50:50 ஆட்டம்.. சென்னையில் இருந்து வெறும் 50 கிமீதான்? மாண்டஸ் புயல் எங்கே தாக்கும்? வானிலை வார்னிங்!
சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறிய பின் எங்கே கரையை கடக்கும் என்று சென்னை ரெயின்ஸ் (chennairains.com) வானிலை அமைப்பு அப்டேட் வெளியிட்டு உள்ளது.
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாக மாறியது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த தாழ்வு பகுதி நகர தொடங்கும். தாழ்வு மண்டலமாக இது வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியை அடைந்து அங்கு வலிமைபெற்று மையம் கொண்டு நிற்கும். வங்கக் கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட உள்ளது.
இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 08-09-ம் தேதிகளில் வடதமிழகம்-புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இன்று மாலை உருவாகிறது மாண்டஸ் புயல்.. டிசம்பர் 9ஆம் தேதி அதீத கனமழை.. ரெட் அலர்ட்!

வானிலை மையம்
இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறிய பின் எங்கே கரையை கடக்கும் என்று சென்னை ரெயின்ஸ் (chennairains.com) வானிலை அமைப்பு அப்டேட் வெளியிட்டு உள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அப்டேட்டில், வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கு திசையில் 700 கிமீ தொலைவில் இந்த தாழ்வு பகுதி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வாழ்க்கை சுழற்சியை 3 வகையாக பிரிக்கலாம். முதல் பகுதியில், இந்த தாழ்வு பகுதி மேற்கு தென் மேற்கு திசையில் அந்தமான் கடலில் இருந்து தென்கிழக்கு வங்கக்கடல் நோக்கி நகரும். இந்த காலகட்டத்தில் இது வேகமாக வலிமை அடைந்து, இலங்கையின் கிழக்கு பக்கத்திற்கு வரும். இந்த தாழ்வு மண்டலத்தின் இரண்டாம் கட்டத்தில், அந்த தாழ்வு மண்டலம் மேலும் வடமேற்கு திசையில் நகரும். இந்த சமயத்தில் அது மேலும் வலிமை அடையும்.

சென்னை ரெயின்ஸ்
அதேபோல் கடைசி காலகட்டத்தில்தான் இந்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்த 12- 18 மணி நேரத்தில் இந்த மாற்றங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. தெற்கு வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கு ( ஆழ்ந்த தாழ்வு மண்டலம் என்று அழைக்கலாம்.. ஆனால் இந்திய வானிலை மையம் இன்னும் அறிவிக்கவில்லை) சாதகமான சூழ்நிலை நிலவிக்கொண்டு இருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த தாழ்வு மண்டலத்திற்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாகவே வானிலை சார்ட்டுகள் தெரிவிக்கின்றன. இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலிமை அடைவதற்கு ஏற்ற சூழ்நிலை இருக்கிறது. அதேபோல் கடைசி காலகட்டத்தில்தான் இந்த தாழ்வு மண்டலம் மண்டாஸ் புயலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்த 12- 18 மணி நேரத்தில் இந்த மாற்றங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. தெற்கு வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கு ( ஆழ்ந்த தாழ்வு மண்டலம் என்று அழைக்கலாம்.. ஆனால் இந்திய வானிலை மையம் இன்னும் அறிவிக்கவில்லை) சாதகமான சூழ்நிலை நிலவிக்கொண்டு இருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த தாழ்வு மண்டலத்திற்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாகவே வானிலை சார்ட்டுகள் தெரிவிக்கின்றன. இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலிமை அடைவதற்கு ஏற்ற சூழ்நிலை இருக்கிறது.

கணிப்பு
இது தமிழ்நாட்டின் கடலோர பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. 24 மணி நேரத்திற்கு பின்பாக இந்த தாழ்வு மண்டலம் வலிமை அடைவதில் இருந்து சிறிய பிரேக் எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. 24 மணி நேரத்திற்கு பின் காற்று வெட்டு காரணமாக, இது மேலும் வலிமை அடைவது நிற்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த மாற்றங்களை நாம் கவனமாக கண்காணிக்க வேண்டும். இப்போது புயலின் வாழ்க்கை சுழற்சியின் Phase 1 முடிந்துவிட்டது. Phase 2 தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. Phase 3யை நெருங்கிக்கொண்டு இருக்கிறோம். இந்த புயல் கொஞ்சம் வலிமை குறைந்த புயலாக வடக்கு கடலோர தமிழ்நாட்டில், சென்னைக்கு அருகே கரையை கடக்க வாய்ப்புகள் உள்ளன.

புயல்
அதற்கான சூழ்நிலையே தற்போது நிலவுகிறது. சென்னையில் இருந்து 50 கிமீ தூரத்தில் 9ம் தேதி இந்த புயல் கரையை கடக்கலாம். ஆனால் இப்போது இருக்கும் கேள்வியே.. இது கரையை கடக்கும் போது எவ்வளவு வலிமையோடு இருக்கும் என்பதுதான். இதில் 50:50 சான்ஸ் உள்ளது. அதாவது தீவிர வலிமையோடும் கரையை கடக்கலாம். ஒரு எலும்புக்கூடு போலவும் வலிமை இன்றி கரையை கடக்கலாம். எனவே எதற்கும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.நாளை காற்று வேகம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து டெல்டா பெல்ட் வரை 60-70 km/h வேகத்தில் இருக்கும். கடலோர மாவட்டங்களில் 50 கிமீ பகுதிக்கு பெரும்பாலும் காற்று வேகம் 40-50 km/h என்ற அளவில் இருக்கும்.

எங்கே கரையை கடக்கும்
9ம் தேதியில் இருந்து இந்த காற்று வேகம் குறையும் வாய்ப்புகள் உள்ளன. நிலப்பகுதியை நெருங்க நெருங்க இந்த வேகம் குறையும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் புயலின் வலிமையை பொறுத்துதான். கரையை கடக்கும் போது புயல் வலிமையாக இருந்தால் காற்று வேகமும் வலிமையாக இருக்கும். இன்று இரவு வரை தமிழ்நாட்டில் பெரிதாக மழை இருக்காது. டெல்டா மாவட்டங்களில்தான் இதனால் நள்ளிரவில் இருந்து மழை பெய்யும். நாளையில் இருந்து டெல்டா - சென்னை மாவட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மழை பெய்யும். நாளை மாலை மழை தீவிரம் அடையும். இந்த புயல் காரணமாக ஏற்படும் தீவிர மழையானது 8ம் தேதி இரவு பெய்யும். 9ம் தேதி அதிகாலை இதனால் தீவிர கனமழை பெய்யும், என்று சென்னை ரெயின்ஸ் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.