உடைந்து போன எடப்பாடி? அப்படியெல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்கலையாமே.. அதிமுக மாநாட்டால்.. வந்த வினை
சென்னை: மதுரையில் அதிமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்த நிலையிலும் கூட அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெரிதாக உற்சாகமாக இல்லை, அவர் உற்சாக மனநிலையில் இல்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆசை ஆசையாக ஒரு விஷயத்தை பல நாட்களாக நாம் திட்டமிட்டு செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். கடைசியில் அந்த விஷயம் வெற்றியில் முடியாமல் தோல்வியில் முடிகிறது.. தோல்வியில் முடியவில்லை என்றாலும் கூட.. பெரிய அளவில் விமர்சனங்களை தருகிறது என்று வைத்துக்கொள்வோம்.. எப்படி இருக்கும்?

அப்படி இரு மனநிலையில்தான் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் மிகப்பெரிய மாநாட்டை நடத்த வேண்டும் என்ற திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நீண்ட காலமாகவே இருந்தார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றியதில் இருந்தே எப்படியாவது பெரிய மாநாடு நடத்த வேண்டும், தனது பலத்தை உணர்த்த வேண்டும் என்றெல்லாம் திட்டங்களை வகுத்து வந்தார்.
ஆனால் இந்த திட்டங்களுக்கு ஓ பன்னீர்செல்வத்தின் வழக்குகள் இடைஞ்சலாக இருந்தன. இதனால் காலம் தாழ்த்தப்பட்டு வந்த அதிமுக பொதுக்கூட்டம் ஒருவழியாக கடந்த வாரம்தான் நடந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிமுக பொதுக்கூட்டம் மதுரையில் பிரம்மாண்டமாக நடந்தது.
கூட்டம்: ஆனால், மதுரையில் அதிமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்த நிலையிலும் கூட எடப்பாடி பழனிசாமி பெரிதாக உற்சாகமாக இல்லை, அவர் உற்சாக மனநிலையில் இல்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி பொதுவாக எதிர்க்கட்சியின் கூட்டம் நடந்தால்.. அதை பற்றித்தான் பேச்சு இருக்க வேண்டும். அதாவது எதிர்க்கட்சி எப்படி கூட்டம் சேர்த்தது, என்ன பேசியது? ஆளும் தரப்பிற்கு என்ன குற்றச்சாட்டு வைத்தது என்றுதான் பேச வேண்டும்.
இந்த கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி திமுக மீது ஊழல் புகார், முதல்வர் ஸ்டாலின் மீது ஊழல் புகார், திமுக அரசின் மீதான புகார்கள் என்று எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்காக அடுக்கி பேசினார். ஆனால் அவர் பேசிய எதுவுமே ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தவில்லை.
விவாதம்: மாறாக அதிமுக கூட்டத்தில் நடந்த பல்வேறு களேபரங்கள் விவாதங்கள் ஆகி உள்ளன. இந்த மாநாட்டில் தலைவர்கள் மேடையில் இருக்கும் நேரத்தில் பாடல் பாடிய ஒருவர் கனிமொழியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். கனிமொழியை மிக கடுமையான வார்த்தைகளில் , அச்சில் ஏற்ற முடியாத வகையில் கடுமையாக பேசினார்.
ஆனால் அதிமுகவினர் இந்த ஆபாசமான வார்த்தைகளை கேட்டு, எதுவும் சொல்லாமல், அவரின் பாடலை ரசித்தனர். இந்த வீடியோ வெளியாகி தற்போது இணையத்தை உலுக்கி உள்ளது. எடப்பாடி இதை பற்றி வாய் திறக்காதது கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் இந்த அதிமுக மாநாட்டில் 8 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் கூட்ட நெரிசல், மது, விபத்து என்று பல்வேறு காரணங்களால் பலியாகி உள்ளனர். ஆனால் இந்த செய்தி வெளியே வராமல் விழா கமிட்டியினர் முடிந்த அளவு அதை மறைத்து உள்ளனர்.
நேற்று எடப்பாடி பழனிசாமி இவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். அதன்பின்புதான் இந்த விஷயம் வெளியேவே தெரிந்தது. அதுவரை இந்த விஷயம் பற்றி ஊடகத்திற்கு கூட செய்திகள் கசியவில்லை. மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்த கூட்டம் நடந்தது. கிட்டத்தட்ட 63 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
2 லட்சம் பேர் கலந்து கொள்ளும் விதமாக இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்தது. கூட்டத்திற்கு வரும் மக்கள் பலர் நேற்றே இதற்காக மதுரை வந்து சேர்ந்தனர். மதுரையில் காலை எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார். கூட்டத்தில் 3 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டது.
புளி சாதம் தயாரிக்கப்பட்டதால் உணவு வீணாய் போனது. 1 லட்சம் பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்ததால் நேற்று 2 லட்சம் பேருக்கான உணவு தரையில் கொட்டப்பட்டது. இந்த சம்பவம் இணையத்தை உலுக்கி உள்ளது. இந்த பல்வேறு விஷயங்களால் தற்போது மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட அதிமுக மாநாடு தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கிறது.
சர்ச்சை: மதுரை மாநாட்டில் நடந்த ஆலோசனை, புகார்கள் தவிர இது போன்ற விஷயங்கள் சர்ச்சையாகி உள்ளதால் எடப்பாடி பழனிசாமி கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. நாம் எதையோ நினைத்து கூட்டம் நடத்த வேறு எதோ நடந்து உள்ளதே என்று கடும் அப்செட்டில் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக கூட்டத்திற்கு பின் கூட்டத்தின் வெற்றியை பற்றி பேசாமல்.... இது எல்லாம் விவாதம் ஆகி உள்ளதே என்ற அதிர்ச்சியில் எடப்பாடி தரப்பு வட்டாரங்கள் இருக்கின்றனவாம்.
-
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications