வில்லங்க சான்றிதழில் "Nil Encumbrance" இருந்தாலே போதுமா? நிலம் வாங்குபவர்கள் அறிய வேண்டிய EC உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலம் வாங்குவது என்பது ஒவ்வொரு சராசரி மனிதனின் வாழ்நாள் கனவு மற்றும் மிகப்பெரிய முதலீடு ஆகும்.. ஆனால், அவசரத்தில் முறையாக வில்லங்க சான்றிதழைப் பார்க்காமல் ஒரு நிலத்தை வாங்குவது என்பது, தெரிந்தே ஒரு புதைகுழியில் கால் வைப்பதற்குச் சமம்.. நிலம் வாங்குவதற்கு முன்பாக நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஆவணம் இந்த வில்லங்க சான்றிதழ் (Encumbrance Certificate) ஆகும்.. அதை பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வது அவசியமாகும்..!!

ஒரு சொத்தின் கடந்த கால வரலாறு, அதாவது ஒருவர் வாங்க போகும் சொத்து இதற்கு முன்பு யார் யாரிடம் இருந்தது, யாரால் யாருக்கு விற்கப்பட்டது, அந்தச் சொத்தின் மீது ஏதேனும் கடன் வாங்கப்பட்டுள்ளதா அல்லது கோர்ட்டில் வழக்குகள் ஏதாவது நிலுவையில் உள்ளதா போன்ற அனைத்து விவரங்களையும் இது புட்டுப் புட்டு வைத்துவிடும் ஆவணம்தான் வில்லங்க சான்றிதழ்..

Nil Encumbrance

வில்லங்க சான்றிதழ் பலன்கள்

எனவேதான், அனுபவம் உள்ளவர்கள் நிலம் வாங்கும் முன் வில்லங்கத்தை ஒருமுறையாவது பார்க்க சொல்கிறார்கள்.. வில்லங்க சான்றிதழ் இல்லாமல் நீங்கள் ஒரு நிலத்தை வாங்கினால், அந்த நிலம் ஏற்கனவே வேறொருவருக்கு விற்கப்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது.. அல்லது அந்த நிலத்தை அடமானம் வைத்து அதன் உரிமையாளர் ஏதேனும் வங்கியில் பெரிய தொகையைக் கடனாகப் பெற்றிருக்கலாம்..

நீங்கள் நிலத்தை வாங்கி முடித்த பிறகு, வங்கி அதிகாரிகள் வந்து கடனை அடைக்கச் சொல்லி ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடும் போதுதான் உங்களுக்கு பல கசப்பான உண்மைகள் தெரியவரும்..

நிலம் வாங்குவோர் அறிய வேண்டிய உண்மை

சில நேரங்களில் குடும்ப பங்கீடு தொடர்பான நீதிமன்ற வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கலாம்.. இத்தகைய சிக்கல்கள் உள்ள நிலத்தை நீங்கள் தெரியாமல் வாங்கிவிட்டால், உங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் பறிபோவதுடன், மீதி காலத்தை நீதிமன்ற படிக்கட்டுகளை மிதிப்பதிலேயே கழிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும்.. இதுபோன்ற சிக்கல்களை முன்கூட்டியே தவிர்க்க வில்லங்க சான்றிதழ்தான் கை கொடுத்து உதவுகிறது..

அடுத்ததாக, வில்லங்க சான்றிதழில் "Nil Encumbrance" என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அதன் பொருள் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..

பத்திரப்பதிவு அவசியம்

"Nil" என்றால் "ஒன்றுமில்லை" என்று பொருள்.. அதாவது, நீங்கள் குறிப்பிட்ட அந்த காலப்பகுதியில் அந்த நிலத்தின் மீது எந்த விதமான வில்லங்கங்களும் அரசு பதிவேட்டில் பதியப்படவில்லை என்று அர்த்தம்..

அந்த நிலம் யாருக்கும் அடமானம் வைக்கப்படவில்லை, சொத்தின் மீது எந்த வங்கியிலும் கடன் நிலுவையில் இல்லை, சட்டப்பூர்வமான சிக்கல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதை இது உறுதிப்படுத்துகிறது.. எளிமையாக சொன்னால், அந்த சொத்து விற்பனைக்கு தகுதியான, தெளிவான நிலையில் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.. இது நிலம் வாங்குபவருக்கு ஒருவித மனநிம்மதியையும் பாதுகாப்பையும் வழங்குகிறது..

தமிழக பதிவுத்துறை

இருந்தாலும், "Nil" என்று வந்துவிட்டாலே கண்ணை மூடிக்கொண்டு நிலத்தை உடனடியாக வாங்கிவிடக் கூடாது என்பதும் கசப்பான உண்மை.. சில நேரங்களில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் அல்லது சில நீதிமன்றத் தடை உத்தரவுகள் உடனடியாக வில்லங்க சான்றிதழில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்க சிறிய வாய்ப்பு உண்டு..

எனவே, நிலம் வாங்குபவர்கள் குறைந்தபட்சம் 30 ஆண்டுகால வில்லங்க சான்றிதழை எடுத்து மிக நுணுக்கமாக சரிபார்ப்பது மிகவும் அவசியம்..

நிலம் வாங்குவது என்பது வெறும் மண் வாங்குவது அல்ல, அது உங்கள் வாழ்நாள் உழைப்பின் சேமிப்பு.. அந்தச் சேமிப்பு பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், முறையான வில்லங்க சான்றிதழ் சரிபார்ப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று.. ஆவணங்கள் நூறு சதவீதம் சரியாக இருந்தால் மட்டுமே அந்த நிலம் உங்களுக்கு உண்மையான சொத்தாக நிலைத்திருக்கும்.. !!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+