பிரபாகரனை சந்தித்தாரா? சீமானை எப்படி நம்புறீங்க? NTK நிர்வாகிகளிடம் NIA கேட்ட கேள்விகள் என்ன? லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மேலும் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தான் என்ஐஏ அதிகாரிகள் நாம் தமிழர் நிர்வாகிகளிடம் கேட்ட கேள்விகள் என்ன? என்பது பற்றிய விபரத்தை சீமான் வழங்கி உள்ளார்.

கடந்த 2ம் தேதி நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தென்காசி உள்பட 10க்கும் அதிக இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

 Is Seeman met with Prabhakaran? How you are belived him? NIA raises question on Naam Tamilar executives

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன், ஐடி விங்க் நிர்வாகி ரஞ்சித் குமார், முருகன் உள்பட மேலும் சிலரது வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஜெர்மனியில் வசித்து வரும் சீலன் என்பவருடன் இவர்கள் பேசியதும், இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதும் தெரியவந்தது.

அதாவது கடந்த 2022ல் சேலம் மாவட்டம் ஓமலூரில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையின்போது அவர்களுக்கும், ஜெர்மனியில் உள்ள சீலன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதேபோல் நாம் தமிழர் நிர்வாகிகளும் சீலனுடன் பேசியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

என்ஐஏ விசாரணைக்கு சம்மன் அனுப்பி அழைத்ததன் பேரில் சாட்டை துரைமுருகன் உள்பட 4 நிர்வாகிகள் ஆஜராகினர். கடந்த 5ம் தேதி இவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணைக்கு பிறகு நிர்வாகிகள் சீமானை சந்தித்து கேட்கப்பட்ட கேள்விகள் பற்றிய விஷயங்களை பகிர்ந்தனர். இந்நிலையில் தான் நாம் தமிழர் நிர்வாகிகளிடம் என்ஐஏ அதிகாரிகள் கேட்ட கேள்விகள் பற்றிய விபரங்களை சீமான் பகிர்ந்துள்ளார்.

தந்தி டிவிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது சீமான் கூறியதாவது: எனக்கும், எனது கட்சிக்கும் பல ஆயிரம் கோடி அங்கும் இங்கும் வருகிறது என கூறினார்கள். இப்போதும் வருமான வரி, அமலாக்கத்துறை வராமல் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை ஏன் சோதிக்க வருகிறது. இதனை எளிதாக கடந்து போய்விட வேண்டும். ஏனென்றால் ஓமலூரில் கைதானவர்களின் செல்போன் ஆய்விலேயே சீலனுடன் பேசியது தெரிந்து இருக்கும். ஆனால் உடனடியாக விசாரிக்காமல் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலுக்கு 2 மாதம் இருக்கும்போது என் தம்பிகளிடம் விசாரிப்பது ஏன்?.

விசாரணைக்கு சென்ற என் தம்பிகளிடம் என்ஐஏ என்ன கேட்டார்கள்? என நினைக்கிறீர்கள்.. சீலன் தெரியுமா? சீலன் தெரியுமா? என மாற்றி மாற்றி கேட்டுள்ளனர். மேலும் சீமானை எப்படி நம்புகிறீர்கள்? சீமான் உண்மையிலேயே ஈழத்துக்கு சென்று தலைவரை (பிரபாகரன்) சந்தித்தாரா? நீங்கள் இங்கு பேசுவதன் மூலம் அங்குள்ளவர்கள் எழுச்சி கொள்கிறார்களே எப்படி? என்பது போன்ற கேள்விகளை கேட்டுள்ளனர். என்ஐஏ எந்த அரசை காக்க போராடுகிறது. இலங்கை அரசை காக்க நினைக்கிறதா?. நாங்கள் கருத்து புரட்சியை தான் செய்கிறோம். இருப்பினும் பாஜகவின் ‛பி' டீம் நாங்கள் இல்லை என்பதை என்ஐஏ அதிகாரிகள் நிரூபித்துள்ளனர்'' என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+