அல்டிமேட் பிளான்.. பக்காவாக வழி போட்ட தோனி.. சிஎஸ்கேவின் எதிர்காலமே இதில்தான் இருக்காமே.. குட்நியூஸ்
சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இந்த வருடத்தோடு ஓய்வு பெற போவதில்லை என்பதாக தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளன. அதோடு அணியில் மாற்றங்கள் செய்வதற்கான முக்கியமான சில திட்டங்கள் அவரிடம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
சிஎஸ்கே கேப்டன் தோனி ஓய்வு பெற போவதாக கடந்த சில நாட்களாக விவாதங்கள் நடைபெற்று வந்தன. 023 ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. முக்கியமாக சிஎஸ்கே அணி ஆடும் போட்டிகள் அதிக அளவில் கவனம் பெற்றுள்ளன.

தோனியின் கடைசி சீசனாக இது இருக்கலாம் என்பதால் அதை பார்க்க லட்சக்கணக்கில் ரசிகர்கள் வர தொடங்கிவிட்டனர்.
தோனியும்.. எனக்கு பேர்வெல் கொடுக்கிறார்கள்.. நான் என் கெரியரின் கடைசி கால கட்டத்தில் இருக்கிறேன் என்றெல்லாம் க்ளூ கொடுக்க தொடங்கி விட்டார். அதனால் சிஎஸ்கே கேப்டன் தோனி கிட்டத்தட்ட ஓய்வு பெறுகிறார் என்பது உறுதியாகிவிட்டது.
அதனால் ரசிகர்கள் அதிக அளவில் மேட்சை பார்க்க வருகிறார்கள். தோனியும்.. எனக்கு பேர்வெல் கொடுக்கிறார்கள்.. நான் என் கெரியரின் கடைசி கால கட்டத்தில் இருக்கிறேன் என்றெல்லாம் க்ளூ கொடுக்க தொடங்கி விட்டார். அதனால் சிஎஸ்கே கேப்டன் தோனி கிட்டத்தட்ட ஓய்வு பெறுகிறார் என்பது உறுதியாகிவிட்டது.
ஆனால் அதன்பின் அடுத்த மேட்சிலேயே இதை தோனி மறுத்து இருந்தார். சிஎஸ்கே கேப்டன் தோனி.. உங்கள் கடைசி சீசனில் உங்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பை எப்படி என்று பார்க்கிறீர்கள் நேற்று பஞ்சாப் ஆட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு வித்தியாசமாக பதில் அளித்தார்.
அதில்.. நீங்கள்தான் இது என்னுடைய கடைசி சீரிஸ் என்று முடிவு செய்துவிட்டீர்கள். நான் இல்லை என்று கூறி இருந்தார்.
மொத்தத்தில் தோனி ஓய்வு பெற போகிறாரா அல்லது தொடர்ந்து ஆட போகிறாரா என்பதில் பெரிய குழப்பம் உள்ளது.

பிளான் என்ன?
இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இந்த வருடத்தோடு ஓய்வு பெற போவதில்லை என்பதாக தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளன. அதோடு அணியில் மாற்றங்கள் செய்வதற்கான முக்கியமான சில திட்டங்கள் அவரிடம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அதன்படி தோனி இந்த வருடம் ஓய்வு பெற போவது இல்லை. இந்த வருடம் கோப்பையை வெல்லும் முனைப்பில் அவர் இருக்கிறார். கோப்பையை வென்ற பின் அடுத்த வருடம் சிஎஸ்கே அணியில் இம்பாக்ட் வீரராக மட்டும் ஆட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
சிஎஸ்கே அணியை எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்வதற்கான பாதையை ஏற்படுத்திக்கொடுக்கும் விதமாக அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறாராம். சிஎஸ்கே இந்த வருடம் கோப்பை வெல்கிறது.
அதன்பின் தோனி ஓய்வு பெற்றுவிட்டால், அடுத்த வருடமே சிஎஸ்கே அணி புதிய கேப்டனோடு ஆடும். அது ஜடேஜாவோ, கெய்க்வாட்டோ சிஎஸ்கே அணி திடீரென்று திக்கு தெரியாத காட்டில் நிற்கும்.

அதுவே தோனி இருந்து கேப்டன்சி மாற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொடுத்தால் அணிக்கு சிக்கல் இருக்காது. அணி சரியான திசையை நோக்கி செல்லும். இதை மனதில் வைத்தே இந்த வருடம் கோப்பைக்காக ஆடுவோம், அடுத்த வருடம் சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை மனத்தில் வைத்து திட்டங்களை வகுப்போம் என்று தோனி முடிவு செய்து உள்ளாராம்.
அதன்படி இந்த வருடம் சிஎஸ்கே கோப்பை வென்றாலும்.. அடுத்த வருடம் சிஎஸ்கே அணி கொஞ்சம் கொஞ்சமாக புதிய கேப்டனுக்கு செட்டாகும் வரை தோனி அணியில் இடம்பெறுவார். அடுத்த வருடமே அவர் ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications