உள்ளே வந்த பெரியார் போட்டோ! அடித்து ஆடும் செங்கோட்டையன்! பெரிய முடிவு எடுத்துட்டாரு? அப்போ எடப்பாடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா புகைப்படங்களுடன் பெரியார் புகைப்படத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வைத்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் பயணத்தில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுச்சிப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். மேற்கு மண்டலத்தில் இருந்து இந்த பயணம் தொடங்கி உள்ளது. இந்த பயணம் கிட்டத்தட்ட அதிமுக + பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் பயணமாக அமைந்துவிட்டது. இரண்டு கட்சிகளும் நெருக்கமாகும் அளவிற்கு பயணத்தில் பல முக்கியமான சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன.

Edappadi Palaniswami

செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி மோதல்

இந்த பயணத்தில் அதிமுக டாப் மாஜி அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். கடம்பூர் ராஜு, முன்னாள் சபாநாயகர் தனபால் ஆர்.காமராஜ், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வருகின்றனர். அதிமுகவினர் மட்டுமன்றி பாஜகவினரும் கூட இந்த நடிப்பயணத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். உதாரணமாக பாஜகவின் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எல்.முருகன் ஆகியோர் இந்த பயணத்தில் கலந்து கொண்ட வருகின்றனர்.

ஆனால் மாஜி அமைச்சர் செங்கோட்டையன் இந்த பயணத்தில் கலந்துகொள்ளவில்லை. இத்தனைக்கும், அவர் கோபிசெட்டிபாளையத்தில்தான் இருக்கிறார். வீட்டில்தான் இருக்கிறார். மாலை மாலை சில நிகழ்வுகளுக்கு கூட செல்கிறார். ஆனால் செங்கோட்டையன் கலந்து கொள்வது இல்லை. சமீபத்தில்தான் தனக்கு நெருக்கமானவர்களுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஹெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் ஆலோசனை நடத்தியிருக்கிறார் செங்கோட்டையன். அந்த ஆலோசனையில், "திமுகவுக்கு வந்திடுங்களேன். உங்களுக்கான அங்கீகாரத்தை திமுக உங்களுக்குக் கொடுக்கும். நீங்கள் வந்தால் எனக்கு ரொம்ப சந்தோசம்னு என்னிடம் சொன்னார் முதல்வர்.

ஆனால், இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை. காலம் எப்படி நகர்கிறதின்னு பார்ப்போம்னு மட்டும் சொல்லிட்டு வந்தேன். திமுகவுக்கு போனால் அமைச்சர் பதவி கிடைத்தாலும் கிடைக்கக்கூடும். ஆனா, சசிகலாவும் தினகரனும் 'தேர்தலுக்குள் அதிமுக நம் கைக்கு வந்துடும். நீங்கதான் பொதுச்செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர். அதனால் எந்த அரசியல் முடிவையும் எடுக்காதீர்கள்னு சொல்றாங்க. நானும், அது தான் சரின்னு நினைக்கிறேன்" என்று செங்கோட்டையன் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

மனம் திறக்க போகும் செங்கோட்டையன்

கடந்த ஆறு மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன் டெல்லி சென்ற அவர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை இருமுறை சந்தித்தார். அப்போதே அவர் பாஜகவில் இணையவுள்ளார் என்ற பேச்சுக்கு வழிவகுத்தது. இடையில் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்றும் பேச்சுக்கள் வந்தன.

இந்த நிலையில்தான் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், "வரும் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மனம் திறந்து பேசப் போகிறேன். என்ன பேசப் போகிறேன் என்பதை அறியப் பொறுத்திருங்கள்" என்று கூறி உள்ளார். அவரது இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த பரபரப்பிற்கு வலுசேர்க்கும் விதமாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா புகைப்படங்களுடன் பெரியார் புகைப்படத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வைத்துள்ளார். பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில், பாஜகவை சீண்டும் விதமாக பெரியார் புகைப்படத்தை செங்கோட்டையன் பயன்படுத்தி உள்ளதால், அவர் திமுக அல்லது தவெக பக்கம் செல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+