மத்திய அமைச்சர் பதவிக்கு நோ? தேர்தலிலும் வாய்ப்பு இல்லை? ஓரம்கட்டப்பட்ட அண்ணாமலை? வருது பெரிய பதவி?
சென்னை: தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலைக்கு தொடர்ந்து பதவிகள் எதுவும் வழங்கப்படாமல் ஓரம்கட்டப்பட்டு வருகிறார். அவர் மாநில பதவிகள் எதுவும் பெறாத நிலையில், சட்டசபை தேர்தலிலும் அடுத்த வருடம் போட்டியிட மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார். அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆவப்போவதாகவும் தகவல்கள் வர தொடங்கின. பவர் புல் துறைகளில் ஒன்று அண்ணாமலைக்கு கொடுக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

அண்ணாமலைக்கு தேசிய பதவி
தமிழ்நாடு பாஜக பிரிவு தலைவராக, அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்றதிலும் சரி அல்லது கட்சியின் நிகழ்ச்சிகளை கிராமம் கிராமமாக கொண்டு சென்றதிலும் சரி, அண்ணாமலையின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது..
கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை பா.ஜ.க பயன்படுத்திக்கொள்வோம். தேசிய அளவில் அவரை பயன்படுத்திக்கொள்வோம் என்று அமித் ஷா கூறி உள்ளார். இதன் மூலம் தேசிய பணிக்கு அண்ணாமலை செல்வதை அமித் ஷா உறுதி செய்துள்ளார். இந்த நிலையில்தான் அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆகப்போவதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன. இதெல்லாம் இணையத்தில், அரசியல் விமர்சகர்கள் இடையே பரவும் தகவல்கள்தான். இன்னும் உண்மையான அறிவிப்புகள் வரவில்லை.
அண்ணாமலைக்கு பத்தோடு பதினொன்றாக ஒரு பதவி
தற்போது வரை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அண்ணாமலையுடன் சேர்த்து வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோருக்கும் கட்சி தலைமை், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பை வழங்கியிருக்கிறது. சசிகலா, புஷ்பா சரத் குமார் போன்றவர்களுக்கும் இதே பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
இது அதிகாரம் மிக்க பதவி எல்லாம் கிடையாது. கவுரவம் மிக்க பதவி. முக்கிய முடிவுகள் எடுக்கும் கூட்டத்திற்கு இவர்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால் இந்த பதவிக்கு தனியாக பொதுக்குழு கூட்டம் தவிர்த்து வேறு பெரிய அதிகாரங்கள் கிடையாது.
அண்ணாமலை - அமைச்சர் பதவி இல்லை
இதையடுத்தே அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆவப்போவதாகவும் தகவல்கள் வர தொடங்கின. பவர் புல் துறைகளில் ஒன்று அண்ணாமலைக்கு கொடுக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் ராஜ்ய சபா தேர்தல் நடந்தது. இதில் எந்த மாநிலத்தில் இருந்தும் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் அமைச்சர் ஆக முடியாத சூழலும் ஏற்பட்டது.
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலைக்கு தொடர்ந்து பதவிகள் எதுவும் வழங்கப்படாமல் ஓரம்கட்டப்பட்டு வருகிறார். அவர் மாநில பதவிகள் எதுவும் பெறாத நிலையில், சட்டசபை தேர்தலிலும் அடுத்த வருடம் போட்டியிட மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஏனென்றால் அவர் முழுக்க முழுக்க தேசிய பொறுப்பு ஒன்றிற்கு மாற்றப்பட உள்ளார் என்று கூறப்படுகிறது. தேசிய அளவில் பவர் புல் போஸ்டிங் ஒன்று அவருக்கு விரைவில் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அது ஆட்சி ரீதியிலான பதவியாக இல்லாமல் கட்சி ரீதியிலான பவர் புல் பதவியாக இருக்கலாம் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர். விரைவில் இதற்கான பணிகள் நடக்கும், சில மாற்றங்களுக்கு பிறகு அண்ணாமலைக்கு அந்த பதவி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
அடிச்சு தூக்க போகுது தமிழக பாஜக.. இப்படியொரு சடன் மாற்றம்? இங்கே திமுக, அங்கே தவெக! தாங்குமா தாமரை? -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
Aavin: பச்சை நிற பால் பாக்கெட் விவகாரம்! பொய் தகவல் சொல்லும் ஆவின் நிர்வாகம்! அண்ணாமலை கண்டனம் -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications