இவர்தான் சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன்? சூசகமாக சொன்ன தோனி.. ஆஹா எதிர்காலமே மாறுமே!
சென்னை: டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு பின் சிஎஸ்கே கேப்டன் தோனி கொடுத்த பேட்டி பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. முக்கியமாக அவர் சொன்ன விஷயம் பெரிய விவாதம் ஆகி உள்ளது.
2023 ஐபிஎல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் எப்படியாவது கோப்பை வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. 2023 ஐபிஎல் சீசன் எதிர்பார்ப்பை விஞ்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.தற்போது புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி 2ம் இடத்தில் உள்ளது.
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்தது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங் தேர்வு செய்தது.

சிஎஸ்கே அணியில் அம்பதி ராயுடு சேர்க்கப்பட்டு இருந்தார். இம்பாக்ட் வீரராக அணிக்குள் துபே இறக்கப்பட்டு உள்ளார். சிஎஸ்கே அணியில் இன்று ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, பதிரனா, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேட்ச் & விக்கெட்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்த நிலையில் முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி தொடக்கத்தில் கொஞ்சம் திணறி வந்தது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் நன்றாக இருந்தாலும் பிட்ச் முழுக்க முழுக்க பேட்டிங் செய்ய சாதகமாக இல்லை. பவுலிங் செய்ய வசதியாக பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருந்தது.
இரண்டாவது இன்னிங்சில் பிட்ச் இன்னும் ஸ்லோ ஆகும். அதோடு ஸ்பின் போடுபவர்களுக்கு உதவியாக இருக்கும். இதனால் முதல் இன்னிங்சில் அதிக ரன்களை எடுத்துவிட்டு, டெல்லி அணியை சேஸ் செய்ய வைக்க தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.
ஓப்பனிங் இறங்கிய கெய்க்வாட் 18 பந்தில் 4 பவுண்டரி அடித்தார். 24 ரன்கள் எடுத்து அவர் அவுட்டானார். 13 பந்தில் கான்வே 10 ரன்கள் எடுத்து அவுட்டானார். 12 பந்துகள் பிடித்த மொயின் அலி வெறும் 7 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
ரஹானேவும் 20 பந்தில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசியில் தோனி 9 பந்தில் 20 ரன்கள் எடுக்க சிஎஸ்கே அணி 167/8 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து இறங்கிய டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. சால்ட் 17, மணி பாண்டே 27, ரைலி 35 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இதனால் டெல்லி அணி வெறும் 140-8 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தது.
நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு பின் சிஎஸ்கே கேப்டன் தோனி கொடுத்த பேட்டி பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. முக்கியமாக அவர் சொன்ன விஷயம் பெரிய விவாதம் ஆகி உள்ளது.

