விஜய்க்கு எத்தனை சீட்டு? சூசகமாக சொன்ன எடப்பாடி.. மீட்டிங்கில் இறங்கி வந்து.. இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி உருவாக்கப்பட்டால் அவர்களுக்கு அதிக இடங்களை கொடுக்க அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளாராம். நேற்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாக கூறப்படுகிறது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்தார். அதில் சில விஷயங்களை சூசகமாக பேசி உள்ளார். அதில்.. அதிமுக கண்டிப்பாக அடுத்த சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும். திமுக கூட்டணி வலிமையாக இல்லை. அவர்களின் கூட்டணியில் பிரச்சனை உள்ளது.

அதிமுக வேகமாக வளர்ந்து வருகிறது. அவர்களின் கூட்டணி உடையும் . அதிமுக பெரிய கூட்டணி அமைக்கும். ஆனால் நாம் அதற்கு முன் கட்சியை வலுப்படுத்த வேண்டும். மாவட்ட அளவில் கட்சியில் கூட்டங்களை நடத்த வேண்டும்.
நமக்கு கூட்டணி வேண்டும் என்றால்.. நாம் வலிமையாக இருக்க வேண்டும். நாம் வலிமையாக இருந்தால்தான் கட்சிகள் கூட்டணிக்கு தயாராக இருக்கும். அதோடு இல்லாமல் நாம் வலிமையாக இருந்தால் கூட்டணியில் அதிக இடங்களை வைத்துக்கொள்ள முடியும். பெரிய கட்சிகள் வந்தால் கூடுதல் இடங்களை கொடுக்கலாம்.
புதிய நிர்வாகிகளை சேர்க்க வேண்டும். செயல் வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டும். அப்போதுதான் கட்சி வலிமை அடையும். முக்கியமாக பூத் கமிட்டியை அமைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்ட பூத் கமிட்டியை புதுப்பிக்க வேண்டும். இதுதான் இப்போது அவசியம் என்று எடப்பாடி பழனிசாமி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசி இருக்கிறாராம்.
இதில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி உருவாக்கப்பட்டால் அவர்களுக்கு அதிக இடங்களை கொடுக்க அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளாராம். நேற்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாக கூறப்படுகிறது.
உதாரணமாக நேற்று.. நமக்கு கூட்டணி வேண்டும் என்றால்.. நாம் வலிமையாக இருக்க வேண்டும். நாம் வலிமையாக இருந்தால்தான் கட்சிகள் கூட்டணிக்கு தயாராக இருக்கும். அதோடு இல்லாமல் நாம் வலிமையாக இருந்தால் கூட்டணியில் அதிக இடங்களை வைத்துக்கொள்ள முடியும். பெரிய கட்சிகள் வந்தால் கூடுதல் இடங்களை கொடுக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னதற்கு பின் இதுதான் காரணம் என்கிறார்கள். விஜய்க்கு கொடுத்த சூசக அழைப்பு இது என்கிறார்கள்.
அதிமுக விமர்சனம் இல்லை: சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் பேசிய அதன் தலைவர் விஜய், யார் அரசியலுக்கு வந்தாலும் இவர்கள் கலர் பூசுகிறார்கள். நீ பாஸிசம்.. நீ அது.. நீ இது என்று கலர் அடிக்கிறார்கள். எனக்கு கலர் அடிக்க முடியாது. சொல்லிவிட்டேன். அவர்கள் பாசிசம் பேசுகிறார்கள் என்றால்.. நீங்கள் என்ன பேசுகிறீர்கள். நீங்கள் என்ன பாயாசமா பேசுகிறீர்கள்.
நமக்கு இன்னொரு எதிரியும் இருக்காங்க. ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம் என்று கூறி உள்ளோம். இதன் அர்த்தம் என்ன.. முகமூடி போட்ட கரெப்சன் கபடதாரிகள் தான் இப்ப நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். முகமூடி போட்ட கரெப்சன் கபடதாரிகள் அகற்றப்பட வேண்டும். இவர்களை எல்லாம் அகற்ற வேண்டும்.
முகமூடி போட்ட கரெப்சன் கபடதாரிகள் இருக்கிறார்களே.. அவர்களும் நம்முடைய எதிரிகள்தான். வெறுப்பு அரசியலை ஒருபோதும் கையிலெடுக்கப் போவதில்லை. நம்மள பாத்து யாரும் விசிலடிஞ்சான் குஞ்சு என சொல்லிட கூடாது. பெண்களை அரசியல் வழிகாட்டிகளாக ஏற்கும் முதல் அரசியல் கட்சி தவெக, என்று நடிகர் விஜய் பேசி இருந்தார். ஆனால் அதிமுகவை விஜய் விமர்சனமே செய்யாத நிலையில்.. விஜய் - எடப்பாடி கூட்டணி வந்தாலும் வரலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications