சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரண்டில் ஒன்று பார்க்க முடிவு.. மதுரையில் போட்டி பொதுக்குழு! பரபரக்கும் பன்னீர்செல்வம் டீம்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தை பொறுத்தவரை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முடிவில் திடமுடன் இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

அவர்கள் என்ன பொதுக்குழு நடத்துவது நாம் பொதுக்குழுவை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என ஓ.பன்னீர்செல்வத்துக்கு தாறுமாறான ஐடியாக்களை கொடுத்து வருகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

நாளை ரொம்ப முக்கியம்.. என்ன பண்ணலாம்? விசாரித்த எடப்பாடி.. 3 நாளை ரொம்ப முக்கியம்.. என்ன பண்ணலாம்? விசாரித்த எடப்பாடி.. 3

ஓபிஎஸ் மட்டும் ஒரு வார்த்தை'ம்ன்னு' சொல்லிவிட்டார் என்றால் போட்டி பொதுக்குழுவுக்கான பணிகளை தொடங்கிவிடுவார்கள் போல் அவரது ஆதரவாளர்கள். அந்தளவுக்கு இதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

அதிமுக பிரச்சனை

அதிமுக பிரச்சனை

ஜெயலலிதா இருந்தவரை ராணுவக் கட்டுப்பாட்டோடு ஒரு சின்ன சலசலப்புக் கூட வராமல் இருந்த இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இப்போது என்னவென்றால் சிதறு தேங்காயை போல் நாலாபக்கமும் கட்சி அணி அணியாக பிரிந்துள்ளது. ஒரு பக்கம் அதிமுகவின் பொதுச்செயலாளர் நான் தான் என்று கூறிக் கொண்டு உலா வருகிறார் சசிகலா. இன்னொரு பக்கம் அதிமுகவை மீட்கும் பயணம் தொடரும் என பேசி வருகிறார் டிடிவி தினகரன். இதற்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் விடாக்கண்டன் கொடாக்கண்டன்களை போல் நீயா நானா என்ற குஸ்தியில் இறங்கிவிட்டனர்.

தொண்டர்கள் புலம்பல்

தொண்டர்கள் புலம்பல்

எப்படி இருந்த கட்சி இப்படி கரைகிறதே என அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் ஆற்றாமையில் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை கண்கூடாக காண முடிகிறது. இதனிடையே அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை அடைந்தே தீருவது என முடிவெடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி அதற்கான பணிகளை கணக்கச்சிதமாக செய்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு அமைந்துள்ள டீம் அப்படி. வெட்டி வா என்றால் கட்டி வரக் கூடிய அளவுக்கு தனது தளகர்த்தர்களாக முன்னாள் அமைச்சர்கள் சிலரை கையில் வைத்திருக்கிறார் எடப்பாடி.

ஜூலை 11 பொதுக்குழு

ஜூலை 11 பொதுக்குழு

இதனிடையே ஜூலை 11-ஆம் தேதி தனது ஒப்புதலின்றி பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லாது என நாட்டாமை படத்தில் வரும் சரத்குமார் காட்சியை போல் திரும்ப திரும்ப சொல்லி வருகிறார் ஓபிஎஸ். ஆனால் அதனை பொருட்படுத்தாத இபிஎஸ் டீம் பொதுக்குழுவை நடத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருவதோடு, ஜூலை 11-ஆம் தேதி எடப்பாடிக்கு பொதுச்செயலாளர் என்ற மகுடத்தை சூட்டவும் தயாராகிவிட்டது. இந்நிலையில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நீங்கள் ஏன் தனிப் பொதுக்குழுவை நடத்தகூடாது என ஓபிஎஸ் சிடம் தூபம் போட்டுள்ளார்கள் அவரது ஆதரவாளர்கள்.

Recommended Video

    ஒற்றை தலைமை வந்தாலும் சரி இரட்டை தலைமை வந்தாலும் சரி அந்த கட்சி தேறாது - டிடிவி தினகரன்
    பொறுமை -புன்னகை

    பொறுமை -புன்னகை

    அவர்கள் என்ன நம்மீது நடவடிக்கை எடுப்பது, ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நீங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வத்திடம் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்,நீங்க மட்டும் ஒரு வார்த்தை'ம்ன்னு' சொன்னா போதும் மதுரையில் தொண்டர்களை வைத்து நாம் பொதுக்குழுவை நடத்தலாம் என்பன உள்ளிட்ட பல ஐடியாக்களையும் கொடுத்திருக்கிறார்கள். வழக்கம் போல் புன்னகையையும் பொறுமையையும் மட்டும் அவர்களுக்கு பதிலாக தரும் ஓ.பன்னீர்செல்வம், இந்த விவகாரத்தில் தனது அடுத்த கட்ட நகர்வை எப்படி வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    Is OPS conducting a competition Aiadmk general council? அதிமுக பொதுக்குழு விவகாரத்தை பொறுத்தவரை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முடிவில் திடமுடன் இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X