சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முக்கியம்! அவசரமாக டெல்லி புறப்பட்ட அண்ணாமலை.. பிளைட்டில் யாரு? அவரா! ஏன்? கண்காணிக்கும் உளவுத்துறை?

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி கிளம்பி உள்ள நிலையில் இந்த பயணம் பல்வேறு விஷயங்களுக்காக கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். நேற்று ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்த நிலையில் அவர் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.

நேற்று ஆளுநர் ரவியை சந்தித்த பின் பேசிய அண்ணாமலை, தமிழ்நாடு சட்ட ஒழுங்கு சரியில்லை. பிரதமர் மோடி தமிழ்நாடு வந்த போது சரியான பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. செஸ் ஒலிம்பியாட் வந்த போது அவருக்கு பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை.

சட்ட ஒழுங்கில் குறைபாடு உள்ளது என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக ஆளுனரிடம் அண்ணாமலை ரிப்போர்ட் ஒன்றை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதேபோல் பல்வேறு மசோதாக்கள் பற்றியும் இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

11 முக்கிய பாயிண்ட்.. கல்லூரிகளில் ராக்கிங்கை தடுக்க அதிரடியாக உத்தரவிட்ட டிஜிபி சைலேந்திர பாபு 11 முக்கிய பாயிண்ட்.. கல்லூரிகளில் ராக்கிங்கை தடுக்க அதிரடியாக உத்தரவிட்ட டிஜிபி சைலேந்திர பாபு

சைலேந்திர பாபு

சைலேந்திர பாபு

இந்த நிலையில் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியாகவே இருக்கிறது. பிரதமர் மோடி தமிழ்நாடு வந்த போது அவருக்காக உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றும் டிஜிபி சைலேந்திர பாபு பதில் அளித்து இருந்தார். டிஜிபி சைலேந்திர பாபு இது தொடர்பாக பேசுகையில், தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் நடந்த போது பிரதமர் மோடி வந்தார். அப்போது பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை. பாதுகாப்பு உபகரணங்கள், போலீஸ் பயன்படுத்தும் கருவிகள் எதிலும் எந்த விதமான குறைபாடும் இல்லை. இதை எல்லாம் அடிக்கடி தணிக்கை செய்து வருகிறோம்.

விளக்கம்

விளக்கம்

உபயோகம் இல்லாத உபகரணங்களை உடனடியாக தவிர்த்து வருகிறோம். இது எப்போதும் இருக்கும் சோதனை நடைமுறைதான். தமிழ்நாடு போலீசிடம் இருக்கும் உபகரணங்கள் எல்லாம் தரமான உபகரணங்கள்தான். தமிழ்நாட்டிடம்தான் அதிக எண்ணிக்கையில் தரமான உபகரணங்கள் இருக்கின்றன. பிரதமர் மோடிக்கு சரியான பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறுவது தவறு. மோடிக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட்டது என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார்.

சைலேந்திர பாபு

சைலேந்திர பாபு

இதற்கு முன்னதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவை என்.ஐ.ஏ. இயக்குநர் திங்கர் குப்தா சந்தித்தார். இவர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. கோவை கார் வெடிப்பு தொடர்பாக இவர்கள் ஆலோசனை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அதோடு மங்களூர் வெடிப்பில் தொடர்புடைய நபர் கோவையில் தங்கி இருந்ததும், ஊட்டியில் ஒருவர் இவருக்கு சிம் வாங்கி கொடுத்ததும் விசாரிக்கப்பட்டு வருகிறது. திங்கர் குப்தா - சைலேந்திர பாபு இருவரும் அதை பற்றி ஆலோசனை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் சந்தித்த நிலையில், தமிழக கவர்னர் ரவியையும் திங்கர் குப்தா சந்தித்தும் ஆலோசித்தார். தமிழ்நாட்டில் சமீபத்தில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியதை மையமாக வைத்து இந்த சந்திப்பு நடந்தது.

ஆலோசனை

ஆலோசனை

அந்த ஆலோசனையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, கடலோர பாதுகாப்பு உள்ளிட்ட பல விசயங்கள் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆர். என் ரவி முன்னாள் உள்துறை அதிகாரி என்பதால் முக்கியமான உளவு விஷயங்கள், உள்துறை தகவல்கள் குறித்து இவர்கள் ஆலோசனை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இன்று 11:30-மணிக்கு சென்னையில் இருந்து விஸ்தாரா விமானத்தில் டெல்லி சென்றார் என்.ஐ.ஏ. இயக்குநர் திங்கர் குப்தா. அதே விமானத்தில் பாஜக அண்ணாமலையும் டெல்லி சென்றுள்ளார். டெல்லிக்கு பல்வேறு பணிகள் காரணமாக செல்லும் அண்ணாமலையுடன் அதே விமானத்தில் திங்கர் குப்தா செல்கிறார். இவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்வார்களா பேசிக்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் ரீதியாக இந்த பயணம் உற்று கவனிக்கப்படுகிறது. குறிப்பாக, மாநில உளவுத்துறை இதை கவனித்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

உளவுத்துறை

உளவுத்துறை

பாஜகவில் தற்போது உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. தமிழ்நாடு பாஜகவில் சுனாமி போல புயலை கிளப்பி இருக்கிறது காயத்ரி ரகுராம் நீக்கப்பட்ட விவகாரமும், திருச்சி சூர்யா ஆடியோ விவகாரமும். இது தொடர்பான புகார்கள் பாஜக மேலிடத்திற்கும் சென்றுள்ளது. இந்த விஷயமும் டெல்லிக்கு தெரிந்து கண்டித்து இருக்கிறதாம். தமிழ்நாடு பாஜக மீது டெல்லி அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அண்ணாமலை அவசரமாக டெல்லிக்கு சென்றுள்ளார். டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ள அவர் செல்வதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு பின் பல அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

English summary
Is NIA director travelling on the same flight that BJP chief Annamalai travels to Delhi? What is happening?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X