நிர்மலா சீதாராமன் சொல்ற கணக்கு இடிக்குதே? SIR பற்றின புரிதலே இல்லை.. டபுள் கேம் ஆடுதா திமுக: பிரபலம்
சென்னை: எஸ்ஐஆர் கொண்டு வந்து, அதை ஏன் இவ்வளவு அவசர அவசரமாக செய்கிறார்கள் என்பதுதான் அனைவரது கேள்வியாக உள்ளது. 30 நாளைக்குள் முடிக்க வேண்டும் என்ற கெடு எதற்கு? அப்படியே விட்டிருந்தாலே, வருகிற ஜனவரி மாதத்தில் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த பணியை வழக்கம்போல் துவங்கியிருப்பார்கள்" என்று பத்திரிகையாளர் ஷ்யாம் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னை வந்திருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "கடந்த 1952ம் ஆண்டு முதல் 13 முறை எஸ்ஐஆர் நடைபெற்றுள்ளது. அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக எதுவும் செய்யாமல், இப்போது ஏன் போராட்டம் நடத்துகிறது? துணை முதல்வர் உதயநிதி 'எஸ்ஐஆர்' என்றால் என்ன என தெரியாமல் 'ரிவிஷன் 'என்பதை 'ரெஸ்ட்ரிக் ஷன்' என்கிறார்?

கொளத்தூரில் போலி வாக்காளர்கள் ஓட்டுப் போட்டுத்தான் ஸ்டாலின் வெற்றி ஜெயித்தாரா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி, திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
சிறப்பு திருத்தங்கள்
இந்நிலையில், Tamilkural TV என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், எஸ்ஐஆர் என்ற சிறப்பு திருத்தத்தை அவசர அவசரமாக நடத்துவதைதான் நாம் எதிர்க்கிறோம்.. இந்த புரிதல்கூட நிர்மலா சீதாராமனுக்கு இல்லை..
இதற்கு முன்பு 13 நடத்தியிருப்பதாக சொல்கிறார்.. அது தவறான எண்ணிக்கையாகும்.. இதுவரை 7 முறைதான் எஸ்ஐஆர் நடத்தப்பட்டுள்ளது.. சில மாநிலங்களில் 8 முறை நடந்திருக்கும்.. அதற்காக 13 முறை எல்லாம் நடத்தவில்லை.
அவசர அவசரமாக ஏன்?
இதற்கு முன்பு நடத்தப்பட்ட எஸ்ஐஆர்களில் ஒவ்வொன்றுக்கும் இடைவெளி அதிகமாக இருக்கும்..2 வருடம் இடைவெளிகூட இருந்திருக்கிறது.. எனவே ஒரு திட்டத்தை செயல்படுத்தி முடிப்பதற்கு ஒரு காலகட்டம் உள்ளது.. அப்படியிருக்கும்போது, ஏன் இவ்வளவு அவசரமாக செய்கிறீர்கள் என்பதுதான் அனைவரது கேள்வியாக உள்ளது..
30 நாளைக்குள் முடிக்க வேண்டும் என்ற கெடு எதற்கு? இதை இப்படியே விட்டிருந்தாலே, வருகிற ஜனவரி மாதத்தில் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த பணியை வழக்கம்போல் துவங்கியிருப்பார்கள்..
ஆணவ ஆணையம்
மழைக்காலம் உள்ளிட்ட நடைமுறை சிக்கல்களை முன்வைத்து எஸ்ஐஆருக்கான எதிர்ப்பினை சுப்ரீம் கோர்ட்டில், தேர்தல் ஆணையத்தில், அனைத்து கட்சி கூட்டத்தில் (அதிமுக, பாஜக தவிர) பதிவு செய்தாகிவிட்டது. ஆனால், அதை காது கொடுத்து கேட்கவில்லை.. தேர்தல் ஆணையம், ஆணவ ஆணையமாகவே உள்ளது..
நம்முடைய கடமைகள், உரிமைகளை சொன்னாலும், நான் நினைத்தை செயல்படுத்துவேன் என்பது போல நடந்து கொள்கிறது..
திமுகவின் டபுள்கேம்?
ஆனால், திமுக டபுள் கேம் ஆடுவதாக நிர்மலா சீதாராமன் சொல்கிறார்.. இறந்து போனவர்கள் வாக்குகளை இப்போது குத்த முடியாது.. பட்டன் சிஸ்டம் வந்தாகிவிட்டது. இதெல்லாம் அறியாமல் நிர்மலா சீதாராமன் சொல்ல காரணம், அவர் தேர்தலிலேயே இதுவரை நின்றதில்லை.. நான் ஒரு பரம ஏழை, தேர்தலில் நிற்க பணம் இல்லை என்று கடந்த முறை தேர்தலின்போதே சொல்லிவிட்டார்.
முதலில் தமிழ்நாட்டில் நிர்மலா சீதாராமனுக்கு ஓட்டு கிடையாது.. தமிழகத்தில் பிறந்து, தெலுங்கு தேசத்தில் திருமணம் செய்து, கர்நாடகாவில் எம்பியாக உள்ளார்.. இந்த 3 மாநிலங்களில் எங்காவது ஓட்டு இருக்க வேண்டும்.. அந்தவகையில் கர்நாடக மாநிலத்தில் ஓட்டு வைத்து கொண்டு, தமிழகத்தில் குறை சொல்கிறார் நிர்மலா சீதாராமன்.. Enumeration Form இவருக்கு எப்படி வரும்?
பாஜக, மோடி ஆதரவு
எஸ்ஐஆர்-ஐ ஆதரித்தால் அது பிஜேபி ஆதரவு, எஸ்ஐஆர்-ஐ எதிர்த்தால் அது பிஜேபி எதிர்ப்பு என்று புரிந்து கொண்டால், எஸ்ஐஆர் என்பதே பாஜகவின் கிரியேஷன் என்றுதானே பொதுமக்களுக்கு தோன்றும்?
எஸ்ஐஆர் என்பதே மோடி கொண்டு வந்தது, பீகார் தேர்தலுக்காக கொண்டு வந்த ஏற்பாடு, அதை அப்படியே மற்ற மாநிலங்களுக்கும் விஸ்தரிக்கிறார்கள் என்றுதானே பொதுமக்களுக்கு நினைக்க தோன்றும்? இறந்தவர் பெயரில் ஓட்டுப்போடுவது மிக மிக கடினம்.. காரணம் ஒவ்வொரு பூத்திலும் கட்சிக்காரர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.. அப்படியெல்லாம் ஓட்டுப்போட விட மாட்டார்கள்..
உதயநிதிக்கு என்ன தெரியும்? எஸ்ஐஆரை பற்றி புரிந்து கொள்ளாமல் உதயநிதி பேசுகிறார் என்று நிர்மலா சீதாராமன் சொல்வதெல்லாம் அபத்தம்.. உண்மையிலேயே அதை பற்றி புரியாமல் பேசுவது நிர்மலா சீதாராமன்தான் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications