கருணாநிதியின் லெப்ட் ஹேண்ட், ரைட் ஹேண்ட்.. பழைய "பெரிய" கைகளை கொண்டு வந்த ஸ்டாலின்! இதுதான் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்த இரண்டு முன்னாள் அதிகாரிகளை களமிறக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். தனக்கு ஆலோசகராக களமிறக்க இவர் தீவிரமாக திட்டங்களை வகுத்து வருகிறாராம்.

கே. அசோக் வர்தன் ஷெட்டி, கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்தியப் பல்கலைக்கழகமான சென்னை, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆவார். துணைவேந்தராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, ஷெட்டி 1983 ஆம் ஆண்டு பேட்ச்சின் தமிழ்நாடு கேடரில் இந்திய நிர்வாகப் பணி (IAS) உறுப்பினராக இருந்தார்.

MK Stalin

ஐஏஎஸ் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளர், கல்லூரிக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட பல முக்கியப் பணிகளை அவர் வகித்தார்; மாவட்ட ஆட்சியர், விழுப்புரம்; ஊரக வளர்ச்சி இயக்குனர்; மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம், (டாஸ்மாக்); செயலாளர், முதலமைச்சர் செயலகம்; ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மை செயலாளர்; நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் முதன்மை செயலர் உட்பட பலர் கலந்து கொண்டனர். வெற்றிகரமான திட்டத்தை செயல்படுத்துவது அவரது பலமாக இருந்தது. தமிழக அரசால் பலமுறை பாராட்டப்பட்டது.

அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு மிக நெருக்கம் இவர். முக்கியமாக கருணாநிதிக்கு இவர் லெப்ட் ஹேண்ட் போல செயல்பட்டார். அதேபோல் இன்னொரு அதிகாரி நாகநாதன் கருணாநிதிக்கு மிக நெருக்கமாக இருந்தார். இவர் திட்டக்குழு துணை தலைவராக இருந்தவர்.

மீண்டும் வருகிறார்கள்: முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் அவருக்கு உறுதுணையாக இந்த இரண்டு முன்னாள் அதிகாரிகளை களமிறக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். தனக்கு ஆலோசகராக இவர்களை களமிறக்க தீவிரமாக திட்டங்களை வகுத்து வருகிறாராம்.

அதன்படி தனக்கு ஆட்சியில் ஆலோசனைகளை வழங்க.. சில அதிகாரிகளை நம்ப முடியாத நிலையில் அவர்களுக்கு பதில் இந்த 2 பேரை நெருக்கமாக வைத்துக்கொள்ள ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். விரைவில் இவர்களுக்கு சிறப்பு பொறுப்புகளை ஸ்டாலின் வழங்க உள்ளாராம்.

அதிகாரிகள் மாற்றம்; விரைவில் இன்னும் பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில், தமிழ்நாடு அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பல்வேறு முக்கியமான அதிகாரிகள், ஆட்சியர்கள், ஆணையர்கள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர்.

ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய டி.ஆர்.ஓ., துர்கா மூர்த்தி, வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு கைவினைப் பொருள் வளர்ச்சி வாரிய நிர்வாக இயக்குநர் கவிதா ராமு, அருங்காட்சியகங்களின் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். POWERFIN நிறுவன நிர்வாக இயக்குநர் அம்பலவானன், தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நிதித்துறை இணைச் செயலாளர் கிருஷ்ணனுன்னி, கருவூலத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் சுஹபுத்ரா நெல்லை மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இணை தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த், ஓசூர் மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

அரசு துணை செயலாளர் அனு, கடலூர் மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நாகை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங், சேலம் மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை விருந்தினர் மாளிகை பொறுப்பு அதிகாரி கந்தசாமி, ஆவடி மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

குடிமைப் பொருள் விநியோக கழக பொது மேலாளர் சதீஷ், ஈரோடு கூடுதல் ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். கைத்தறித்துறை ஆணையர் விவேகானந்தன், நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநராக மாற்றம் பொதுத்துறை கூடுதல் செயலாளர் சிவஞானம், சி.எம்.டி.ஏ. தலைமை செயல் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+