ஒடிசா ரயில் டூ பீகார் பாலம்.. அடுத்தடுத்து நடந்த 4 சம்பவங்கள்.. செங்கோல்தான் காரணமா? கிளம்பிய பூதம்!
சென்னை: இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து நடந்த அசம்பாவிதங்களுக்கு செங்கோல்தான் காரணமென்று இணையத்தில் நெட்டிசன்கள் சிலர் புகார் வைக்க தொடங்கி உள்ளனர்.
ஒடிசா ரயில் விபத்து இந்திய ரயில்வே விபத்துகளில் மிகப்பெரிய விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 294 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 300 ஐ தாண்டலாம் என்று கூறப்படுகிறது. 600 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கே இருந்த சரக்கு ரயிலுடன் கோரமண்டல் ரயில் மோதியதில் அடுத்த சில நிமிடங்களில் பெங்களூர் ரயிலும் மோத பயங்கர விபத்து ஏற்பட்டது.

கோரமண்டல் ரயில் மூலம் சென்னை வர முன்பதிவு செய்திருந்தவர்கள் எண்ணிக்கை 869 பேர் ஆகும். இதனால் பலி எண்ணிக்கை, காயம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது மிக முக்கிய ரயில் என்பதால் பலர் இதில் தினமும் பயணம் செய்வார்கள்.
இங்கே முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்தவர்கள் விவரங்கள் கிடைக்கவில்லை என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அங்கே இரவு முழுக்க அள்ள அள்ள உடல்கள் வந்துள்ளன.
பீகார் பாலம்: இந்த நிலையில் நேற்று பீகாரில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது. அங்கே பாஜக - ஜேடிஎஸ் ஆட்சியில் ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட பாலம் இரண்டாவது முறையாக இடிந்து விழுந்தது. நேற்று பீகாரின் பாகல்பூர் என்ற இடத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இந்த அகுவானி சுல்தங்கஞ்ச் கங்கை பாலம் பீகார் மாநிலம் ககாரியா என்ற இடத்தில் ரூ.1,700 கோடி செலவில் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ககாரியா, அகுவானி மற்றும் சுல்தாங்கஞ்ச் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் கங்கை நதியில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து இருந்தது. இதையடுத்து இரண்டாவது முறையாக அங்கே பாலம் இடிந்து உள்ளது. இதை அங்குள்ள சிலர் தங்கள் கேமராவில் பதிவு செய்துள்ளனர். பாலத்தின் இரண்டு பகுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து இடிந்து விழுவது அதில் பதிவாகியுள்ளது.
டெல்லி நிலநடுக்கம்: இந்த அசம்பாவிதங்களுக்கு இடையில் நேற்று டெல்லியில் மாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 2.7 என்ற அளவில் மிக சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும் டெல்லியின் பல்வேறு பகுதிகள் நிலநடுக்கத்தால் கடுமையாக குலுங்கின.
சமீபத்தில்தான் மத்திய பிரதேசத்தில் பாஜக அரசால் ரூ.856 கோடியில் கட்டப்பட்டு மோடியால் திறந்துவைக்கப்பட்ட கோயில் சிறு புயலுக்கே சின்னாபின்னமானது. மகாகல் லோக் என்ற பெயரில் கட்டப்பட்டு வந்த கோவிலில் இருந்த சிலைகள் எல்லாம் சிறு புயலுக்கே சின்னாபின்னமானது.

அதிலும் அங்கே இருந்த சிவன் சிலையின் தலை உடைந்தது பெரிய சர்ச்சையானது. இந்த நிலையில்தான் செங்கோலால்தான் இப்படி நடப்பதாக சில நெட்டிசன்கள் போஸ்ட் செய்துள்ளனர். செங்கோல் வைச்ச 48 நாள் குள்ள நில நடுக்கம்/நில சரிவு / கடல் உள்வாங்குதல்/ சுனாமி /புயல்/பெரும் வெள்ளம் போன்ற பெருஞ்சீற்றத்திற்கு வாய்ப்புள்ளது.
செங்கோல் வந்த பின்புதான் அசம்பாவிதங்கள் நடக்கின்றன.. இதெல்லாம் செங்கோல் எபெக்ட் என்று நெட்டிசன்கள் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்., சமீபத்தில்தான் டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட 1947-ம் ஆண்டு செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. அதற்கு முதல்நாள் நடந்த நிகழ்வில் பிரதமர் மோடியிடம் செங்கோலை ஒப்படைத்தனர் ஆதீனங்கள்.
இதையடுத்து தமிழ்நாட்டு ஆதீனங்கள் புடைசூழ, திருமறை முழங்க செங்கோலை புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு கொண்டு சென்றார் பிரதமர் மோடி. அதன்பின் தமிழ்நாட்டு செங்கோல் முன்பாக நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து வணங்கினார் பிரதமர் மோடி .
#செங்கோல் 😷 https://t.co/xTYgEQ7L51 pic.twitter.com/151FhxvpQ2
— Er.NithanKrish B.E., (@iam_nithankrish) June 4, 2023
பூஜைக்கு பின் புதிய நாடாளுமன்றத்தில் லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டின் 1947-ம் ஆண்டு செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி. செங்கோல் நிறுவிய பின்னர் தமிழ்நாட்டு ஆதீனங்களிடம் தலைவணங்கி ஆசீர்வாதம் பெற்றார் பிரதமர் மோடி. அப்போது பிரதமர் மோடி மிகவும் பக்திமையமாகவும் காணப்பட்டார்.
அதன்பின் புதிய நாடாளுமன்றத்தில் கல்வெட்டுகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. அதோடு புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டுமான பணியாளர்களை சிறப்பித்தார் பிரதமர் மோடி. இதை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் சர்வ மதத் தலைவர்கள் பிரார்த்தனை நடைபெற்றது.
நிறைவு பெற்ற திறப்பு விழா: டெல்லியில் ரூ21,000 கோடியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு 2020-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்துடன் கூடிய செயலகமான சென்ட்ரல் விஸ்டா திட்டம் 2019-ல் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
"மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வருது".. லோக்சபா தொகுதி 816 ஆக அதிகரிக்க மத்திய அரசு தீவிரம்.. பிளான் ரெடி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications