எல்லாம் நடிப்பா கோபால்ல்ல்? "கல்ப சமாதி" நிலைக்கு போன நித்தியானந்தா! பின்னணியில் ஆபரேஷன் கைலாஸா?
சென்னை: கைலாஸாவில் இருக்கும் நித்தியானந்தா உடல்நிலை மிகவும் மோசமாகி வருவதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அவர் உடல்நிலை சரியில்லை என்று கூறப்படும் நிலையில்.. இது எந்த அளவிற்கு உண்மை. அவரை பற்றி வரக்கூடிய இந்த செய்திகளுக்கு பின்னணி காரணம் என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
இந்தியாவில் இருந்த நித்தியானந்தா பல்வேறு வழக்குகள், புகார்களை தொடர்ந்து கைலாஸா என்ற தீவை வாங்கி அங்கு குடியேறினார். கரீபியன் தீவுகளில் இந்த தீவு இருப்பதாக சொல்லப்பட்டாலும் உறுதியாக கைலாஸா தீவு எங்கே இருக்கிறது என்பது இன்னும் குழப்பமாகவே இருக்கிறது.
இந்த நிலையில்தான் தற்போது நித்தியானந்தா உடல்நிலை மோசமாக இருப்பதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன.

நித்தியானந்தா கைலாஸா
அவர் உடல்நிலை மோசமாக இருக்கிறது. ஆள் எலும்பும் தோலுமாக ஆகிவிட்டார். அவரை பார்க்க ஆட்கள் இல்லை. கைலாஸாவில் பணம் இல்லை. மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். நல்ல மருத்துவ வசதி இல்லை. இதனால் தன்னுடைய உடல்நிலையை கவனிக்க முடியாமல் அவர் முடங்கிவிட்டார் என்று செய்திகள் வந்தன. அதோடு அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இது இணையம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.

மரணம் செய்தி
இந்த நிலையில்தான் நித்தியானந்தாவின் கைலாஸா பேஸ்புக் பக்கத்தில், அவரின் புகைப்படம் பதிவு ஏற்றப்பட்டது. அதில் நான் நல்ல உடல்நிலையில் இருக்கிறேன் என்றும் அவர் விளக்கம் அளித்தார். ஆனாலும் அவரின் தோற்றம் மிகவும் மோசமாக இருந்ததாக நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்தனர். அதாவது ஆள் மெலிந்து காணப்படுகிறார். அவருக்கு உடல்நிலையில் எதோ பிரச்சனை என்று நெட்டிசன்கள் பலர் தெரிவித்தனர்.

மறுப்பு
இந்த நிலையில்தான் நித்தியானந்தா தரப்பு மீண்டும் அளித்த விளக்கத்தில், நான் நல்ல உடல்நிலையில் இருக்கிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை. உடலில் எந்த உறுப்பிலும் பாதிப்பு இல்லை. எனக்கு எந்த வைரஸ் பாதிப்பும் இல்லை. ஆனால் என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை. உணவை உட்கொள்ள முடியவில்லை. கஷ்டப்பட்டு சாப்பிட்டால் கூட வாந்தி எடுத்துவிடுகிறேன்.

உறக்கம் இல்லை
மற்றபடி நிர்வி கல்ப சமாதிக்கு மட்டுமே என்னால் செல்ல முடிகிறது. அந்த பூஜையை மட்டுமே செய்ய முடிகிறது. மற்ற நேரங்களில் என்னால் சரியான உடல்நிலையில் இருக்க முடியவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் அவரின் இந்த செயல் நடிப்பாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவரின் மடத்திற்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்ததில், கைலாஸாவில் இருந்து ஆன்லைன் மூலம் நித்தியானந்தா பயிற்சி வழங்குகிறார்.

விளக்கம்
ஆனால் இதற்கு போதிய கூட்டம் வரவில்லை. இதுவரை பெரிய அளவில் மக்கள் இதற்கு பதிவு செய்யவில்லை. இதனால் நித்தியானந்தாவிற்கு போதிய அளவு வருமானம் வரவில்லை. ஏற்கனவே கைலாஸாவை நிர்மாணம் செய்ய அவர் நிறைய செலவு செய்துவிட்டார். இப்போது
பெரிதாக அவரிடம் பணம் இல்லை. இந்த மீட்டிங் மூலம் பணம் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் ஆட்கள் குறைவாக சேர்ந்துள்ளனர்.

ஏமாற்று வேலை
இதனால்தான் நிர்வி கல்ப சமாதிக்கு சென்றுவிட்டதாக கூறுகிறார். இதன் மூலம் சாவின் விளிம்பிற்கு சென்றேன். கடவுளை கண்டேன் என்று விளம்பரம் செய்வார். அதன் மூலம் அவரின் வகுப்பிற்கு பலர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்.. எல்லாம் நடிப்புதான் என்று கூறப்படுகின்றன. ஆனால் நித்தியானந்தா பக்தர்களோ.. அப்படி எல்லாம் இல்லை. அவர் உண்மையிலேயே நிர்வி கல்ப சமாதிக்கு சென்றுவிட்டார். ஒரு நாளில் 1 மணி நேரம் மட்டுமே எங்களிடம் பேசுகிறார். அவரை பற்றி வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறுகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications