ஏசியுடன் சேர்த்து சீலிங் பேனை பயன்படுத்தும் பழக்கம் இருக்கா? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்!
சென்னை: நமது வீடுகளில் ஏசி இயங்கும் போது, அத்துடன் சேர்த்து சீலிங் பேனை போடும் பழக்கம் நம்மில் பலருக்கும் உள்ளது. இது சரியா? தவறா? என்பது குறித்து ஏராளமானோருக்கு குழப்பம் உள்ளது. தற்போது ஏசியுடன் சேர்த்து சீலிங் பேனை இயக்குவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் சிக்கல்களை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மிடில் கிளாஸ் வீடுகளில் ஏசி புகுந்துவிட்டது. கோடைக் காலங்களில் அதிகளவில் வெயில் இருப்பதால் பலரும் இஎம்ஐ-லாவது ஏசியை வாங்கிவிடுகிறார்கள். ஒருமுறை ஏசி போட்டு தூங்கிவிட்டால், அந்த பழக்கத்தை மாற்றிக் கொள்வது கடினமாகிவிடும். நல்ல இதமான குளிரில் தூங்கவே பலரும் விரும்புகிறார்கள்.

அதேபோல் ஏசி காற்றை உடனடியாக தனது பெட் ரூமின் மூலை முடுக்கு வரை சென்றவடைவதற்காக பலரும் சீலிங் பேனை பயன்படுத்தி வருகிறார்கள். ஏசியில் தொடக்கத்தில் குளிர்ந்த காற்று குறைவாக வரும் போது, உடனடியாக சீலிங் பேனை போடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இப்படியான பழக்கம் ஏசிக்கு சிக்கலை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது ஏசியுடன் சேர்த்து சீலிங் பேனை இயக்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம். அதன்படி ஏசி இயங்கும் போது சீலிங் பேனை பயன்படுத்துவதால் அறையில் காற்றின் சுழற்சி அதிகமாகும். இதனால் ஏசி காற்று அறை முழுவதும் வேகமாகப் பரவும். இதன் காரணமாக வெப்பம் குறைவதோடு, ஏசியின் அழுத்தமும் குறையும். அதாவது பலரும் 24 டிகிரியில் ஏசியை பயன்படுத்துவதில்லை.
18 அல்லது 16 டிகிரியிலேயே ஏசியை பயன்படுத்துவார்கள். அப்படி செய்யும் போது ஏசி பயன்பாட்டிற்கு அதிகளவிலான மின்சாரம் தேவைப்படும். ஆனால் சீலிங் பேனை இயக்கும் போது, பலரும் 20 முதல் 22 டிகிரியில் ஏசியை பயன்படுத்துகிறார்கள். அதேபோல் விரைவாக ஒரு அறை குளிர்ச்சியை எட்டினால், ஏசியில் உள்ள சென்சார்கள் குறிப்பிட்ட வெப்ப நிலையை விரைவில் இழப்பது தடுக்கப்படுகிறது.
இதனால் ஏசி யூனிட் குறைவாகவே வேலை செய்கிறது. இதனால் ஏசி சுமை குறைவதோடு, மின்சார கட்டணமும் குறைகிறது. ஆனால் ஏசியை இயக்கும் போது சீலிங் பேனை போடுவதால், அங்கிருக்கும் தூசி நேராக ஏசி பில்டர்களில் சென்றடையும். இதனால் 3 மாதத்திற்கு ஒரு முறை ஏசியை சர்வீஸ் செய்ய வேண்டிய நிலை உருவாகும்.
ஒருவேளை சர்வீஸ் செய்யத் தவறும் பட்சத்தில், ஏசி கொஞ்சம் கொஞ்சமாகத் தனது செயல்பாட்டின் தீவிரத்தைக் குறைத்துக் கொள்ளும். இதனால் ஏசி இயங்கும் சீலிங் பேனை பயன்படுத்தும் போது நன்மைகளும், தீமைகளும் உள்ளன. அதனால் ஏசியை முறையாக சர்வீஸ் செய்து பராமரித்தால், ஏசி இயங்கும் போது சீலிங் பேனை பயன்படுத்துவதில் எந்த சிக்கலும் இருக்காது.
-
லோ வோல்டேஜ்.. ஏசி ட்ரிபிள் பூஸ்டரே திணறுது.. ஏசி வாங்கியும் இப்படி ஒரு சிக்கலா? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications