Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி மேஜையில் இருந்த ஃபைல் .. ராமநாதபுரத்தில் போட்டியிடுவது உண்மையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடி தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலின் போது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பாஜக தமிழ்நாடு பொருளாளர் எஸ். ஆர் சேகர் தெரிவித்துள்ளார்.

2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக நேற்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆலோசனை செய்துள்ளார்.

Is PM Modi planning to contest in Ramanathapuram in the 2024 Election?

தென் மாநில பாஜக தலைவர்கள், பொதுச்செயலாளர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ஜே.பி நட்டா இந்த திட்டத்தை தெரிவித்து அது தொடர்பாக நேற்று ஆலோசனை கேட்டு இருக்கிறார். . இதற்கு பெரும்பாலான தலைவர்கள், உடனடியாக ஆதரவு வழங்கி உள்ளனர். மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என்று தீவிரமாக கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் மோடி எங்கே ராமநாதபுரத்தில் போட்டியிடுவாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி, குஜராத்தில் உள்ள வதோதரா தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் பிரதமர் மோடி வெற்றிபெற்றார். அதன்பின் வதோதரா தொகுதியில் பிரதமர் மோடி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் தென் இந்தியாவில் கவனம் செலுத்த பாஜக முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலின் போது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பாஜக தமிழ்நாடு பொருளாளர் எஸ். ஆர் சேகர் தெரிவித்துள்ளார். ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் அளித்த பேட்டி பின்வருமாறு.. பாஜக தமிழ்நாட்டில் இத்தனை நாட்கள் பேசு பொருட்களாக இல்லை. இப்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது. இதை பார்த்து பலர் அரண்டு போய் உள்ளனர். பாஜக தலைவர் அப்படி இருக்கிறார்.

அவர் அதிரடி ஆட்டம் ஆடுகிறார். சிக்ஸர் அடிக்கிறார். அடித்து ஆடுகிறார். அவர் தொடர்ந்து இப்படித்தான் ஆடுவார். இது கண்டிப்பாக தொடரும். நாங்கள் மட்டும் எங்களை பற்றி பேசவில்லை. பாஜக தலைவர்களை பற்றி மற்ற கட்சிகளும் பேசுகின்றன. எங்களை இவர்கள்தான் வளர்த்துவிட்டுள்ளனர்.நாங்கள் வளர்ந்து கொண்டு இருக்கிறோம்.

பாஜக பேசுபொருள்: எங்கள் கூட்டணி பற்றி நாங்கள் முடிவு எடுப்போம். இப்போது கூட்டணி பற்றி ஒருவர் தவறாக பேசிவிட்டார் இவர் அப்படி பேசிவிட்டார், அவர் இப்படி பேசிவிட்டார் என்பதை பற்றியெல்லாம் நான் கமெண்ட் செய்ய முடியாது. நாங்கள் அதிமுக கூட்டணியில் இருக்கிறோம்.

அதிமுக + பாஜக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம்.எப்போ.. எந்த நேரத்தில்.. எவ்வளவு இடங்களில் கூட்டணி வைக்க வேண்டும் என்பதெல்லாம் கட்சி தலைமை பின்னர் முடிவு செய்யும். அதை பற்றி இப்போது நாங்கள் பேச மாட்டோம். அதுவரை கூட்டணி பற்றி பேச்சுக்கள் எல்லாம் கிட்டத்தட்ட இலவசமாக கிடைக்கும் சரக்கு போன்றதுதான். பலர் போதைக்கு இதை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

பாஜக வெற்றி: பாஜக வெற்றிபெற வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறது. 2019ல் தமிழ்நாட்டில் பாஜக வெல்ல வேண்டும். இந்த முறை மாபெரும் பங்களிப்பை பாஜக வெல்ல வேண்டும் என்று அண்ணாமலை நினைக்கிறார். முன்னர் கட்சியை வழிநடத்த இப்படி ஒருவர் இல்லை. இப்போது எங்களுக்கு அண்ணாமலை என்ற நல்ல கேப்டன் கிடைத்துவிட்டார்.

