வோட் ஷேரிங்.. திமுக ஓட்டை பிரிப்பது இவரா?.. பிஜேபி லீடர்கள் கணக்கு இதுதான்.. கையை பிசையும் பழனிசாமி
சென்னை: தென்மண்டல ஓட்டுக்களை யார் அள்ள போகிறார்கள் என்பதில் பெருத்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து, அதிமுக - பாஜகவுக்குள் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.
நேற்றைய தினம் எம்பி தேர்தல் கூட்டணி விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர்களிடம் பேசியுள்ளார்.. இதுவரை அண்ணாமலையுடன் கூட்டணி தொடர்பாக அதிமுக பேச்சுவார்த்தை எதையும் நடத்தாத நிலையில், இன்று டெல்லியில் வைத்தே அமித்ஷா முன்னிலையிலேயே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது..

ஆனால், இந்த சந்திப்பின்போது, எடப்பாடியிடம் ஒருங்கிணைந்த அதிமுக குறித்த பேச்சும் எழுந்துள்ளது.. அதிலும் ஓபிஎஸ்ஸூடன் இணக்கமாக சேர்ந்து, தேர்தலை சந்திக்கவும் அமித்ஷா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.. ஆனால், எடப்பாடியோ மறுத்துள்ளார்..
ஓபிஎஸ் பிளான்: கட்சி முழுமையாக தன்னிடம் வந்து விட்டது. அவர்களை சேர்க்க மாட்டேன் என்று பிடிவாதமாக சொன்னாராம்.. அதுமட்டுமல்ல, தாங்கள் மட்டுமே அதிமுக என்பதால் ஓபிஎஸ் தரப்பிடம் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்றும், ஓபிஎஸ் தரப்பினரை சந்திப்பது உள்ளிட்டவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

நிருபர்கள் கேள்வி: இந்த பேச்சுவார்த்தை முடித்துவிட்டு, செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி தந்தார்.. அப்போது, ஓபிஎஸ் மனம் மாறி வந்தால் அவரை கட்சியில் இணைத்து கொள்வீர்களா? என்றும் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, "ஏற்கனவே இதை நான் சொல்லிவிட்டேன்.. பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்யப்பட்டவுடனேயே, உங்களை போல நிருபர்கள் என்னை கேட்டார்கள்.. அவர்களிடம் தெளிவாக சொல்லிட்டேன்..
ஒருசிலரை தவிர்த்து, அதிமுக மீது நன்மதிப்பு வைத்து, மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விசுவாசமிக்கவர்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் எல்லாரும் கட்சிக்கு வரலாம்.. இந்த கட்சிக்கு துரோகம் இழைப்பவர்கள் யாராக இருந்தாலும், இந்த கட்சியில் இடமில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டேன்.. அதுல யார் யார் இடம்பெற மாட்டார்கள் என்பதை நீங்களே யோசனை பண்ணிக்குங்க" என்றார்..
பாஜக முயற்சி: எடப்பாடியின் தொடர் பிடிவாதத்தை கண்டு பாஜக மேலிடமே சற்று விக்கித்து போனதாம்.. இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு தகவலும் கசிந்துள்ளது.. நேற்றைய தினம் டிடிவி தினகரன் பேச்சையும் பாஜக மேலிட தலைவர்கள் எடுத்துள்ளனர்.. அவரையும் கூட்டணிக்குள் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், இதற்கும் எடப்பாடி மறுத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.. இந்த முறை தென்மண்டலத்தில் காலை பதிக்க பாஜக முயற்சிக்கிறது.. இதற்காக முக்குலத்தோர் சமுதாய ஆதரவை பெற்றால்தான் அது சாத்தியம் என்பதையும் அறிந்து வைத்துள்ளது..
அதற்காகவே, அமமுகவை கூட்டணிக்குள் சேர்க்க வேண்டும் என்று நிறைய அழுத்தம் தந்ததாம்.. அதாவது, ஓபிஎஸ்ஸைவிட, கூடுதல் அழுத்தம் தினகரனுக்கு தரப்பட்டுள்ளது.. இன்னும் சொல்லப்போனால், அமமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கவும் அமித்ஷா முடிவு செய்துள்ளாராம்.. இதையறிந்து தினகரனும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளாராம்.. அதனாலேயே மே 1ல் நடக்கும் தொழிலாளர் தின பொதுக்கூட்டத்தில், தன்னுடைய கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்க போவதாக கூறுகிறார்கள்..
தனித்து போட்டி: ஆக, பன்னீர்செல்வத்தை, எக்காரணத்தை முன்னிட்டும் இணைக்க முடியாது என்று எடப்பாடி திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால், ஓபிஎஸ் தரப்பு நிலை கேள்விக்குறியாகி உள்ளது...
இன்னும் அதிமுக வழக்கில் இறுதி தீர்ப்பு வரவில்லை.. அது ஒன்றுதான் கடைசி ஆயுதமாக ஓபிஎஸ் கையில் வைத்துள்ளார்.. அந்த தீர்ப்பும் சாதகமாக வரவில்லை என்றால், தனித்து போட்டியிட நேரிடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. அப்படி தனித்து போட்டியிட்டால், அப்போதும் ஓபிஎஸ்ஸை பாஜக கைவிடாமல், தாங்கி கொள்ளக்கூடுமாம்.. காரணம், தென்மண்டல வாக்குகளை முழுமையாக பெற வேண்டும் என்பதே பாஜகவின் திட்டமாக உள்ளது.. என்ன நடக்க போகிறது தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications