அண்ணா நகர் அப்பார்ட்மென்ட்டில் விஜயின் மகன் சஞ்சய்? நீலாங்கரை வீட்டில் ஏன் இல்லை? பிரபலம் சொல்வதென்ன
சென்னை: லைகாவை பொறுத்தவரை, லால் சலாம், இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி என பெரிய பெரிய ஹீரோக்களை வைத்து எடுத்த படங்கள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டது. அதனால் லைக்காவே இப்போது பொருளாதார நெருக்கடியில் உள்ளது.. அப்படியிருந்தும் இந்த படத்தை, விஜய்யின் மகன் சஞ்சய்யை இயக்குனராக போட்டு எடுத்து வருகிறது என்று பாலாஜி பிரபு பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
Jeeva Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "மாமல்லபுரத்தில் விஜய் அருமையான டிராமா போட்டிருக்கிறார்.. கரூருக்கு போறதுக்கு விஜய்க்கு பயம்.. எனவே, காலில் விழுந்தது, கதறியது, அழுதது எல்லாமே டிராமாதான்..

ஒரு போரை வழி நடத்தி செல்லக்கூடியவருக்கு பெயர்தான் தளபதி.. ஆனால் கரூரில் தன்னுடைய தொண்டர்களின் குடும்பத்தை நேரில் சென்று சந்திக்காமல், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வரவழைத்து பேசியுள்ள அரசியல், இதுவரை நாடு பார்த்ததில்லை.
மகாபலிபுரத்தில் ஒரு திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, இந்த டிராமாவை அரங்கேற்றியிருக்கிறார்.. நயன்தாரா கல்யாணம் செய்த அந்த திருமண மண்டபத்தில்தான், இந்த சந்திப்பை நடத்தியிருக்கிறார் விஜய்..
ஜனநாயகன் புரமோஷன்
ஜனநாயகன் பொங்கலுக்கு வரப்போகிறது.. இந்த படத்தின் புரமோஷனை துவங்கும் நேரத்தில்தான் கரூர் சம்பவம் நடந்துவிட்டது. இந்த நேரத்தில் புரமோஷனை ஆரம்பித்தால் மேலும் விமர்சனத்தை சந்திக்க வேண்டிவரும்.. ஜனநாயகன் ப்ரமோஷனை துவங்க வேண்டும் என்பதால்தான், இந்த ஒரு மாதம் வீட்டில் உட்கார்ந்து யோசித்து, அவர்களை நேரில் வரவழைத்து ஆறுதல் சொல்லி உள்ளார்.
அடுத்த 15 நாளில் ஜனநாயகன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாக போகிறது.. டிசம்பரில் ஆடியோ வெளியீடு, ஜனவரியில் பிரம்மாண்டமான பப்ளிசிட்டியுடன் படம் வெளியிட போகிறார்கள்.. இதற்காகவே இநத் மாமல்லபுரம் டிராமா நடந்து முடிந்துள்ளது..ரூ.125 கோடிக்கு அமேசான் பிரைம், இந்த ஜனநாயகன் படத்தை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள்..
அட்வான்ஸ் பணம்
வரும் ஜனவரி 9ம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்யாவிட்டால், ஜனநாயகன் படத்தின் உரிமை தங்களுக்கு வேண்டாம், அட்வான்ஸ் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று நெருக்கடி தர ஆரம்பித்துவிட்டார்கள்.. இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு, அமேசான் பிரைமில் ஜனநாயகன் படத்தை சொன்னபடி விற்பதற்குதான் இந்த டிராமா நடந்தது.
41 குடும்பங்களை தத்தெடுப்பதற்கு விஜய்க்கு அருகதையே கிடையாது.. காரணம் சொந்த தாய்மாமனுக்கு ஒன்னும் செய்யல. ஆரம்ப காலத்தில் படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்யல. இயக்குனர்களுக்கு ஒன்னும் செய்யல.. அவருடைய அப்பா, அம்மா , சுற்றம் சூழலுக்கும் ஒன்னும் செய்யல..
நீலாங்கரை வீட்டில் மகன் இல்லையா?
நீலாங்கரை வீட்டில் அவருடைய மகன் ஜெய்சன் சஞ்சய் இல்லை.. தன்னுடைய அம்மாவுடன் வெளிவந்து பல வருடமாகிவிட்டது.. அண்ணாநகரில் ஒரு பிளாட்டில் தங்கிகொண்டு, சினிமா வாய்ப்புகளை தேடி அலைந்துட்டு இருக்கார்.. இந்த கொடுமை எங்காச்சும் நடக்குமா?
ஒரு மகனை படிக்க வைப்பது, வேலை, திருமணம், வாழ்க்கையை அமைத்து தருவது தகப்பனின் கடமையாகும்.. அந்த கடமையை விஜய் செய்யவில்லையே?
லைகா தயாரிப்பில் சஞ்சய் ஒரு படத்தை டைரக்ட் செய்கிறார்.. அந்த வாய்ப்பை சஞ்சய்க்கு பெற்று தந்தது அஜித்குமார் தான்,.. விஜய் மகனுக்கு லைகாவில் உத்தரவாதம் தந்ததே அஜித் தான்..
அப்பா மீது மகன் சஞ்சய்க்கு கோபம்?
லைகாவை பொறுத்தவரை, லால் சலாம், இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி என பெரிய பெரிய ஹீரோக்களை வைத்து எடுத்த படங்கள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டது. அதனால் லைக்காவே இப்போது பொருளாதார நெருக்கடியில் உள்ளது.. அப்படியிருந்தும் இந்த படத்தை, இயக்குனராக சஞ்சய்யை வைத்து எடுத்து வருகிறது.
இந்த நேரத்தில்கூட மகனை அழைத்து விஜய் பேசவில்லையே.. அப்பாவாக எந்த கடமையையும் செய்யாததால்தான், கோபத்தில் வீட்டை விட்டே வெளியேறிவிட்டார். நீலாங்கரை வீடு 20 கிரவுண்டில் உள்ள பெரிய வீடு.. அவ்வளவு வசதி வாய்ந்த வீட்டை விட்டு மகன் ஏன் வெளியேற வேண்டும்? என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
-
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க












Click it and Unblock the Notifications