நாங்கள் இந்த முறை பெரிய கோல் வைத்து இருக்கிறோம். அதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். அண்ணாமலை அதிரடியாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். இப்படி இருக்கும் போது 25 இடங்கள் என்பது சாதிக்க முடியாத இடம் அல்ல. ஒரு பெரிய கோல் வைத்தால்தான் அதை அடைய முடியும் என்பார்கள்.

Is PM Modi planning to contest in Ramanathapuram in the 2024 Election?

அண்ணாமலை: அதைத்தான் நாங்கள் வைத்து இருக்கிறோம். பெரிய கோல் அடைய தெம்பு வேண்டும், திராணி வேண்டும், திட்டம், மக்கள் சப்போர்ட் வேண்டும், தலைவன் வேண்டும். இது எல்லாம் எங்களிடம் இருக்கிறது. 25 தொகுதிகள் அதிமுக உங்களுக்கு கிடைக்குமா என்று கேட்கிறார்கள். அதெல்லாம் கற்பனை கேள்விகள். நாங்கள் போட்டியிட வாய்ப்பு உள்ள தொகுதிகளை ஆய்வு செய்து இருக்கிறோம். தனியாக நின்று வெற்றிபெறும் வாய்ப்பு உள்ள தொகுதிகளை நாங்கள் கண்டுபிடித்து உள்ளோம். எங்கள் தலைவர் அதற்கான இடங்களை கண்டுபிடிப்பித்து இருக்கிறோம். நாங்கள் பலப்படுத்தி வருகிறோம்.

திமுக: திமுக, அதிமுக எல்லாம் தனியாக நின்றதே இல்லை. ஆனால் நாங்கள் நின்று இருக்கிறோம். நாங்கள் சமீபத்தில் ஊட்டியில் எடுத்த சர்வேயில் 11% வாக்குகள் இருப்பதாக கூறப்பட்டது. நாங்கள் தனியாக நிற்க தயார்படுத்திக்கொண்டு இருக்கிறோம். தனியாக நிற்க பலம் இருந்தால் அதிமுக கூட்டணியிலும் அதிக இடங்களை கேட்க முடியும்.

அதிமுகவிற்கு வேறு வழி இல்லாத நிலை ஏற்படும். கூட்டணி கட்சிகள் போடும் இடங்களை வாங்கிக்கொள்ளும் திட்டத்தில் நாங்கள் இல்லை. எங்களுக்கு தேவையானதை நாங்கள் கேட்போம். பிட்சை எடுக்கும் நிலையில் நாங்கள் இல்லை. நாங்கள் வலிமையாக, வலுவாக இருக்கிறோம். அதிமுகவிடமும் அதற்காக இடம் கேட்போம்.

மோடி ராமநாதபுரம்: பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடப்போவதாக செய்திகள் வருகின்றன. இதெல்லாம் ஒரு பரபரபிற்காக எழுதப்படும் செய்திகள். மோடியின் மேஜையில் இருக்கும் பைல்களை இவர்கள் பார்த்தது போலவும். அதில் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட போகிறார் என்று இருந்தது போலவும் இவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில்மோடி நின்றால் நாங்கள் சந்தோசப்படுவோம் என்று அண்ணாமலை கூறி உள்ளார்.

மோடி இங்கே போட்டியிட்டால் பாஜக தமிழ்நாட்டை ஸ்வீப் செய்யும். ஆனால் ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுவதாக வரும் செய்திகள் கற்பனை அல்லது ஆசை. அவர் இங்கே போட்டியிட வேண்டும் என்பது எங்களின் விருப்பம். ஆனால் இப்போது வந்திருக்கும் செய்திகள் எல்லாம் வெறும் கற்பனைதான், என்று எஸ். ஆர் சேகர் தெரிவித்துள்ளார். அவர் அளித்த இந்த பேட்டி கடந்த சில வாரங்களுக்கு முந்தையது. இந்த நிலையில்தான் தற்போது 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக நேற்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆலோசனை செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+