அவரே வரட்டும்.. எடப்பாடியை சந்திக்க போகும் சீமான்.. நெருங்கி வந்துட்டாங்களே,. அப்போ திமுக?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விரைவில் நாம் தமிழர் சீமான் சந்திக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதிமுகவில் இதற்கான காய் நகர்த்தல்கள் நடந்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
திமுகவிற்கு அடுத்த டெஸ்ட்டாக விக்கிரவாண்டி தேர்தல் நடைபெற உள்ளது. விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அடுத்த 1 மாதம் தேர்தல் தேதிகள் நடைமுறையில் இருக்கும்.

வேட்புமனு தாக்கல் : ஜூன் 14 - 21 முடிந்துவிட்டது.
வேட்புமனு பரிசீலனை : ஜூன் 24
வேட்புமனு திரும்பப்பெற : ஜூன் 26 இன்றோடு கடைசி நாள்
வாக்குப்பதிவு : ஜூலை 10
வாக்கு எண்ணிக்கை : ஜூலை 13
மும்முனை போட்டி: இங்கே பாமக, நாம் தமிழர், திமுக போட்டியிடுகிறது. மும்முனை போட்டி நிலவும் நிலையில், அதிமுக ஆதரவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார். அதன்படி, கட்சி ஆரம்பிக்கும் முன்பு ஜெயலலிதாவை ஆதரித்து.. அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். இலங்கை போர் நடந்தது. என் சொந்தங்களை கொன்ற கூட்டத்திற்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ், திமுகவை எதிர்த்து அதிமுகவிற்கு ஆதரவு அளித்தேன். அதன்பின் 2011 தேர்தலில் மீண்டும் அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்தேன். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பிரச்சாரம் செய்தேன்.
2014ல் மீண்டும் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். எந்த பிரதி பலனும் எதிர்பார்க்கவில்லை. பணம் வாங்கவில்லை. உண்டியல் குலுக்கித்தான் பிரச்சாரம் செய்தேன். இப்போது நாங்கள் விக்கிரவாண்டியில் நாங்கள் நிற்கிறோம். அதிமுக ஆதரவை கேட்கிறோம்.
நம்முடைய பொது எதிரி திமுக. அப்படிப்பட்ட பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறோம். திமுக என்ற நச்சுமரத்தை வீழ்த்த வேண்டும் . அதற்கு எளிய பிள்ளைகள் எங்களை ஆதரித்து எங்களுடன் நில்லுங்கள். நான் உங்களுக்கு நின்று உள்ளேன். இந்த ஒரு தேர்தல் நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். அதிமுக இந்த தேர்தலில் நிற்கவில்லை.
அப்படி இருக்க அதிமுக எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அதிமுகவின் ஆதரவு எங்களுக்கு கொடுக்கலாம். எங்களின் வேட்பாளர் அபிநயாவிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். 2026ல் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். அப்போது அரசியல் எப்படி மாறும் என்று பார்க்கலாம். இது சாதாரண இடைத்தேர்தல்தான். இந்த தேர்தலில் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள், என்று சீமான் வெளிப்படையாக கேட்டுள்ளார்.
அதிமுக புறக்கணிப்பு: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் சீமான் அதிமுக ஆதரவை கேட்டுள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் சீமான் தம்பிகள் சிலர் இன்று அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்திற்கும் சென்று ஆதரவு தெரிவித்தனர் . சென்னையில் எடப்பாடி உண்ணாவிரதம் செய்து வருகிறார். கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதி மறுத்தது, சபை காவலர்கள் மூலம் சட்டசபையில் இருந்து வெளியேற்றம் செய்து கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள உத்தரவை கண்டித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியை கண்டித்தும் திமுக அரசுக்கு எதிராக இன்று சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
நெருக்கம்: இதற்கு நேரில் போய் நாம் தமிழர் ஆதரவு தெரிவித்தனர். இதன் மூலம் இரண்டு தரப்பும் நெருக்கம் ஆகிவிட்டனர்.
இந்த நிலையில்தான் அதிமுக கூட்டணி வேண்டுமானால் எடப்பாடியிடம் நேரடியாக சீமான் பேசுவதே சரியானது. அவர்கள் நேரில் சந்திக்க வேண்டும். பொது எதிரி திமுகவை வீழ்த்த ரெடியாக இருக்க வேண்டும். மேடைகளில் பேசாமல் சீமான் நேரடியாகவும் பேச வர வேண்டும். அதுவே ஒரே வழி என்று அதிமுகவினர் கூற தொடங்கி உள்ளனர்.
அதோடு அதிமுகவில் இதற்கான காய் நகர்த்தல்கள் நடந்து வருவதாக தகவல்கள் வருகின்றன. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விரைவில் நாம் தமிழர் சீமான் சந்திக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications