இணையும் "உடன் பிறப்புகள்"?.. மதுரை நூலக திறப்பு விழாவில் அழகிரி.. ஸ்டாலின் கிரீன் சிக்னல்? ட்விஸ்ட்?
சென்னை: மதுரையில் கட்டப்பட்டிருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் மு க அழகிரி கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரையில் கட்டப்பட்டிருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் வருகிற 15-ந்தேதி திறக்கப்படவிருக்கிறது. ஆசியாவில் கட்டப்படும் பிரம்மாண்ட நூலகங்களில் இதுவும் ஒன்று ஆகும். இந்த நூலகம் அறிவிக்கப்பட்டு ஒன்றரை வருடத்திற்குள் இந்த நூலகம் கட்டப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டிற்கும் வர உள்ளது.

இதற்காக மதுரையில் பிரம்மாண்ட தொடக்க விழா நடத்தப்பட உள்ளது. இந்த கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் ஒரு காலத்தில் மதுரை திமுகவின் முகமாக இருந்த மு க அழகிரி கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் முக அழகிரியை மாட்டு பொங்கல் அன்று மதுரையில் சந்தித்தார்.
மதுரையில் இருக்கும் வீட்டில் உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா அழகிரியுடன் இந்த சந்திப்பை நடத்தினார். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு சென்றவர் இந்த சந்திப்பை திடீரென நிகழ்த்தியது விவாதங்களை ஏற்படுத்தியது.

அழகிரி: அரசியலில் இருந்து ஒதுங்கிய பின் மு க அழகிரி பெரிதாக யாரையும் சந்திக்கவில்லை. வெளியே பெரிதாக அவர் தலைகாட்டவில்லை. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்ற பின் முதல்முறையாக இப்படி அழகிரியை போய் நேரில் சந்தித்தார் . அமைச்சரவை பதவி ஏற்பு விழாவிற்கு தயா அழகிரி வந்திருந்த நிலையில் அழகிரியை உதயநிதி பார்க்க முடியவில்லை. இதனால் மரியாதை நிமித்தமாகவே அழகிரியை உதயநிதி பார்த்ததாக கூறப்பட்டது.
விழா நாட்களுக்கு இவர்கள் போனில் மாறி மாறி வாழ்த்து சொல்வது வழக்கம். இந்த முறை நேரடியாகவே வாழ்த்து சொல்லிவிடலாம் என்றுதான் உதயநிதி வந்ததாக கூறப்படுகிறது. அதெல்லாம் போக அழகிரிக்கு லேசாக உடல்நிலை சரியில்லை, அவருக்கு கொஞ்சம் மன வருத்தமும் இருந்தது.
இதனால்தான் உதயநிதி வந்து பார்த்துவிட்டு சென்று இருக்கிறார் என்கிறார்கள். இது அரசியல் ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்துமா? அழகிரி மீண்டும் எழுச்சி பெற இது வழி வகுக்குமா? அவர் மதுரையில் மீண்டும் ஆவர்த்தனம் செய்வாரா? அரசியலில் ரீ என்ட்ரி கொடுப்பாரா என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன.
இந்த நிலையில்தான் நேற்று முதல்நாளும் முதலவர் ஸ்டாலினும், மு க அழகிரியும் நேரில் சந்தித்து பேசிக்கொண்டார். முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றபின் அவர் அழகிரியை சந்தித்து இவ்வளவு நேரம் தனியாக பேசுவது இதுவே முதல்முறையாகும். கோபாலபுரம் இல்லத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.

ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாளின் 90வது பிறந்தநாள் விழாவில் இந்த சந்திப்பு நடந்தது.இதில் இருவரும் மிகவும் நெருக்கமாக, அன்பாக இருந்தனர். ஒருவரை ஒருவர் கைகுலுக்கிக்கொண்டு நீண்ட நேரம் பேசிக்கொண்டனர். இந்த சந்திப்பு காரணமாக மீண்டும் அழகிரியின் எழுச்சி அரசியலில் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இது முழுக்க முழுக்க குடும்ப ரீதியான சந்திப்புதான் அரசியல் ரீதியாக இது எந்த விதமான மாற்றத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது
இப்படிப்பட்ட நிலையில்தான் மதுரையில் கட்டப்பட்டிருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் மு க அழகிரி கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நூலகத்தை திறந்து வைத்து பேருரையாற்றுகிறார் ஸ்டாலின். விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பம் முழுமையாக கலந்து கொள்ளவிருக்கிறது. இந்த விழாவுக்கு மு.க.அழகிரி அழைக்கப்பட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. விழாவுக்காக மதுரை வரும் ஸ்டாலின், அழகிரியின் வீட்டுக்குச் செல்வாரா? என்று திமுகவில் எதிரொலிக்கிறது.












Click it and Unblock the Notifications