாமலையை தூரமாக வைக்க ஆரம்பித்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்த நேரத்தில் தான் கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு அண்ணாமலை இணை பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

பாஜகவை பொறுத்தவரை எந்த மாநில தலைவரையும் இன்னொரு மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பொறுப்பாளராக நியமிப்பதே கிடையாது. அண்ணாமலையை முதல் முறையாக இப்படி நியமிக்கிறார்கள். இது தேசிய தலைமை செல்லப்பிள்ளையாக ட்ரீட் செய்து அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்ட சலுகையா? அல்லது அவரை தமிழ்நாட்டில் இருந்து நகர்த்துவதற்கான முதல் ஸ்டெப்பா என்பது தெரியவில்லை.

 Is BJP high command plans to move Annamalai out of Tamil Nadu : Journalist S P Lakshmanan

அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமிக்கு பாஜகவை கழற்றிவிடும் எண்ணம் வந்துவிட்டது. அண்ணாமலையை பொறுத்தவரை, பாஜக கேட்கும் சீட்களுக்கு ஈபிஎஸ் ஒத்துவரவில்லை என்றால் அதிமுகவை கழற்றிவிடலாம் என்ற எண்ணம் இருக்கிறது. இதனால் தான் இரு கட்சியினருக்கும் மத்தியில் நம்பிக்கையற்ற சூழல் நிலவுகிறது. இப்படியான சூழலில் தான் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

 Is BJP high command plans to move Annamalai out of Tamil Nadu : Journalist S P Lakshmanan

அமித் ஷாவையே லெஃப்ட் ஹேண்டில் : அண்ணாமலை, தனது பதவி பறிபோகப்போவதால், புரட்சிகரமாக கருத்துகளைச் சொல்லலாம் என நினைக்கிறாரா அல்லது நிஜமாகவே பாஜக தனியாக நின்று பலத்தை நிரூபிக்கச் செய்யும் திட்டத்தில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. இதுபோல, இரு கட்சிகளும் வரும் நாட்களிலும் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்தால் அது தேர்தலில் இந்தக் கூட்டணிக்கு நல்லதல்ல.

தேர்தல் கூட்டணி தொடர்பாக அரசியலில் சொல்லப்படும் வார்த்தைகள் கல்லில் எழுதப்பட்டவை அல்ல, தண்ணீரில் எழுதப்பட்டவை தான் எனச் சொல்கிறார் அண்ணாமலை. அதுவும் அமித் ஷா அதிமுக பாஜக கூட்டணி தொடர்வதாகச் சொன்ன பிறகு சொல்கிறார். அப்படியென்றால், அமித் ஷா சொல்வதை நம்பாதீர்கள் எனச் சொல்வதாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும். அது தனது அதிகார எல்லையை மீறி அண்ணாமலை சொல்லியிருக்கும் வார்த்தை. என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+