ஊழலை ஒழிப்பாரா மோடி? அதானி லஞ்சம் கொடுத்தது எப்படி? ஆனந்த் சீனிவாசன் விளாசல்
சென்னை: ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்பேன் எனச் சொல்லும் பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் அதானி ஊழல் நடைபெற்று இருக்கிறது என ஆனந்த் சீனிவாசன் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
கடந்த 15 ஆம் தேதி அரசியல் சாசனம் மீதான விவாதங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக மக்களவையில் 1 மணி நேரம் 50 நிமிடங்கள் வரை உரையாற்றினார். அப்போது அவர் 11 தீர்மானங்களை முன்மொழிந்தார். ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டும் என்றால் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார், கூடுதலாக லஞ்சமே அற்ற அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தன் உரையில் சுட்டிக்காட்டி இருந்தார்.

லஞ்சத்திற்கு எதிராகப் பேசும் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில்தான் இந்திய அரசு நிறுவன அதிகாரிகளே ஒப்பந்தம் வழங்க லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதைப் பற்றி பிரதமர் விளக்கம் அளிப்பாரா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்தியப் பணக்காரர் அதானி உள்ளிட்ட ஏழு நிர்வாகிகள் மீது, லஞ்சம் கொடுத்து சூரியசக்தி மின் உற்பத்திக்கான ஒப்பந்தம் பெற்றதாகக் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க வழக்கறிஞர்களால் குற்றச்சாட்டு பதியப்பட்டது. ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக அதானி ரூ.1750 கோடி லஞ்சம் கொடுத்ததாகப் புகார் எழுந்தது. நியூயார்க் கிழக்கு மாவட்ட அரசு வழக்கறிஞர் அலுவலகம் முன்வைத்த குற்றச்சாட்டில் இந்தியாவில் பல மாநிலங்களில் சூரிய சக்தி மூலம் தயாரிக்கப்படும் மின் விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக 250 மில்லியன் டாலரை இந்த அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கொடுக்க அதானி அனுமதி அளித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி இந்திய அரசியலை ஒரு கலக்கு கலக்கியது.
இந்த ஊழல் புகாரில் ரயில்வே, ஹெச்.ஏ.எல்., இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ஆகிய நிறுவன அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாகக் கொடுத்த வழக்கில் அதானிக்கு எதிரான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் தீவிரமடைந்துள்ளது.
ஆனால், அதைப் பற்றி எல்லாம் மவுனமாக உள்ள பிரதமர் மோடி, லஞ்சம் இல்லாத அரசை உருவாக்குவோம் என்று பேசி இருக்கிறார் என பங்குச் சந்தை நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கேள்வி எழுப்பி இருக்கிறார். அவர் சன் நியூசுக்கு அளித்துள்ள பேட்டியில், "நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றும் போது 'ஜீரோ சதவீதம்கூட ஊழல் அற்ற ஆட்சியை வழங்குவோம்' என்று பேசி இருக்கிறார். அவர் பேசிய இரண்டு நாட்களிலேயே எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் அமெரிக்காவில் லஞ்சம் கொடுத்த வழக்கில் அதானி எதிரான ஆவணங்கள் பலமாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், அவர் வழக்கு சம்பந்தமாக அமெரிக்க நீதிமன்றம் போக வேண்டிய கட்டாயம் இருக்காது என்று ஒரு செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே, ஹெச்.ஏ.எல்., இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ஆகிய நிறுவன அதிகாரிகளுக்குக் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்த வழக்கில் அதானிக்கு எதிரான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் தீவிரமடைந்துள்ளது. இந்தியன் ஆயில் காப்பரேசன் நிறுவன அதிகாரிகளுக்கு ரூ.538 கோடி லஞ்சமாகக் கொடுத்த அமெரிக்க நிறுவனம் ஒப்பந்தங்களைப் பெற 10% லஞ்சம் கொடுத்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகாருக்கு உள்ளான மூன்று நிறுவனங்கள் மீதும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு நிறுவனம் ரயில்வே ஒப்பந்தத்தை எடுத்துள்ளது. அதற்காக அரை மில்லியன் டாலர் தொகையை லஞ்சமாகக் கொடுத்துள்ளது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட 5 லட்சம் டாலர்.

அந்த சில நிறுவனங்கள் என்ன என்றால், மூன் கார்ப்பரேசன். அடுத்து ஆரக்கல் கம்பெனி. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன். ஆரக்கல் 6.8 மில்லியன் டாலரை ஒப்பந்தம் பெற லஞ்சமாக கொடுத்துள்ளது. நிவியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வர்த்தகம் செய்வதற்காக இந்தியன் ஆயில் லஞ்சம் கொடுத்துள்ளது. ஆல்பர் பிக் கம்பெனிக்கு 63 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்துள்ளது.
இதில் ஹெச்.ஏ. எல் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனமும் செபி மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள். இதைப் பற்றி செபிக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதா? அரசு அதிகாரிகள் ஒப்பந்தம் தருவதற்காக லஞ்சம் பெற்று இருக்கிறார்களே அதற்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்று நாம் தான் கேட்க வேண்டும்" என்று ஆதங்கப்பட்டுப் பேசி இருக்கிறார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications