"ஸ்டேட்டஸ் கோ".. புஸ்ஸ் என புஸ்வானம் போல தோற்ற "20+20+21" பிளான்.. துள்ளி குதித்த எடப்பாடி.. போச்சே!
சென்னை: அதிமுகவில் என்ன நடந்தது வருகிறது? சசிகலா - டிடிவி - ஓ பன்னீர்செல்வம் பிளான் என்ன? என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் எம்எல்ஏக்களை எடப்பாடி தரப்பில் இருந்து தங்கள் பக்கம் இழுக்க ஓ பன்னீர்செல்வம் அணி தீவிரமாக முயன்று வந்தது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 66 பேரில் எடப்பாடிக்கு 62 பேரின் ஆதரவு இருக்கிறது.
இந்த பெரும்பான்மை பலம் எடப்பாடிக்கு கூடுதல் வலிமையை கட்சிக்குள் கொடுத்து வருகிறது. இவர்களை எடப்பாடியிடம் இருந்து வெளியே கொண்டு வந்துவிட்டால் அவரின் பலம் வீழ்ந்துவிடும்.
இதை முதலில் உடைப்பதற்காகத்தான் சசிகலா, ஓபிஎஸ், தினகரன் தரப்பினர் மறைமுகமாக கைக்கோர்த்து செய்லபட்டு வந்ததாக கூறப்பட்டது.

என்ன பிளான்?
அந்த திட்டத்தின் படி, மூன்று குழு உருவாக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. அதன்படி 62 எம்.எல்.ஏ.க்களில் எடப்பாடியை தவிர்த்து விட்டு 61 எம்.எல்.ஏ.க்களின் லிஸ்ட் எடுக்கப்பட்டு 20+20+21 என 3 ஆக பிரித்துள்ளனர். இந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஓபிஎஸ் தரப்பில் ஒரு டீமும், சசிகலா தரப்பில் ஒரு டீமும், தினகரன் தரப்பில் ஒரு டீமும் தனித்தனியாக இயங்கின. எம்.எல்.ஏ.க்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை, ஓபிஎஸ், சசிகலா, தினகரன் மூவரும் தங்களின் டீம்மிடம் விசாரித்திருக்கிறார்கள்.

ஒரே பதில்
அப்போது, மூன்று டீமும் ஒரே மாதிரியான பதிலையே தந்திருக்கிறார்கள். அதாவது, ''அதிமுகவை தலைமையேற்று கட்சியை வழிநடத்துவது யார் என்கிற பஞ்சாயத்தால் தான் பிரச்சனை கோர்ட்டுக்கு போய் இருக்கிறது. இதில் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாகவும், இபிஎஸ்சுக்கும் ஆதரவாகவும் மாறி மாறி தீர்ப்புகள், உத்தரவுகள் வந்திருக்கிறது. கடைசியாக இபிஎஸ் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பு வந்திருப்பதால், தற்போது உச்சநீதிமன்றத்திற்கு பிரச்சனை போயுள்ளது.

தெளிவான முடிவு
அதில் தெளிவான முடிவு வரட்டும். அந்த முடிவு எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை பொறுத்தே எங்களின் முடிவை சொல்ல முடியும். இப்போதைக்கு நாங்கள், இபிஎஸ் பக்கம் இருப்பதால் இந்த நிலையே நீடிக்கட்டும். அதற்காக, எடப்பாடி பக்கமே இருந்து விடுவோம் என்பதல்ல. கட்சி யார் பக்கம் இருக்கிறதோ அதை யொட்டியே எங்கள் முடிவும் இருக்கும். அதனால், இதில் அவசரப்பட்டு ஒரு நிலை எடுத்தோமேயேனால் கடைசியில் இரட்டை இலைதான் முடங்கும்.

இலை முடங்கும்
அந்த சூழல் கட்சிக்கு வரக்கூடாது. அப்படி வந்தால் அது புரட்சித் தலைவருக்க்கும் புரட்சி தலைவிக்கும் செய்யும் துரோகமாகி விடும். அதனால், கோர்ட் தீர்ப்பெல்லாம் வந்து ஒரு தெளிவான முடிவு தெரியும் வரை 'ஸ்டேட்டஸ் கோ'-வை மெயிண்டெய்ன் பண்ணுவதுதான் சரி. எங்களுக்கு எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே விருப்பம். அதனால் பொறுத்திருங்கள் '' என்று தங்கள் முடிவை தெரிவித்து விட்டனர்.

அணி தாவுவது
அதனால்தான் அணி தாவுவது நின்று விட்டது என்கிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர். இப்போது கண்டிப்பாக யாரும் அணி தாவ மாட்டார்கள் என்று ஓபிஎஸ்ஸுக்கு தெரிந்துள்ளது. சசிகலாவும் இந்த எதார்த்தத்தை புரிந்து கொண்டாராம். அதனால், பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறார்களாம். இதனால் இப்போதைக்கு கட்சியில் அணி தாவல் இருக்காது என்கிறார்கள். இந்த விஷயம் அறிந்து எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஏக குஷியில் இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications