ஜனநாயகன் கடைசி படம் கிடையாது? அடுத்த படத்திற்கான கதையை கேட்க தொடங்கிய விஜய்? என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் ஒரு பக்கம் அரசியலில் தீவிரமாக இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அடுத்த படத்திற்கான கதையையும் கேட்க தொடங்கிவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய் நடிக்கும் 69வது மற்றும் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போட்டோ வருமான வரித்துறை ரெய்டு சமயத்தில் எடுக்கப்பட்ட அவரின் பிரபல போட்டோவை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. அதே போட்டோவை அடிப்படையாக வைத்து இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டு உள்ளது.

https tamil oneindia com news tiruppur what-to-do-if-there-is-a-problem-in-receiving-the-central-government-installment-tiruppur-collector-704431 html

இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் மீண்டும் வர வேண்டும். சினிமாவில் நடிக்க வேண்டும். சினிமாவிற்குள் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும்.. விஜய் முடிவால் தமிழ் திரையுலகிற்கு பெரிய சிக்கலாகிவிட்டது..முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் விஜய்.. என்று அவரின் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அரசியல் இருக்கட்டும்.. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் துணை முதல்வர் ஆன பின்பும் கூட சினிமாவில் நடிக்கிறார். அடுத்த படத்தில் கூட அவர் சைன் செய்துள்ளார்.

அதிலும் பவன் கல்யாண் நடிக்கும் அடுத்த படம் 2 பாகங்களாக வருகிறது. விஜய் அப்படி நடிக்க வேண்டும். அதுவே தமிழ் சினிமாவிற்கு நல்லது. விஜய் முடிவால் தமிழ் திரையுலகிற்கு பெரிய சிக்கலாகிவிட்டது.. இதனால் தனது முடிவை விஜய் மாற்றிக்கொள்ள வேண்டும்.. அவர் ரிட்டையர் ஆக கூடாது என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

விஜய் தொடர்ந்து ஆக்டிங்

இந்த் நிலையில்தான் நடிகர் விஜய் ஒரு பக்கம் அரசியலில் தீவிரமாக இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அடுத்த படத்திற்கான கதையையும் கேட்க தொடங்கிவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க உள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் 2026-ல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சமீபத்தில் ஒரு சர்வே எடுத்துள்ளது. அந்த சர்வேயின் ரிசல்ட்டுகள் விஜய்யின் த.வெ.க.வுக்கு மிகப் பெரிய ஆதரவை தருவதாக இருக்கின்றன.

வெற்றிப் பெறும் இடங்கள், சதவீதம், மண்டல வாரியாக ஆதரவு, பெரும்பான்மை சாதிகளின் ஆதரவு என அனைத்திலும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகியவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிற வகையில் அந்த சர்வேயின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

சர்வே முடிவுகள்

இந்த சர்வே முடிவுகள் கடந்த 4 நாட்களாக சோசியல் மீடியாக்களிலும், பத்திரிகை மற்றும் ஊடகங்களிலும் பதிவாகியுள்ளது. சமூக ஊடகங்களில் த.வெ.க. தரப்பினர் பரப்பி வருகின்றனர். இது திமுக, அதிமுக இரு தரப்பையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறதாம். இதனை அடுத்து இரு கட்சிகளின் ஐ.டி. விங்குகளும் இந்த சர்வேயின் பின்னணி குறித்து துப்பறிந்து வருகிறது.

முதல் கட்டமாக, மும்பையில் அப்படி ஒரு நிறுவனம் இருக்கிறதா? ஆன் லைன் சர்வேவா? மக்களிடம் பேலட் பேப்பர் கொடுத்து எடுக்கப்பட்டதா? ஆன் லைன் சர்வே எனில் அதன் உண்மைத் தன்மை என்ன? என்பது குறித்தெல்லாம் ஆராயப்படுகிறதாம். சர்வேயில் சொல்லப்பட்ட பல முடிவுகள், சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அரசியல் விமர்சகர்களிடத்தில் இருக்கிறது.

விசாரணை

வன்னியர் சமூகத்தில் பாமகவுக்கு செல்வாக்கு இல்லாத போலவும் திமுக அதிமுகவை கடந்த த.வெ.க.வுக்குத்தான் பெரும்பான்மை ஆதரவு இருப்பது போலவும் காட்டப்படுகிறது. வன்னியர் சமூகத்தில் பாமகவுக்கு செல்வாக்கு இல்லை என சொல்வதை திமுக, அதிமுக தலைமையே நம்பாது என்கிற நிலையில், வன்னியர்களிடம் விஜய்க்கு அமோக ஆதரவு இருப்பதாகச் சொல்வதுதான் சர்வேயின் மொத்த முடிவுகள் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இதற்கிடையே, இந்த சர்வே போலியானது என்றும், கணிசமான தொகை த.வெ.க.. தரப்பிலிருந்து செலவிடப்பட்டு சோசியால் மீடியாக்களில் வரவழைத்துள்ளனர் என்றும் திமுக தரப்பில் கண்டறியப்பட்டுள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+