சீமானுக்கு சிக்கலாக வந்த ஜெயலலிதா, கருணாநிதி.. மாட்டிக்கிட்டாரே.. புகார் போயிடுச்சு! அடுத்து கைது?
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பளார் சீமானுக்கு பெரிய அரசியல் நெருக்கடி ஒன்று ஏற்பட்டு உள்ளது. 2 முக்கியமான விவகாரங்களில் சீமானுக்கு எதிராக போலீசுக்கே புகார் சென்றுள்ளதாம்.
சமீபத்தில் ஜெயலலிதா குறித்து சீமான் பேசியதே முதல் பிரச்சனைக்கு காரணம். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களை ஏன் தொடர்ச்சியாக இழிவு செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு சீமான் சொன்ன பதிலில், ஜெயலலிதா இரண்டு திராவிட தலைவர்களின் சமாதிக்கு நடுவில் படுத்திருந்தா ஆமா நடுவுல படுத்திருக்கு என்று தானே சொல்ல முடியும் ? அது தப்பு என்றால் இனிமேல் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்குதுன்னு சொல்றேன் என்கிறார்.

அவரின் இந்த பேச்சு அதிமுகவினரை கடுப்பாக்கி உள்ளது. விக்கிரவாண்டியில், எடப்பாடி பழனிசாமி சீமானுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. நாம் தமிழருக்கு இந்த ஆதரவை எடப்பாடி பழனிசாமி கொடுக்கவில்லை. இந்த கோபம் கூட சீமான் இப்படி பேச காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.
கைது?: இந்த விவகாரத்தில் ஏற்கனவே சீமானை கடுமையாக விமர்சனம் செய்த அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி தற்போது இதில் புகாரும் அளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி தரக்குறைவாக பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அரசியல் ரீதியாக அவருக்கு இது புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
விஷயம் 2: அதோடு இல்லாமல் கலைஞரைப் பற்றி இழிவாக பாடல் பாடிய நாம் தமிழர் கட்சியின் சாட்டை முருகனை கைது செய்து தனக்கு நெருக்கடி தருவதாக குற்றம் சாட்டிய சீமான், அதே பாடலை நான் பாடுகிறேன் ; என்னை கைது செய்துப் பாருங்கள் என்று மிக ஆவேசமாக சவால் விடுத்தார். இந்த விவகாரம் தற்போது புதிய கோணத்தை அடைந்து உள்ளது.
சமீபத்தில் குற்றாலத்திற்கு குளிக்க வந்த சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார் வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சார மேடையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டார்.
விக்கிரவாண்டியில் தேர்தல் பரப்புரை செய்ய சென்ற சாட்டை துரைமுருகன் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் குறித்து அவதூறாக பேசினார். முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்து, கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார்.
இதையடுத்து சாட்டை துரைமுருகனுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. திருச்சி காவநிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் அதில் வழக்கு பதியப்பட்டு குற்றாலத்திற்கு குளிக்க வந்த சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அதன்பின் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து கலைஞரைப் பற்றி இழிவாக பாடல் பாடிய நாம் தமிழர் கட்சியின் சாட்டை முருகனை கைது செய்து தனக்கு நெருக்கடி தருவதாக குற்றம் சாட்டிய சீமான், அதே பாடலை நான் பாடுகிறேன் ; என்னை கைது செய்துப் பாருங்கள் என்று மிக ஆவேசமாக சவால் விடுத்தார்.
சீமான் பேச்சு - திமுக கோபம்: சீமானின் இந்த ஆவேசம் திமுக தொண்டர்கள் முதல் சீனியர்கள் வரை ரசிக்கவில்லை. அமைச்சர்கள் சேகர் பாபு, கீதா ஜீவன் போன்றோர் சீமானின் பேச்சைக் கண்டித்தனர். திமுகவை அரசியல் ரீதியாக யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் ; அதற்கு நாம் பதிலடி தருவோம்.
ஆனால், தலைவர் கலைஞரை சீமான் இழிவாக பேசுவார் , முடிந்தால் கைது செய்து பார்னு தெனாவெட்டாகப் பேசுவார். இருந்தும் நாம் சும்மா இருந்தால் எப்படி ? அந்த ஆள் தான், கைது செய் கைது செய்யுன்னு சொல்லுறாரே? கைது செய்து சட்டத்தின் வலிமையை நாம் காட்ட வேண்டும். அதனால், கலைஞரை இழிவாகப் பேசிய அந்த நபரை கைது செய்யுங்கள்.
இல்லையெனில், தொண்டர்கள் ஆவேசப்படுவதை தடுக்க முடியாது. அப்படி ஆவேசப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகும் என்று தங்களின் கோபத்தை திமுக மா.செ.க்களும், மாவட்ட நிர்வாகிகளும். அறிவாலய த்துக்குத் தெரியப்படுத்தி வருகிறார்கள். இதே கருத்தைத்தான் மூத்த தலைவர்களும் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அப்போது, அவர்களிடம், திமுகவுக்கு நான் தான் போட்டின்னு சொல்லி அரசியல் லாபம் பார்க்க நினைக்கிறாரு அந்த நபர் (சீமான்). அதற்கு நாம் இடம் கொடுக்கணுமா? என்று சொல்லியிருக்கிறார். அதற்கு சீனியர்கள், சீமானுக்கு எதிராக ஆக்சன் எடுக்கலைன்னா, இதே மாதிரி பாஜககாரனும் பாமககாரனும் வேறு நபர்களும் பேசுவதற்கு துணிச்சல் வரும். அதை எப்படி தடுக்க முடியும்? என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். இதனையடுத்து யோசிக்கத் தொடங்கியிருக்கிறாராம் ஸ்டாலின். மேலும், அதிகாரிகளிடம் இது பற்றி விவாதித்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications