பட்டென திருப்பியடித்த செல்வப்பெருந்தகை.. கையெழுத்து யார் போட்டது.. விழித்த பாஜக -அதிமுக.. கூல் திமுக

செல்வப்பெருந்தகை, மின்கட்டண உயர்வுக்கு அதிமுக தான் காரணம் என்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்கட்டண உயர்வுக்கு திமுக மீது பாஜக குற்றச்சாட்டை வைத்து போராட்டம் நடத்தி கொண்டிருந்தால், இதற்கெல்லாம் காரணம் அதிமுகதான் என்று காங்கிரஸ் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளது.

Recommended Video

    Cylinder விலை உயர்வுக்கு BJP, ADMK போராட்டம் நடத்துமா? Senthil Balaji கேள்வி! *Politics

    திமுக தேர்தல் வாக்குறுதியில் 2 மாதம் மின் கட்டணம் என்பதை ஒரு மாதமாக கொண்டு வரப்படும் என்று கூறியிருந்த நிலையில், இப்போது மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

    இதற்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன..
    மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரி வருகின்றன.

     பெரிய விளக்கம்

    பெரிய விளக்கம்

    இதற்கு பலமுறை செந்தில்பாலாஜி விளக்கம் தந்திருந்தார்.. தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் கடன் ஏதும் வழங்கக்கூடாது என மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளதால்தான், பொதுமக்களுக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்கனவே விளக்கம் தந்திருந்தார்.. ஆனால், இதை பாஜக, அதிமுக மறுத்து வருகின்றன.

     பழி போடுவதா?

    பழி போடுவதா?

    மத்திய அரசின் நிர்பந்தத்தால் மின் கட்டணம் உயர்த்தியதாக கூறும், திமுக அரசு பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து மின் கட்டணத்தை உயர்த்திவிட்டது என்றும், மத்திய அரசின் மானியத்தை ஏற்றுக்கொள்ளாமல் தனியாரிடம் அதிக விலையில் வாங்கி தற்போது நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக்கூறி மின் கட்டணத்தை உயர்த்தி விட்டது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைக்கிறது.. தாங்கள் தப்பித்து கொள்ள பாஜக அரசு மீது பழியை போடுவது சரியல்ல என்றும் காட்டமாக கூறி வருகின்றன.

     திருப்பியடித்த காங்கிரஸ்

    திருப்பியடித்த காங்கிரஸ்

    இந்த மின்கட்டண உயர்வை கண்டிடத்து, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும், இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இதே குற்றச்சாட்டை முன்வைத்து அதிமுகவும் வரும் திங்கட்கிழமை போராட்டத்தை அறிவித்துள்ளது... ஆனால், மின்கட்டண உயர்வுக்கு அதிமுகதான் காரணம் என்று காங்கிரஸ் திருப்பியடித்து வருகிறது.. இன்றுகூட இதுகுறித்து செல்வப்பெருந்தகை எம்எல்ஏ செய்தியாளர்களிடம் பேட்டி தந்துள்ளார்.. அப்போது அவர் சொன்னதாவது:

     எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    "மின்கட்டண உயர்வை மக்கள் தாங்கும் நிலையில் இல்லை,.. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது மத்திய அரசின் உதய்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அதில் கையெழுத்திடவும் மறுத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு உதய் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தோடு அதற்கு கையெழுத்துமிட்டனர். இதனால் மாநில உரிமை பறிபோனதோடு எந்தவிதமான கடனும் வாங்க முடியவில்லை. நீட் தேர்வு, உதய்திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அப்போதைய அதிமுக அரசு ஆதரவு தெரிவித்தது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டதுக்கு முழுக்க முழுக்க அதிமுகதான் காரணம்.

     சபாஷ் பாராட்டு

    சபாஷ் பாராட்டு

    கள்ளக்குறிச்சி மாணவியை எங்கள் வீட்டு பிள்ளையாக பார்க்கிறோம்... முதல்வர் ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அப்போது சரியான நடவடிக்கை எடுத்தார்... இது தொடர்பாக பெரிய வன்முறைகள் நடந்தபோதும் போலீசார் துப்பாக்கி சூடு உள்ளிட்டவை நடத்தாமல், நிலைமையை சரியாக கையாண்டனர்... இதற்காக போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்.. மாணவியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+