அதில், நேற்று போட்டிக்கு பின் பேசிய தோனி , ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் எல்லாம் மாறிவிட்டது . எங்களுடைய ஸ்பின் பவுலர்கள் கொஞ்சம் வேகமாக பவுலிங் செய்தனர். அவர்கள் டெல்லியை விட பிட்சை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டனர்.
இங்கே எவ்வளவு ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற திட்டம் எங்களுக்கு இல்லை. விக்கெட் எடுப்பதை விட ஒவ்வொரு பந்தும் சிறப்பாக வீச வேண்டும் என்பதே எங்களின் திட்டமாக இருந்தது. 160க்கும் மேல் எடுத்தால் நம்பிக்கையாக இருக்கலாம் என்று நினைத்தோம். பவுலிங் சிறப்பாக செய்து உள்ளோம்.
அனால் பேட்டிங் இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாம். மொயின், ஜடேஜா பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இந்த சீஸனின் கடைசி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் எல்லோருக்கும் பேட்டிங் செய்ய கொஞ்சம் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது முக்கியம்.
அணியில் மிட்சல்சான்டனர் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இன்னும் நன்றாக ஆட்டம் சென்று இருக்கும். அவர் இது போன்ற பிளாட் பிட்சுகளில் சிறப்பாக ஆட கூடியவர். அதை நான் விரும்பி இருப்பேன். ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை.
கெய்க்வாட் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். ஒருமுறை அவர் ஸ்கோர் செய்ய தொடங்கினால் அவர் தொடர்ந்து சிறப்பாக ஆடுவார். அப்படிப்பட்ட நபர் அவர். அவருக்கு இந்த ஆட்டம் குறித்த தெளிவு உள்ளது. அவர் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள கூடியவர். அவரை போன்ற வீரர்கள் கிடைப்பது அரிது.
அவர் ஆட்டத்தின் சூழ்நிலைகளை புரிந்துகொள்ள கூடியவர். அவரை போன்றவர்கள்தான் அணிக்கு தேவை, என்று குறிப்பிட்டார்.
இதில் தோனி கெய்க்வாட் பற்றி பேசுகையில் அவருக்கு கேப்டனுக்கான குணம் இருப்பதாய் சூசமாக சொன்னார். "அவருக்கு இந்த ஆட்டம் குறித்த தெளிவு உள்ளது. அவர் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள கூடியவர். அவரை போன்ற வீரர்கள் கிடைப்பது அரிது" என்று குறிப்பிட்டு பேசினார்.
அவரை கேப்டனாக்குவது பற்றி தோனி சூசமாக பேசுகிறாரே என்ற கேள்வி எழுந்துள்ளது.
கேப்டன் :இந்த நிலையில்தான் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற போவதாக பேச்சுக்கள் சுற்றி வரும் நிலையில்தான் சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார் என்பது தொடர்பான ஆலோசனைகள், விவாதங்கள் எழுந்துள்ளன.
அதன்படி சிஎஸ்கே அணியிடம் சில திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணிக்கு நீண்ட கால கேப்டன் இருக்கும் விதமாக இளம் வீரரை கேப்டனாக கொண்டு வர திட்டங்கள் இருக்கிறதாம்.
முதலில் சிஎஸ்கே அணிக்குள் பென் ஸ்டோக்ஸ் கேப்டன் என்ற திட்டத்தின் கீழ்தான் கொண்டு வரப்பட்டார். அவரை எதிர்கால கேப்டனாக்கும் திட்டங்கள் இருந்தன. ஆனால் அவருக்கு அடிக்கடி காயங்கள் ஏற்படுகின்றன.
இந்த சீசனில் கூட 2 போட்டிகளில்தான் ஆடினார். அவர் பார்மிலும் இல்லை. இன்னும் சிஎஸ்கே செட்டப்பில் முழுமையாக அவர் பொருந்தவில்லை. அதோடு அவருக்கு வயதும் இல்லை.

சிஎஸ்கே கேப்டன் ஆனாலும் கூட அவர் நீண்ட காலம் கேப்டன்சி செய்ய முடியாது. அதோடு அவர் ஐபிஎல்லை விட இங்கிலாந்து கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தும் நபர் என்பதால்.. அடுத்த சீசன்களில் உறுதியாக ஆடுவார் என்பதெல்லாம் சந்தேகம்தான்.
இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணி ருத்துராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமிக்க பயிற்சி வழங்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த வருடம் தோனி அணியில் இருப்பார். கேப்டனாக இல்லாமல் ஆலோசகராக ருத்திராஜுக்கு ஆலோசனை வழங்குவார்.
ஜடேஜாவை வைத்து செய்யப்பட்ட கேப்டன்சி முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. அவர் கேப்டனாக நீடிக்க விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் ஜடேஜா மீண்டும் கேப்டனாகாத பட்சத்தில் ருத்துராஜ் கேப்டனாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சீசனில் வென்று கோப்பையை வென்றால் அதோடு தோனி ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது. அதன்பின் அடுத்த சீசனில் இருந்து சிஎஸ்கே அணியின் ஆலோசகராக செயல்படுவார். இல்லையென்றால் அடுத்த சீசனில் புதிய கேப்டனோடு தோனி வெறும் வீரராக தொடருவார் என்று கூறப்படுகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications