ஆபத்து.. உடனே நிறுத்துங்க.. நடிகர் தாமுவிற்கு எதிராக அன்பிலுக்கு போன ஷாக் மெசேஜ்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தாமு பள்ளிகளில் நிகழ்த்தும் சுயமுன்னேற்ற பேச்சுகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நடிகர் தாமு பல்வேறு தமிழ் படங்களில் காமெடியனாக நடித்தவர். பல பெரிய ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் பேச்சாளராக பள்ளிகளில் பேசி வருகிறார். சுயமுன்னேற்ற பேச்சாளராக இவர் மாணவ, மாணவியர் முன் பேசி வருகிறார்.

 Is Dhamu speeches in Schools really a positive one for students?

இந்த நிலையில்தான் தாமு மீது முக்கியமான சில குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அவர் பள்ளிகளில் மாணவ, மாணவியரை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் விதமாக பேசுகிறார். கடுமையான மன ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார். பொதுவாக சுயமுன்னேற்ற பேச்சாளராக பேசும் நபர்கள்.. நம்மிடம் உள்ள குறைகளை களைந்து பாசிட்டிவாக உணர வைக்க வேண்டும்.

தவறு செய்கிறாரா: பேசி முடித்துவிட்டு சென்றால் ஒரு புத்துணர்ச்சி இருக்க வேண்டும். வாழ்க்கை குறித்த நம்பிக்கை இருக்க வேண்டும். சந்தோசமாக இருக்க வேண்டும். ஏற்கனவே படிப்பில் அதிக டென்ஷனாக உள்ளவர்கள் இன்னும் நன்றாக, அமைதியாக இருக்க வேண்டும். மன அமைதி, மகிழ்ச்சி, தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.

ஆனால் சுயமுன்னேற்ற பேச்சாளராக வரும் தாமு மாணவ, மாணவியரை அழ வைக்கிறார். கடுமையான சொற்கள் மூலம் அவர்களை கலங்க வைத்து குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகிறார் என்ற புகார்கள் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சமீபத்தில் அவர் பேசினார்.

காவல்துறை சார்பில் அரசு பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் முன் அவர் பேசினார். 'மாண்புமிகு மாணவிகள்' திட்டம் சார்பாக போலீசார் அழைப்பின் பெயரில் இவர் மாணவிகள் முன்னிலையில் பேசினார்.

இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு வாழப்பாடி அருகே சேசன்சாவடியில் நடந்த போது சுமார் 1 மணி நேரம் தாமு பேசினார். அவர் பேசுவதை கேட்க கேட்க மாணவிகள் கண்ணீர் வடித்தனர். பெற்றோர் பற்றியும், படிப்பு பற்றியும் பாசிட்டிவாக பேசாமல்.. குற்ற உணர்ச்சியை தூண்டும் வகையில் அவர் பேசியது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது.

தடை வேண்டும்: மாணவிகளுக்கான சுய ஒழுக்கம் பற்றி நீண்ட நேரம் அவர் பேசினார். அதேபோல் தற்பாதுகாப்பு, தன்நிலை உணர்தல் குறித்தும் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். அவர் பேசிய சில கருத்துக்கள் சிறப்பாக இருந்தாலும் சில கருத்துக்கள் மாணவிகளை குற்ற உணர்ச்சியில் தள்ளும் அளவிற்கு கொடுமையானதாக இருந்தது. இந்த நிலையில்தான் நடிகர் தாமு பள்ளிகளில் நிகழ்த்தும் சுயமுன்னேற்ற பேச்சுகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 Is Dhamu speeches in Schools really a positive one for students?

நெட்டிசன் ஒருவர் செய்துள்ள போஸ்டில், அன்பின் அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா, தயவு செய்து இந்த கருமத்தை நிறுத்த வழி செய்யுங்கள். குழந்தைகளை இது மிக மோசமான மன சிதைவுக்கு உள்ளாக்கும். கூட்டம் கூட்டமாக இப்படி குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி அழ வைத்தால் அது அவர்களின் குண நலன், மன வளர்ச்சியைப் பாதிக்கும்.

இது அரசு பள்ளியில் தான் நடந்துள்ளது. தாமு இலவசமாக செய்திருக்க வாய்பில்லை..இது போன்ற emotional Abuseக்கு நம் பிள்ளைகள் ஆளாக கூடாது. நடவடிக்கை குறைந்தபட்சம் ஒரு சுற்றறிக்கையாவது வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+