யூடர்ன்.. சி.ஆர்.சரஸ்வதியிடம் பேசிய ஸ்டாலின்.. என்னங்க நடக்குது? அதிர்ந்து போன அமமுகவினர்! நோ சான்ஸ்
சென்னை: அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியை இன்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்துப் பேசியது அமமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். ஆனால், கட்சி தாவும் சூழல் எதுவும் இல்லை என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரத்தினர்.
சென்னை அசோக் நகரில் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்துவிட்டு அங்கிருந்த புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த பகுதியில் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியை பார்த்தவுடன் வாகனத்தை நிறுத்தி இறங்கி வந்து சந்தித்து அவருடன் சில நிமிடங்கள் உரையாடினார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமமுகவினர் அதிர்ந்துபோனது ஏன்: குறிப்பாக, அமமுக கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இது மிகப்பெரிய ஷாக்காக அமைந்தது. காரணம், இன்று சென்னை கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அவரது நினைவு நாளையொட்டி பல்வேறு கட்சியினரும் மரியாதை செலுத்தினர். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட அமமுக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வு முடிந்த அடுத்த சில நிமிடங்களில் தான், முதல்வர் ஸ்டாலின் - சி.ஆர்.சரஸ்வதி சந்திப்பு நடைபெற்றது. தனது வீட்டுக்கு அருகே சாலையோரம் நின்ற சி.ஆர்.சரஸ்வதி, முதல்வர் கார் வருவதைப் பார்த்து வணக்கம் சொன்னதும், உடனே கவனித்த முதல்வர் காரை நிறுத்தி இறங்கி வந்து சி.ஆர்.சரஸ்வதியிடம் பேசியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிருப்தி?: கடந்த சில மாதங்களுக்கு முன்பு சசிகலா - தினகரன் இடையே உரசல் ஏற்பட்ட நிலையில், சசிகலாவை யாரும் சந்திக்கக்கூடாது என தினகரன் ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவு போட்டதால் சிஆர் சரஸ்வதி அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. எனினும், அமமுக கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் சி.ஆர்.சரஸ்வதி. இந்நிலையில் தான் இப்படி ஒரு சந்திப்பு நடந்தது.
இதனால், சி.ஆர்.சரஸ்வதி திமுகவில் இணையக்கூடும் என்ற பேச்சுகள் தீயாகக் கிளம்பின. இது அமமுகவினருக்கு பெரும் ஷாக் கொடுத்த நிலையில், சி.ஆர்.சரஸ்வதியே இதுகுறித்துப் பேசியுள்ளார். முதலமைச்சர் வருவதாகச் சொன்னார்கள். சி.எம் எங்கள் வீட்டை தாண்டி போவதால் வணக்கம் சொல்லலாம் என நின்று கொண்டிருந்தேன். நான் வணக்கம் சொல்லிவிட்டு இங்கேயே நின்றேன். முதல்வர் திரும்பி காரில் இருந்து இறங்கி வந்து "எப்படி இருக்கீங்க.. நல்லாருக்கீங்களா?" என விசாரித்தார்.
நடந்தது இதுதான்: என்ன பிரச்சனைகள் இருக்கிறது எனக் கேட்டார். முதலமைச்சரிடம் எங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை சொன்னேன். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவது பற்றி கூறினேன். அதற்கு முதலமைச்சர் இதற்காகத்தான் ஆய்வு செய்ய வந்தேன்.. விரைவில் பணிகளை முடித்து விடுவோம் எனக் கூறினார். மக்களின் பிரச்சனைகளை காது கொடுத்துக் கேட்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றி. உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
சி.ஆர்.சரஸ்வதி, 1999ஆம் ஆண்டில் அதிமுகவில் சேர்ந்தார். அதன் பிறகு நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்துள்ளார். 2014ஆம் ஆண்டில், ஜெயலலிதாவால் அதிமுக செய்தித் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் சி.ஆர்.சரஸ்வதிக்கு சீட் கொடுத்தார் ஜெயலலிதா. எனினும், அவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
ஜெயலலிதா விசுவாசி: அதிமுகவில் இருந்து ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சேர்ந்து சசிகலா, தினகரனை வெளியேற்றியபோது, தினகரன் பக்கம் சேர்ந்தார் சி.ஆர்.சரஸ்வதி. அமமுக கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே டி.டி.வி.தினகரனுடன் இணைந்து பயணித்து வருகிறார். அமமுகவில் தினகரனுக்கு நம்பிக்கையாக இருந்த பல முக்கிய நிர்வாகிகள் அமமுகவை விட்டு வெளியேறியபோதும்கூட அமமுகவை விட்டு விலகாமல் தொடர்ந்து வரும் சி.ஆர்.சரஸ்வதிக்கு கொள்கைப் பரப்பு செயலாளர் பதவியை அளித்தார் தினகரன்.
இப்படியான சூழலில் டிடிவி தினகரன் மீதான அதிருப்தி காரணமாக திமுக பக்கம் சிஆர் சரஸ்வதி செல்லக்கூடுமோ என்ற சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. எனினும், சி.ஆர்.சரஸ்வதி இன்று பேசும்போது, முதல்வர் ஸ்டாலின் செயலை வியந்து பாராட்டி இருந்தாலும், எதிர்க்கட்சி என்றே குறிப்பிட்டார். அதுபோக, சிஆர் சரஸ்வதி கட்சி தாவும் சூழல் இப்போது இல்லை என்கிறார்கள் அமமுக வட்டாரத்தினர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications