எதுக்குயா அவசரப்பட்டே? கொளுத்தி போட்ட சிவி சண்முகம்.. பாய்ந்து வந்து முனுசாமி.. ரசிக்காத எடப்பாடி?
சென்னை: எடப்பாடி பழனிசாமி ஏதாவது வழக்கில் சிக்கினால். அவர் மீது ஏதாவது ஒரு வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அந்த இடத்தை தான் பிடிக்க வேண்டும் என்று சிவி சண்முகம் நினைக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சி வி சண்முகம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், திமுக - பாஜக கட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன. இவர்கள் கருப்பு துண்டு. அவர்கள் காவி துண்டு. ஆனா ரெண்டுமே ஒன்னு தான். திமுக - பாஜக கூட்டணி வைக்க போகிறார்கள், என்று குறிப்பிட்டு இருந்தார். அதோடு சமீபத்தில் எம்ஜிஆர் நினைவூட்ட நாளில் கூட சிவி சண்முகம் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு தனியாக வந்து மரியாதை செய்தார்.
அவரின் சமீபத்திய பேச்சுக்கள், செயல்கள் தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் அதிமுகவில் என்ன நடக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவரின் பேட்டி பின்வருமாறு..

பேட்டி
கேள்வி: எடப்பாடிக்கு எதிராக சிவி சண்முகம் திட்டம் போடுகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளதே?
பதில்: ஆம்.. எடப்பாடி ஏதாவது வழக்கில் சிக்கினால். அவர் மீது ஏதாவது ஒரு வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அந்த இடத்தை தான் பிடிக்க வேண்டும் என்று சிவி சண்முகம் நினைக்கிறார். தங்கமணி, வேலுமணி எடப்பாடி இடத்தை பிடிக்க கூடாது. அதற்கு விடக்கூடாது. அதனால் இப்போதே எடப்பாடி இடத்தை பிடிப்பதற்கான பணிகளை சிவி சண்முகம் செய்து வருகிறார். இதில் சிவி சண்முகத்திற்கு முனுசாமி முட்டுக்கட்டை போட்டு வருகிறது. கேபி முனுசாமி - சிவி சண்முகம் இடையே மோதல் உள்ளது. ஒரே சமூகமாக இருந்தாலும் அவர்களுக்கு இடையில் யார் பெரியவர் என்ற மோதல் உள்ளது.

யார் பெரியவர்
இதனால்தான் பொதுக்குழுவில் தேதியை அறிவித்த சிவி சண்முகத்தை எதுக்குயா அவசரப்பட்ட என்று கே பி முனுசாமி கத்தினார். கேபி முனுசாமி எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதை சிவி சண்முகம் விரும்பவில்லை. சிவி சண்முகம் பல விஷயங்களை முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். அவர் எப்படியாவது அதிமுகவில் பெரிய ஆள் ஆக முடியுமா என்று பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கு வன்னியர்கள் சப்போர்ட் அதிகம் உள்ளது. வன்னியர்களுக்கு நிறைய செய்துள்ளார் என்ற பெயர் அவருக்கு வட மாவட்டங்களில் உள்ளது.

ரசிக்காத எடப்பாடி
கேள்வி: பாஜக + திமுக கூட்டணி வைக்க போவதாக சிவி சண்முகம் சொன்னதை அதிமுகவில் எடப்பாடி, வேலுமணி உள்ளிட்ட யாரும் ரசிக்கவில்லை என்கிறீர்களா?
பதில்: ஆம் எடப்பாடி உள்ளிட்ட யாரும் கண்டிப்பாக சிவி சண்முகம் பேச்சை ரசிக்க மாட்டார்கள். அதிமுக ஒன்றாக இருக்கும் போது இவர் பாஜகவை எதிர்த்து பேசினால் அது பலமாக இருக்கும். சிவி சண்முகம் சிறுபான்மையினரை கவர வேண்டும் என்று பாஜகவை எதிர்த்து பேசுகிறார். ஆனால் அதிமுக ஒன்றாக இருக்கும், ஒருங்கிணைத்து போது வேண்டுமானால் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுக பக்கம் வரலாம். ஆனால் இப்போது அதிமுக உடைந்து விட்டது. இப்போது பாஜக இல்லாமல் அதிமுக தனியாக போட்டியிட்டாலும் கூட சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவிற்கு வருவதற்கு வாய்ப்பு குறைவு.

