"மணல்" ரெய்டு ஓவர்.. அடுத்த டார்கெட் "இதுதான்".. திமுகவின் உச்சாணி கொம்பிற்கு அமலாக்கத்துறை குறி?
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ரெய்டுகள் டாஸ்மாக் தொடர்பானதாக இருக்கும் என்கிறார்கள் அமலாக்கத்துறைக்கு நெருக்கமான வட்டாரத்தினர்.
தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகளில் வரி ஏய்ப்பு நடந்ததாகப் பல புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை, திண்டுக்கல் எனப் பல இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி சோதனையில் இறங்கினர்.

ஆனால் இந்த ரெய்டுக்கு பின் உண்மையில் குறி வைக்கப்பட்டது யார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. இரண்டு அமைச்சர்களை குறி வைத்து ரெய்டு நடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுக்க இருக்கும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை ரெய்டு நடந்தது. அதன்படி தமிழ்நாட்டின் முக்கிய மணல் குவாரி அதிபராக உள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரின் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டில் இறங்கினர்.
விரைவில் இந்த ரெய்டு தொடர்பாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் நிதி பின்புலத்தை முடக்குவதே இந்த ரெய்டின் நோக்கம் என்று கூறப்படுகிறது.
அடுத்த ரெய்டு: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் அடுத்த ரெய்டுகள் டாஸ்மாக் தொடர்பானதாக இருக்கும் என்கிறார்கள் அமலாக்கத்துறைக்கு நெருக்கமான வட்டாரத்தினர். அதன்படி வீணான பாட்டிலை சேகரிக்கும் அனுமதி பெற்றவர்கள் முதல் டாஸ்மாக் தொடர்பான பணிகளில் இருக்கும் பலர் குறி வைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
டாஸ்மாக் டெண்டர் எடுத்தவர்கள், வீணான பாட்டிலை சேகரிக்கும் அனுமதி டெண்டர் பெற்றவர்கள், பார் டெண்டர் பெற்றவர்கள் ஆகியோர் ரெய்டுக்கு உள்ளாக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. திமுகவிற்கு மணல் மூலம் பணம் வருகிறது. அதை முடக்கிவிட்டோம்... இனி டாஸ்மாக் மூலமாக திமுக மாவட்ட நிர்வாகிகள் சிலர் பெறும் நிதியை கட் செய்து லோக்சபா தேர்தலுக்கு முன்பாக முடக்குவதுதான் நோக்கம் என்கிறார்கள்.
இதுதவிர மணல் ரெய்டுகள் பின்னணியில் கூடவே இருக்கும் இளம் தலைமுறை நிர்வாகிகளின் உளவு பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள்தான் சீனியர்களை அந்தந்த மாவட்டங்களில் தட்டி வைக்க மத்திய அமைப்புகளுக்கு உளவு தந்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் சீனியரக்ள் பலர் இந்த ரெய்டில் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது மணல் ரெய்டு மூலம் சீனியர் அமைச்சர்கள், நிர்வாகிகள் சிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ரெய்டு மேல் ரெய்டு: பல்வேறு வடமாநிலங்களில் எதிர்கட்சிகளை முடக்க அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதாக ஒரு புகார் உள்ளது. முக்கியமாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க, ஆபரேஷன் கமலாவை மேற்கொள்ள பாஜக இந்த மத்திய விசாரணை ஆணையங்களை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் புகார் வைத்து வருகின்றனர்.
கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழவும் இதுவே காரணமாக எதிர்கட்சிகளால் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை, சிபிஐ இரண்டும் தங்கள் பார்வையை திருப்பி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை விசாரணை திரும்பும் என்று கூட சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். அவர் அளித்த பேட்டியில், வெயிட் பண்ணுங்கண்ணா அமலாக்கத்துறை கொஞ்சம் பிஸியா இருக்காங்க. முடிச்சிட்டு இங்கதான் வருவாங்க. விரைவில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வார்கள், என்று கூறினார்.
இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு அவர் கைதும் செய்யப்பட்டார். அதன்பின் அமைச்சர் பொன்முடி வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் அடுத்த ரெய்டுகள் டாஸ்மாக் தொடர்பானதாக இருக்கும் என்கிறார்கள் அமலாக்கத்துறைக்கு நெருக்கமான வட்டாரத்தினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications