சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆபரேஷன் கச்சத்தீவு.. "கண்" வைத்த டெல்லி.. அண்ணாமலையின் இலங்கை ட்ரிப்பிற்கு இதுதான் காரணமா? உண்மையா?

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்ச தீவை மீட்பதற்கான முயற்சிகளில் மத்திய பாஜக அரசு களமிறங்கி உள்ளதாக ஊடகங்களில் செய்தி ஒன்று உலவ தொடங்கி உள்ளது.

Recommended Video

    இந்திய பக்தர்களுக்கு இலவச விசா வழங்கணும்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி!

    இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடத்தும் உழைப்பாளர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 30ம் தேதி இலங்கை சென்றார். அங்கு இருக்கும் சீதா கோவில் உட்பட இந்து கோவில்கள் பலவற்றில் அண்ணாமலை சந்திப்பு நடத்தினார்.

    மேலும் இலங்கையில் மலையக தமிழர்கள், மீனவர்கள் உடன் அண்ணாமலை சந்திப்பு நடத்தினார். இலங்கையில் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    இந்து மதத்தில் ஜாதி கிடையவே கிடையாது! பாகுபாடு உருவாக்கியது கிறிஸ்தவ மிஷனரிகள் தான்! அண்ணாமலை சாடல் இந்து மதத்தில் ஜாதி கிடையவே கிடையாது! பாகுபாடு உருவாக்கியது கிறிஸ்தவ மிஷனரிகள் தான்! அண்ணாமலை சாடல்

    இலங்கை தமிழர்கள்

    இலங்கை தமிழர்கள்

    இலங்கையில் பல்வேறு பகுதிகளில் தமிழர்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடத்திய உழைப்பாளர் தின நிகழ்விலும் அண்ணாமலைக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கு பிரதமர் மோடி கண்டிப்பாக உதவி செய்வார்.. பிரதமர் மோடி தங்கள் உதவியின் மூலம் சஞ்சீவி மழையை இங்கே அனுப்பி இருக்கிறார் என்று அண்ணாமலை குறிப்பிட்டார். இதையடுத்து சென்னைக்கு திரும்பிய அண்ணாமலை கச்சா தீவு பற்றி பேசினார்.

    கச்சத்தீவு

    கச்சத்தீவு

    யாழ்ப்ப்பாணத்தில் தமிழர்களுக்காக பிரதமர் மோடி 5 ஆண்டுகளாக செய்திருக்கும் சாதனை உலகத்துல எங்கேயுமே அப்படி ஒரு வேலை நடந்திருக்க வாய்ப்பே இல்லை. கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்வதற்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு இலங்கை அரசு இலவச விசா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக சென்னை திரும்பிய அண்ணாமலை தெரிவித்தார். ஆனால் கச்ச தீவிற்கு செல்ல தமிழர்களுக்கு விழாவின் போது விசா கேட்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    என்ன பிளான்

    என்ன பிளான்

    இந்த நிலையில் அண்ணாமலையின் இந்த பேட்டியை தொடர்ந்து இலங்கையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்ச தீவை மீட்பதற்கான முயற்சிகளில் மத்திய பாஜக அரசு களமிறங்கி உள்ளதாக ஊடகங்களில் செய்தி ஒன்று உலவ தொடங்கி உள்ளது. அதன்படி கடந்த 1974-ல் கச்சத்தீவை மத்திய அரசு இலங்கைக்கு கொடுத்தது. இதன் காரணமாகவே தற்போது தமிழ்நாடு மீனவர்கள் தற்போது மீன் பிடிக்க கடுமையாக சிரமப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாகவே அவரகள் சிறைபிடிக்கவும் படுகிறார்கள்.

     கச்சத்தீவு மீட்கப்படுமா?

    கச்சத்தீவு மீட்கப்படுமா?

    இதை மீட்க வேண்டும் பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில்தான், கச்சத்தீவை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு எடுக்க மத்திய அரசு முயற்சி செய்யலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கையின் பொருளாதாரம் மேலும் சரிவை சந்திக்கும் என்றே ஐஎம்எப் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இலங்கைக்கு செய்யப்படும் பொருளாதார உதவிக்கு கைமாறாக கச்சத்தீவை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு எடுக்க மத்திய அரசு முயற்சி செய்யலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இலங்கை பயணம்

    இலங்கை பயணம்

    அண்ணாமலையின் இலங்கை பயணமும் இதற்கான டீசராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சீனா இத்தனை ஆண்டுகள் இலங்கைக்கு கடன் கொடுத்து அதை கட்டுப்படுத்தி வந்தது. இப்போது இலங்கைக்கு உதவுவதன் மூலம் இந்தியா இலங்கையை தனது பக்கம் இழுக்க பார்க்கிறது. இந்திய பெருங்கடலில் அதிகம் செலுத்த கச்சத்தீவு இந்தியாவிற்கு பாதுகாப்பு ரீதியாக உதவியாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு கச்சத்தீவை மீட்கும் ஆபரேஷனை இலங்கை கையில் எடுக்கலாம் என்று தகவல்கள் வருகின்றன. இதன் காரணமாகவே இலங்கை செல்லும் முன் அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது.

    English summary
    Is Delhi focusing on getting Kachchatheevu back to India? What is the plan behind the Annamalai trip to Sri Lanka? இலங்கையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்ச தீவை மீட்பதற்கான முயற்சிகளில் மத்திய பாஜக அரசு களமிறங்கி உள்ளதாக ஊடகங்களில் செய்தி ஒன்று உலவ தொடங்கி உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X