பிளான் என்ன?
சிவி சண்முகம் இன்னொரு பிளான் ஒன்றையும் வைத்து இருக்கிறார். பாஜகவை கழற்றிவிட அதிமுக வலுவாக இருக்க வேண்டும். அதனால் அதிமுகவில் எல்லோரும் ஒன்று சேருங்கள். பிரிந்த தலைவர்கள் ஒன்று சேருங்கள் என்று கூட சிவி சண்முகம் சொல்ல வாய்ப்பு உள்ளது. அவர் சிறுபான்மையினர் வாக்குகளை பெற வேண்டும். அப்போதுதான் அதிமுக வெல்லும் என்று நினைக்கிறார். இதற்காக சிவி சண்முகம் என்ன வேண்டுமானாலும் செய்வார். பாஜகவை ஒதுக்கி சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காக ஒருங்கிணைத்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என்று கூட சிவி சண்முகம் சொல்ல வாய்ப்புகள் உள்ளன. பாஜகவிற்கு எதிராக பேச சிவி சண்முகம் பயப்பட மாட்டார். சிவி சண்முகம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் கிடையாது. அவர் மீது ஊழல் புகார்கள் பெரிதாக இல்லை. அதனால் அவர் பாஜகவிற்கு எதிராக வலிமையாக பேசி வருகிறார்.

ஊழல் இல்லை
கேள்வி: நீங்கள் சொல்வது போல சிவி சண்முகம் பாஜகவை எதிர்க்க துணிந்தால், அவரை அதிமுகவினர் ஓரம்கட்ட மாட்டார்களா? எடப்பாடி, வேலுமணி போன்றவர்கள் சிவி சண்முகத்தை ஓரம்கட்ட மாட்டார்களா?
பதில்: சிவி சண்முகத்தை ஓரம்கட்டினால், அதனால் அதிமுகவிற்குத்தான் நஷ்டம். இதனால் திமுகவிற்குத்தான் நஷ்டம். திமுகவை எதிர்க்க வேண்டும், பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால் அதிமுக ஒன்றுபட்டு நிற்க வேண்டும். பாஜக தயவு கூட தேவையில்லை என்று அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதிமுக ஒற்றுமையாக இருந்தால் பாஜக இல்லாமலே தேர்தல்களில் நன்றாக செயல்பட முடியும். ஆனால் எடப்பாடி இதற்கு ரெடியா என்று தெரியவில்லை. வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் பாஜகவை எதிர்க்க விரும்பவில்லை. இதனால் எடப்பாடி பாஜகவை எதிர்க்க முன்வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வேலுமணி
கேள்வி: பாஜகவை எதிர்த்தால் அதிமுகவிற்கு நல்லது எனில், அதை தானே எடப்பாடி செய்ய வேண்டும், அவர் ஏன் வேலுமணி, தங்கமணி பேச்சை கேட்க வேண்டும்?
பதில்: அரசியல் நாம் கண்ணால் பார்ப்பது மட்டும் இல்லை. அதற்கு பின்னாடி வேறு சில விஷயங்கள் உள்ளன. எடப்பாடிக்கு பல பிரஷர் இருக்கும். எடப்பாடி தனக்கு இருக்கும் பல்வேறு பிரஷர் காரணமாக இன்னும் முடிவு எடுக்காமல் இருக்கிறார். அதிமுக எப்படியாவது ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். அதன் மூலம் அவர்களின் வாக்குகளை நமது கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைத்த அதிமுகவை விரும்பவில்லை. அவர் தான் மட்டும் அதிமுகவின் தலைமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இப்படி அதிமுக + பாஜக இடையே பல குழப்பங்கள் நிலவி வருகின்றன. எடப்பாடி பாஜகவிற்கு ஆதரவாகவோ, எதிராகவோ இன்னும் முடிவு எடுக்கவில்லை. சிவி சண்முகம் மட்டும்தான் பாஜகவை தீவிரமாக எதிர்த்து வருகிறார்.
-
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!











Click it and Unblock the Notifications