ரூ.299 செருப்பு அணிந்து லண்டன் சென்றேன்.. எ.வ.வேலுவுக்கு பல் இல்லையா? ஜெயக்குமாருக்கு வந்த “டவுட்டு”

Subscribe to Oneindia Tamil

சென்னை: 299 ரூபாய் பாட்டா செருப்பை அணிந்து தான் லண்டனுக்கு சென்று வந்ததாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போல் விலை உயர்ந்தை பொருட்களை அணியவில்லை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். மீன்வளத்துறை அமைச்சருக்கு இந்த துறையை பற்றி ஒன்றுமே தெரியாது என்றும் அவர் ஒரு வியாபாரி எனவும் சாடி இருக்கிறார்.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார்.

சுனாமியின் 18 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சுனாமி நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்தும் அவர் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் படகில் நடுக்கடலுக்கு சென்ற அவர் கடலில் பால் ஊற்றியும் மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினார்.

மீனவர்கள் அலைக்கழிப்பு

மீனவர்கள் அலைக்கழிப்பு

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்த விடியா அரசு எந்த இயற்கை இடர்பாடுகளின்போதும் மக்களுக்கு நன்மை செய்யவில்லை மாண்டஸ் புயல் கரையை கடந்த பின்பும் கூட மீனவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. 10 க்கும் மேற்பட்ட கேள்விகளை மீனவர்களிடம் கேட்டு அலைக்கழிப்பு செய்கிறார்கள்.

முதலமைச்சர் ஆய்வு செய்யவில்லை

முதலமைச்சர் ஆய்வு செய்யவில்லை

புயல் கரையை கடந்த மகாபலிபுரத்தை முதலமைச்சர் ஆய்வு செய்யவில்லை. நாங்கள் தான் ஆய்வு செய்தோம். மீனவர்கள் அதிமுகவுக்குதான் ஆதரவு அளிப்பார்கள் என்று தெரிந்து இவர்களை வஞ்சிக்கிறது விடியா அரசு. திமுக சார்பில் இன்று காசிமேட்டில் சுனாமி தின அஞ்சலிக்கு 50 பேர் திருடர்கள் போன்று தான் வந்தார்கள்.

மீன்வளத்துறை அமைச்சர்

மீன்வளத்துறை அமைச்சர்

மீன்வளத்துறையை துறையை பற்றிய ஒன்றும் தெரியாத அமைச்சர் ஒரு வியாபாரி. பணத்தை கணக்கு பார்க்கும் வியாபாரி. மக்களின் மன கணக்கை பார்த்து அவர் செயல்படுவதாக தெரியவில்லை. திமுக அரசின் எந்த துறைகளிலும் மக்கள் நலப்பணிகள் எதுவுமே நடைபெறவில்லை. பொங்கல் தொகுப்பில் செங்கரும்பை கொள்முதல் செய்யாததால் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பொங்கல் கரும்பு

பொங்கல் கரும்பு

பொங்கல் இல்லாத கரும்பு உண்டா? எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது பொங்கல் தொகுப்பில் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். இப்பொழுது ஆட்சியில் இருக்கும் போது ஆயிரம் ரூபாய் தான் கொடுக்கிறார். அதிமுக ஆட்சியில் 2 கோடி ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கினோம்.

எ.வ.வேலுக்கு பல் இருக்கா?

எ.வ.வேலுக்கு பல் இருக்கா?

பொங்கல் தொகுப்பு குறித்து மூத்த அமைச்சர் ஏ.வ.வேலு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார். ஏ.வ.வேலுவுக்கு பல் இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியவில்லை. அதனால்தான் பொங்கல் தொகுப்பில் கரும்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டார் போல. நிர்வாகத் திறமையற்ற அரசு நடைபெறுகிறது என்பதற்கு இந்த ஒப்புதல் வாக்குமூலமே உதாரணம். அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறதா?

தரமான பொருட்கள்

தரமான பொருட்கள்

ஒரு பொருளை கொள்முதல் செய்யும்போது அதன் தரத்தை உறுதி செய்வதுதான் அரசாங்கத்தின் வேலை. கொள்முதல் செய்யப்படும் நிறுவனங்களில் உரிய பரிசோதனை செய்த பின்னர் பொருட்களை பொதுமக்களுக்கு கொடுத்தால் ஏன் குறை சொல்ல போகிறார்கள்?பொங்கலை நம்பி கரும்பு விளைவித்த விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். திமுகவின் தோழமைக் கட்சிகளே கரும்பை விநியோகம் செய்யாததற்கு அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

299 ரூபாய் செருப்பு

299 ரூபாய் செருப்பு

ஒரே வரியில் சொல்லப்போனால் யானை பசிக்கு சோளப்பொறி என்பதுதான் விடியல் அரசின் பொங்கல் தொகுப்பு. என்னுடைய சொத்து விவரம் முழுவதும் இணையதளத்தில் உள்ளது. யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் . வெறும் 299 ரூபாய் பாட்டா செருப்பை அணிந்துதான் நான் லண்டனுக்கே சென்று வந்துள்ளேன். ஸ்டாலின் போன்று விலை உயர்ந்தை அணியவில்லை." என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+