தேசிய அளவில் காங்கிரசுக்கு.. கைகொடுத்த "திமுக ஸ்டைல்".. அரசியல் பாணியே மாறுதே.. பாஜகவிற்கு நெருக்கடி
சென்னை; தமிழ்நாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பெண்களின் வாக்குகளை தங்களை நோக்கி திமுக - காங்கிரஸ் இழுக்க தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் அதிமுகவின் மிகப்பெரிய வாக்கு வங்கியாக இருந்தது பெண்களின் வாக்கு வங்கிதான். பெண்களின் வாக்கு வங்கிதான் அதிமுகவின் வெற்றிகளுக்கான மிகப்பெரிய சோர்ஸ் ஆக இருந்தது. ஜெயலலிதா பெண் தலைவர் என்பதால் பெண்களின் வாக்குகள் அந்த கட்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவியது.

ஆனால் அதிமுகவின் இந்த வாக்கு வங்கியில் திமுக தமிழ்நாட்டில் ஏற்கனவே கைவிட்டது. மகளிர் உரிமை தொகை + இலவச பேருந்து + புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட பெண்களுக்கான திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் திமுக அதிமுகவின் பெண்களுக்கான வாக்கு வங்கியை அப்படியே தங்கள் பக்கம் இழுத்துவிட்டது.
கிட்டத்தட்ட அதிமுகவின் அஸ்திவாரத்தில் கூட திமுக கைவைத்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். இது தொடர்பாக நம்மிடம் பேசிய சில அரசியல் விமர்சகர்கள், இப்போது பெண்கள் வாக்குகள் அதிகம் வந்தால் அது திமுக வாக்குகள் . திமுக வாக்குகள் வந்து குவிந்து உள்ளது. பெண்கள் வாக்குகளை மொத்தமாக பல்வேறு திட்டங்கள் மூலம் அள்ளி உள்ளனர். மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து மூலம் இப்படிப்பட்ட பெண்களின் வாக்குகளை பெற்றுள்ளனர்.
ஒரு காலத்தில் அதிமுகவிடம் இருந்த வாக்கு வங்கியை தற்போது திமுக தங்கள் பக்கம் இழுத்துள்ளது என்று கூறப்படுகிறது.
திமுக ஸ்டைல்; இப்போது திமுகவின் ஸ்டைலை தேசிய அளவில் காங்கிரஸ் கடைபிடிக்க தொடங்கி உள்ளது. உதாரணமாக கர்நாடகாவில் இதே இலவச பேருந்து + உரிமை தொகை திட்டம் அங்கே காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க காரணமாக இருந்தது. லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இது மாறி உள்ளது. இமாச்சல பிரதேசத்திலும் காங்கிரஸ் வெல்ல இது காரணமாக இருந்தது.
இப்போது தேசிய அளவில் பெண்கள் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செல்ல தொடங்கி உள்ளது. இதன் காரணமாகவே என்னவோ தாலி செண்டிமெண்ட் பற்றி மோடி திடீரென மேடைகளில் பேச தொடங்கி உள்ளாரோ என்றும் எண்ண தோன்றுகிறது.
காங்கிரஸ் அறிவிப்புகள்; ஏற்கனவே காங்கிரஸ் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில்,
ஒவ்வொரு ஏழை இந்திய குடும்பத்திற்கும் நிபந்தனையற்ற பணப் பரிமாற்றமாக ஆண்டுக்கு ₹ 1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டத்தை தொடங்க காங்கிரஸ் அறிவித்து உள்ளது. வருமான லிஸ்டில் அடிமட்டத்தில் உள்ள குடும்பங்களில் ஏழைகள் அடையாளம் காணப்படுவார்கள். இவர்களின் வீட்டு பெண்களுக்கு வரும் ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.
அந்தத் தொகை, குடும்பத்தின் மூத்த பெண்ணின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றப்படும். வீட்டில் பெண் இல்லாவிட்டால், அது குடும்பத்தின் மூத்த உறுப்பினரின் கணக்கிற்கு மாற்றப்படும்.
இந்தத் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் பயனாளிகளின் குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் வறுமையை ஒழிப்பதில் அதன் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக மதிப்பாய்வு செய்யப்படும்.
2025 முதல் மத்திய அரசு வேலைகளில் ஒன்றரை (50 சதவீதம்) பெண்களுக்கு ஒதுக்குவோம் என்று காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த திமுக ஸ்டைல் அறிவிப்பு பெண்களுக்கு தேசிய அளவில் காங்கிரஸ் பக்கம் கவனத்தை திருப்ப தொடங்கி உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications