டெல்லியில் ரூ.2500 ஆக உயரும் மகளிர் உரிமை தொகை! தமிழ்நாட்டிலும் உயருகிறது? என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, டெல்லியில் உள்ள பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி பல முக்கியமான திட்டங்களை அறிவித்து வருகிறது.

'பியாரி திதி' யோஜனா திட்டத்தின் கீழ், ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.2,500 வழங்குவதாக காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் செய்தது போல் பெண்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்தது. இதே திட்டத்தை இன்று பாஜகவும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி 2100 ரூபாய் வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது.

tamil nadu government notification ration magalir urimai thogai

தமிழ்நாட்டில் உயரும்:

இதனால் தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தமிழ்நாட்டில் வழங்கப்படும் தொகை அடுத்த வருடம் பட்ஜெட்டில் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன. இந்த வருடம் அதற்கு வாய்ப்பு இல்லை.. நிதி நிலைமை காரணமாக சிக்கல் ஏற்படலாம். 2026ம் வருடம் தேர்தலுக்கு முன் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

மகளிர் உரிமை தொகை திட்டம் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாநிலங்களில் எல்லாம் 1500 ரூபாய் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு முன்னோடி தமிழக அரசுதான். ஆனால் தமிழ்நாட்டில் ரூ.1000 தான் வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் வழங்கப்படும் தொகை அடுத்த வருடம் பட்ஜெட்டில் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.

தமிழ்நாட்டில் 2026ல் நடத்தப்படும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து.. எதிர்க்கட்சிகள் வழங்க போகும் வாக்குறுதிகளை மனதில் வைத்து ஆளும் திமுக அரசு தொகையை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மகளிரை உரிமை தொகை விரிவாக்கம்:

ஏற்கனவே புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு 3 மாதத்தில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இனி புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்தால்.. அந்த விண்ணப்பங்கள் ஏற்க முடியுமா என்ற கேள்விக்கு தமிழ்நாடு சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். யாருக்கும் விடுபடாமல் எப்படி மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியுமோ அப்படி வழங்கி வருகிறோம்.

எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ விதிகளுக்கு உட்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் 3 மாதத்தில் ₹1,000 உரிமைத்தொகை தரப்படும் என்று சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

மகளிர் உரிமை தொகை:

ஏற்கனவே முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதற்கான அறிவிப்புகள் வரலாம் என்று கூறப்படுகிறது .

வேறு சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை, அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தில் இப்போது என்று இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள்,.

மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். இப்போது செய்ய முடியாது என்றாலும் அடுத்த சில நாட்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+